இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, September 5, 2009

கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்! -ஹபீபா பாலன்








கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்!


-ஹபீபா பாலன்

சீனா சமதர்மத்தின் தாயகம் என்றும், கம்யூனிசத்தின் தொட்டில் என்றும், மதச்சார்பற்ற தத்துவத்தின் மகோன்னத பூமி என்றும் சிலாகித்துக் கொண்டு திரிந்தவர்கள் அனைவரும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை அவர்களுக்கு வந்திருக்கிறது.

சீனா பல பத்தாண்டுகளுக்கு முன்பு தலைநகர் பெய்ஜிங்கில் உரிமைகளுக்காக முழக்கமிட்ட ஏராளமான மாணவர்களை அரச வன்முறையின் மூலம் கொடூரமாக நசுக்கியது. ஏராளமான மாணவர்களின் கதி என்னவாயிற்று என்பதே இன்னும் தெரியாத நிலையில், மாணவர்களின் உற்றோரும் பெற்றோரும் கதறும் நிலை இன்றுவரை நீடிக்கிறது.

திபெத் மக்களின் உரிமைகளை நசுக்கி சீனா தன்னை ஒரு வெகுஜன விரோத சக்தி என்பதைத் தொடர்ந்து நிலை நாட்டி வந்தது.

இவற்றுக்கும் மேலாக, 60 ஆண்டு காலத்திற்கு முன்பு சுதந்திர நாடாகத் திகழ்ந்து முழுவதும் முஸ்லிம்களையே பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு துர்க்மினிஸ்தானைக் கைப்பற்றி அடிமைப் படுத்தி வந்தது. முஸ்லிம்களின் பாரம் பரியப் பெருமை மிகுந்த அப்பகுதிக்கு 'ஜின்ஜியாங்' என்று பெயரிட்டு முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தையும் அழித்தது.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்த சீனா, கனிம வளங்களிலும், அணு சக்தியிலும், இயற்கை வளங்களி லும் சிறப்புடன் விளங்குகிறது. பெட்ரோலியம் லி இயற்கை எரிவாயு வளங்களிலும் சீனா முன்னிலையில் இருப்பதற்கும், செல்வ வளம் கொழிப்பதற்கும் ஜின்ஜியாங் மாகாணம் என அழைக்கப்படும் கிழக்கு துர்க்மினிஸ்தான் பகுதியே முக்கியக் காரணம் என்பதும் வரலாறாகிவிட்டது.

வெறும் பூச்சி பல்லிகளை உணவாகக் கொண்டு வாழ்ந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களாக வாழ்ந்த சீனர்களின் நிலை உலகம் மறக்க முடியாத உண்மையாக கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி, கிழக்கு துர்க்மினிஸ் தான் இணைந்த பிறகு வளம் கொழிக்க ஆரம்பித்ததன் நன்றியை மறந்த சீன அரசின் கொடுஞ்செயல் சமீபகால சரித்திரமாகும்.

ஹான் இன மக்களை அதிக அளவில் குடியமர்த்தி, ஜின்ஜியாங் என்ற கிழக்கு துர்க்மினிஸ்தான் மக்களின் உரிமைகளை நசுக்கிய சீனாவின் இழிசெயல் மேலும் தொடர்வதோடு, தேவையற்ற செயல்களி லும் சீனா தனது மூக்கினை நுழைத்து வருகிறது.

அத்துடன், நெருப்போடு விளை யாடும் விபரீத விளையாட்டினை சீனா தொடங்கியுள்ளது. இந்தியாவின் இறை யாண்மைக்கும், ஒற்றுமைக்கும் சவால் விடுக்கும் ஓர் அடாத செயலை சீனா செய்துள்ளது. அது, ஒட்டுமொத்த இந்தியர் களின் மீது தொடுக்கப்படும் போராகவே நாம் கருதலாம்.

சீன அரசின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் தனது விஷம வேலையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவுடனான உறவு எவ்வாறு சீரழிந்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தில் அந்த சீன அரசு வலைதளம் விஷமத்தனமாகக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா லி பல்வேறு மாநிலங்களாக சிதறடிக் கப்பட வேண்டும், 20 நாடுகளாக துண் டாடப்பட வேண்டும், துண்டாடப்பட்ட பகுதிகள் தனி நாடுகளாக்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், நாகலாந்து, தமிழ்நாடு, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் தனி நாடுகளாக சிதறடிக்கப்பட வேண்டும் என்று தனது வக்கிர ஆசையை வலை தளம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது சீனா. அதற்கு இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மறைமுகமாக உதவ வேண்டும் என்று படுபயங்கரமான, முட்டாள்தன மான, கீழ்த்தரமான தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறது சீனா.

அண்டை நாடு, உடைந்து சிதற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத் தியதன் மூலம் சீனா உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இந்தியாவைக் குறித்து தனது இழிகருத் தைத் தெரிவித்த சீனா அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அரசியல் முக்கியத் துவம் மிகுந்த இலங்கையில் குழப்பத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

இலங்கை, இனவெறிப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் திறந்தவெளி அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு அவதியுறு கின்றனர். அப்பாவி மக்களின் அவல நிலை தீர்க்க நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எதிரொலித்து நிற்கும் நிலையில், சீனாவின் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் உள்ளது.

சீனா, மதவெறியை ஊட்டும் பௌத்த மடாலயங்களுக்கு நிதி உதவியை வாரி வழங்கி வருகிறது. 691 பௌத்த மத பள்ளிக் கூடங்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது. இலங்கையின் முக்கிய பௌத்த மடாலங்களும் ராஜ பக்ஷே போன்ற வர்களை வார்த் தெடுத்த கேந்திரங் களாக விளங்கும் மல்வெத்தை, அஸ்கிரியா, அமர புரா மற்றும் ரமயனா என்ற நான்கு கேந்தி ரங்களிலும் ஏராள மான பௌத்த மத குருமார்களை சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் ஏராள மாக வழங்கிவரும் சீனா, மதரீதியாகவும் உதவி வரும் விஷ யம் வெளியானதால் உலக அளவில் சீனா விற்கு வக்காலத்து வாங்கி உலாவந்த காம்ரேடுகள் கடுப்பில் ஆழ்ந்துள்ள னர். செஞ்சீனம், ஆரஞ்சு சீனம் என அடை மொழியிட்ட அவர்கள், மக்கள் சீனம், மண்ணாங்கட்டி சீனம் என நீட்டி முழக்கிய இவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இது போதாதென்று, இலங்கையில் ஹம்பன்டோட்டாவில் ஒரு மெகா துறை முகம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சி யில் சீன அரசு இறங்கியுள்ளது. தலைநகர் கொழும்பிற்கு அருகே சீன முதலீட்டாளர் களுக்கு என்றே சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று விரைவில் திறக்கப்பட இருக் கிறதாம். சீனாவின் இனவெறி ஜின்ஜியாங் விவகாரத்தில் அம்பலமா கியது. அந்நாட்டின் மதவெறி இலங்கை விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. சீனா வின் விஷமத் தனம் வலைதளத்தில் இந்தியாவை சீண்டும் விதமாக தொடங்கியிருக்கிறது. மொத்தத்தில் சீன தேசத்தின் முகமூடி சீன பெருஞ்சுவர் நீளத்திற்கு கிழிந்து தொங்குகிறது.

No comments:

Web Counter Code