இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, September 5, 2009


போலி ஏவுகணைகள் விற்பனை இந்தியாவை ஏமாற்றிய இஸ்ரேல்!

கிழக்காசியாவின் வளர்ந்துவரும் வல்லரசான இந்தியாவின் ராணுவ ஆயுதங்களின் திறன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய ஆயுதங்களின் புதிர், வெடிக்கத் தவறும்குண்டுகள், அதிநவீன உபகரங்களைப் பெறுவதற்காக அந்நிய நாடுகளிடம் கொட்டியழுத கோடிகள் என ராணுவ வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் கவலை அளிக் கக்கூடியதாக உள்ளது. எவராலும் முறிய டிக்க முடியாத திறன் படைத்த நம் பாதுகாப்புத் துறையிலா இந்நிலை? என்ற அதிர்ச்சி அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று இந்த அதிரவைக்கும் உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது.


இந்திய விமானப் படையில் இடம் பெற்றுள்ள பல ஏவுகணைகள், சக்திமிகுந்த குண்டுகள் அனைத்தும் சரியான இலக்கை நோக்கிச் சென்று அழிக்கும் திறன் உடையவை அல்ல. குறிப்பாக இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட ஹார்பி ஏவுகணை, இலக்குகளைக் குறிவைப்பதில் சொதப்பும் திறனுடையது. ஆனால் இந்த ஏவுகணைக்கான ஆன செலவு 750 கோடி ரூபாய்.


பாப்பிபா செண்ட் என்ற ஏவுகணை யின் விலை 350 கோடி ரூபாய்கள். இது தரைப் பகுதியிலிருந்து விண்ணை நோக்கிப் பாய்ந்து எதிரியின் இலக்கை அழிக்க வேண்டும். ஆனால் இந்த ஏவுகணை ஆரம்பக்கட்ட சோதனைக்கு கூட உட்படுத்தப்படவில்லை என்பது வேதனை. இதன் இறக்கைகள் சரியான முறையில் வடிவமைக்கப்பட வில்லையாம்.


போர்க் கப்பலுக்கு எதிராக ஏவப்பட்டு இலக்கைத் தாக்க வேண்டிய கடல் கழுகு என்ற ஏவுகணை 120 கோடி ரூபாய் மதிப் புடையது. அது நெடுங்காலம் செயல் படக் கூடியதல்ல என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆன்டி ரேடியேஷன் ஏவுகணைகள் பல சரியான உதிரி பாகங்கள் இல்லா மையால் குறட்டை விட்டுத் தூங்குகின்றன. இவை அனைத் தும் ரஷ்ய தொழில்நுட்பத்தின் கைங்கர்யம்.


சிட்டா ஃபால் என்ற கொத்து குண்டுகள் 450 கிலோ மீட்டர் துரித வேகத்தில் செல்ல வேண்டும். அவையும் முழுமையாக பயன் படும் நிலையில் இல்லை என்றும், அதன் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


இந்தியக் கப்பல் படையின் கடல் கழுகின் திறன் குறைந்த நிலை என்பது சிறிய பிரச்சினைதான், அவை விரைவில் சரிசெய்யப்படும் என இந்தியக் கப்பற் படை தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்தார்.
உலகின் அநேக நாடுகள் ஆயுத தயாரிப்பில் இறங்கியிருக்கும் நிலையில், நாம் பிற ஏஜென்சிகளை நம்பியதன் விளைவு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகி இருக்கக்கூடும் என்று தளபதி சுரேஷ் மேத்தா தெரிவித்தார்

No comments:

Web Counter Code