இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, September 5, 2009

உலகின் அவமானச் சின்னம் -அபூசாலிஹ்

உலகின் அவமானச் சின்னம்

-அபூசாலிஹ்
அமெரிக்க அதிகார வர்க்கத்தினரால் இந்தியப் பிரபலங்கள் அவமதிக்கப் படுவது வாடிக்கையாகி வருகிறது.

தங்கள் நாட்டில் நுழைவதற்கு முன்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் என அமெரிக்க அதிகார வர்க்கம் மனிதர் களின் தகுதி அறியாது தன்மானத்திற்கு இழுக்கு நேரும் வகையில் நடந்துகொள் வது வேதனைக்குரிய ஒன்றாகும்.

இந்தியாவின் பிரபலங்கள் அவமதிக் கப்பட்டுவரும் தொடர் நிகழ்வில் இப்போது இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திர மான ஷாருக்கான அவமானப்பட்டிருக் கிறார்.

நியூ ஜெர்சியில் உள்ள நியார்க் விமான நிலையத்தில் (நியூயார்க் அல்ல) அமெரிக் கக் குடியுரிமை அதிகாரிகளால் இரண்டு மணி நேரம் சிறை பிடிக்கப் பட்டிருக் கிறார்.

இந்த நிகழ்வு இந்திய அரசியல் தலைவர்களாலும், மும்பை பட உலகத் தினராலும் கடுமையான கண்டனத்திற்கு இலக்கானது. இந்திய அரசு, தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத் திடம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட தோடு தனது சீறலையும் வெளிப்படுத் தியுள்ளது.

ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானம் குறித்து தான் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்பதாக டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதர் திமோதி ரிவோமர் தெரிவித்தார். ஷாருக்கான உலகப் புகழ்பெற்ற கலைஞர், அவரை வரவேற்க அமெரிக்கா எப்போதும் தயாராக இருக்கிறது என்றார். முன்னதாக, தான் சிறை வைக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு மனம் வெதும்பிய ஷாருக்கான், தான் இனி அமெரிக்காவில் கால்வைக்கப் போவதில்லை என தெரிவித்ததற்கு தாஜா செய்யும் விதமாக அமெரிக்கத் தூதர் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 63வது விடுதலை நாள் தொடர்பான விழாவுக்காக குறிப்பிட்ட நடிகர் அமெரிக்காவுக்குச் சென்றார். அவரது சுதந்திரத்திற்கு இடையூறு செய்யும் விதமாகவும், உரிமைக்கு ஊறு செய்யும் விதமாகவும் அவர் மீது அவமானச் சேறு வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. அவமானத் தில் சுருண்டுவிட்ட அந்த திரையுலகப் பிரபலத்தை அவமானத்திலிருந்து மீட்டு இரண்டு மணி நேர கேள்விக்கணை டார்ச்சரிலிருந்து மீட்டவர் ராஜீவ் சுக்லா என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர். அவர்தான் அமெரிக்க அதிகாரி களிடமும், இந்திய தூதரகத்திடமும் பேசி, கிட்டத்தட்ட விடுதலையை(!) வாங்கிக் கொடுத்தவர் என முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நடிகர் பெயரின் பின்பகுதியான 'கான்' என்பதுதான் அமெரிக்க குடியுரிமைத் துறை கம்ப்யூட்டரின் அலறலுக்கு காரண மாக அமைந்துள்ளது. 'கான்' என்ற வாசகம் சந்தேகத்துக்குரிய ஒரு சொல்லாகக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது.

ஏதோ ஒரு நடிகரைச் சுற்றி நிகழ்ந்த ஒரு செய்தியில் நாமும் ஈடுபாடு காட்ட வேண்டிய அவசியம் உடனடியாக வந்தது.

கடும் பதட்ட சூழ்நிலைக்குப் பின் கசப்பான உணர்வுகளுக்குப் பின் விடுவிக்கப் பட்ட ஷாருக்கான், ''எனது அமெரிக்க வருகைப் பற்றி கடுமையான கேள்வி களால் துளைத்தெடுக்கப்பட்டேன்'' என்றார்.

''என்னுடைய லக்கேஜ்கள் அணுஅணு வாக சோதனையிடப்பட்டன. நான் சமீபத்தில் கூட அமெரிக்காவுக்கு வந்திருக் கிறேன். என்னுடைய பெயர் கான். தெற்காசிய சமூகம் என்ற அமைப்பு இந்திய விடுதலை நாள் தொடர்பாக எனக்கு அழைப்பு விடுத்திருந்ததால் இங்கு வந்திருக்கிறேன். இங்கு எனக்கு பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்திருக்கும் நண்பர் களைத் தொடர்பு கொள்ள அனுமதி தாருங்கள் என்று கேட்டதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது'' என்று கூறி கான், அடுத் துக் கூறிய வார்த்தைகள் அணுகுண்டு ரகத்தைச் சார்ந்தவை.

''நான் குறிவைக்கப்பட்டேன். காரணம் நான் ஒரு முஸ்லிம் என்பதும், எனது துணைப் பெயர் 'கான்' என்பதும்தான்'' என கோபக் குமுறலுடன் செய்தியாளர்களிடம் பேசி முடித்திருக்கிறார். அதோடு விட்டாரா? ''எனது பாதுகாப்பாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவரது பெயரின் கடைசியிலும் 'கான்' உள்ளது'' என்றார்.

இவ்வாறு கூறிய ஷாருக்கான், ''எனது பாதுகாப்பாளரை என்னோடு வர அனுமதி யுங்கள். நான் எங்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செல்கிறேன்'' என கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

இதுகுறித்து மும்பைப் படவுலகின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநரு மான கரன்ஜோஹர் கூறும்போது, ''எனது உயிர் நண்பர் கானுக்கு நேர்ந்தது அதிர்ச் சியையும் அயர்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளது. ஷாருக்கானை நடத்திய விதம் கொடூரமானது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால் தான்'' என்று தனது உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளது.

இதுபோன்ற செயல்கள் நிறவெறி நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றியதைப் போலாகும் என பாலிவுட் கலைஞர்கள் எச்சரித்துள்ளனர். செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா போன்ற நாடுகளை இஸ்லாம் ஃபோபியா என்ற நோய் பிடித்தாட்டு கிறது. முஸ்லிம்களை வேறுபடுத்திப் பார்க்கும் இந்த செயலை நாம் அனுமதிக் கக் கூடாது என பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான மகேஷ்பட் கூறுகிறார்.

ஷாருக் அவமானப்படுத்தப்பட்டது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதது, சகித்துக்கொள்ள முடியாதது என இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச் சர் அம்பிகா சோனி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர், கவுரி என்ற பிற சமய சகோதரியை திருமணம் செய்துகொண்டவர், முஸ்லிம் களின் பிரச்சினைகளைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர் என பல்வேறு சிறப்புகளுக்கு(!) உரிய ஷாருக் கானுக்கு அவர் முஸ்லிம் என்பதாலேயே அவமானம் நேர்ந்துள்ளது விநோத மாகவே உள்ளது. இவர்கள் என்னதான் 'எம்மதமும் சம்மதம்' என நீட்டி முழக்கி னாலும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கு தாசானுதாசர்களாக காட்டிக் கொண்டாலும் இவர்கள் சார்ந்த சமயம், இவர்களது இயற் பெயர் ஆதிக்க சக்திகளுக்கு அச்சுறுத்தும் ஒன்றாகவே உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் முஹம்மது குட்டி என்ற மம்மூட்டி, அமெரிக்க மண்ணில் அவமானப்படுத்தப் பட்டார். அவர் அவமானப்பட்டதற்கு முக்கியக் காரணம் அவரது பெயரில் உள்ள இஸ்மாயில் முஹம்மது குட்டி என்பதுதான் முக்கியக் காரணம் என்பது அப்போதே சமூகநல ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

சமீபத்தில் இந்திய எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக விளங்கிய வரும் இந்திய ஏவுகணை இயலின் வித்தகரும் இந்திய அணு விஞ்ஞானத் தின் தந்தையாக போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய மண்ணிலேயே அமெரிக்க அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டார். அவரது காலணி)று) களையும், காலுறைகளையும் கழற்றி சோதனை செய்யப்பட்டது. அப்போதும் கண்டனங் கள் எழுந்தன. ஆனால் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் என்ற அவரது பெயர்தான் அவரை சோதனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி விட்டது என்பதை யாரும் அப்போது சுட்டிக் காட்டவில்லை.

ஆச்சரியப்படும் விதமாக ஷாருக் விஷயத்தில் விம்மிப்புடைத்து எரிமலை யாக இஸ்லாம்ஃபோபியாவில் நடுநடுங்கும் அமெரிக்கத்தனம் பற்றிய குமுறல் வெளிப்பட்டிருக்கிறது.

ஒபாமாக்கள் என்னதான் இஸ்லாமிய உலகில் சென்று 'அஸ்ஸலாமு அலைக் கும்' என்று கூறி தன் நாட்டின் தவறு களுக்காக தன்னிலை விளக்கம் அளித் தாலும், ஒவ்வொரு மில்லி மீட்டரி லும் பரவி இருக்கும் இனவெறி, மதவெறி, நிறவெறி துவேஷங்களை அடியோடு அழிக்க சூளுரைக்க வேண்டும்.

இது ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்கா அல்ல என்பதை நிலைநாட்ட ஒபாமா மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டிருக் கிறார். இருப்பினும் அடிமட் டத்தில் உள்ள சில்லறைகள், பிற்போக்குத் தனத்தின் மொத்த உருவமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. தனது கடந்தகால தவறு களிலிருந்து பாடம் கற்காத அமெரிக்கா, உலகின் அவமானச் சின்னம் என அழைக்கப்படும் நேரம் விரைவில் வரக்கூடும்.

No comments:

Web Counter Code