இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007

குஜராத்:போலி என்கவுண்டர் படுகொலைகள் ரத்த வெறி தீராத மோடி அரசு



குஜராத்தில் அப்பாவி ஒருவரை என்கவுண்டர் எனும் பெயரில் படுகொலை செய்த ரத்த வெறி பிடித்த மோடி அரசின் அராஜகம் அம்பலமாகியுள்ளது.
முஸ்லிம்களின் ரத்தம் குடிக்கும் மோடி அரசின் மற்றொரு அரச பயங்கரவாதம் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளது.
சங்பரிவார் வெறி இயக்கங்களைத் தூண்டி 2002 பிப்ரவரியில் ஆயிரக்கணக் கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று தீர்த்த மோடி அரசு உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு இலக்கானது.
பெஸ்ட் பேக்கரி நெருப்பு படுகொலைகள் போன்ற வழக்குகளின் உலுக்கும் உண்மைகள் வெளியாயின. தற்பொழுது போலி என்கவுண்டர் எனும் பெயரால் மோடி கும்பலின் அரசப் பயங்கரவாதத் தின் கோர முகம் வெளிப்பட்டுள்ளது.
2005 நவம்பர் 26 ஆம் தேதியன்று குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு படையின் உயர் அதிகாரியும் சேர்ந்து ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொன்றதாகவும் அவரது பெயர் ஷெôராப்தீன் என்றும் லஷ்கர்லிஇலி தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த அவர் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டு வந்ததாகவும் அதனைத் துப்பு துலுக்கி (!) என்கவுண்டர் மூலம் அந்த தீவிரவாதியை சுட்டுக்கொன்றதாகவும் குஜராத் அரசின் தீவிரவாதத் தடுப்புப் படை அறிவித்தது.
என்கவுண்டர் படுகொலைகள் என்றால் ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடும். அரசுகள், ஏதோ வீர தீரச் செயல்களை காவல்துறை அதிகாரிகள் செய்து விட்டதாக பூரித்துப்போய் விருதுகளையும், பண முடிப்புகளையும், பதவிகளை யும் வழங்குவார்கள்.
இதில் கடுமையான முறைகேடுகளும், இரக்கமற்ற மனித விரோதச் செயல்களும் நடந்ததாக மனிதநேய ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தாலும் பாராமுகமாகவே அரசுகள் இருந்தன.
சமீபத்தில் காஷ்மீரில் நிகழ்ந்த போலி என்கவுண்டர் படுகொலைகள் அம்பலத் திற்கு வந்தது. கட்டுப்பாடும் கடமையுணர்வும் மிகுந்த இந்திய பாதுகாப்பு;த் துறை யிலும் இரக்கமற்ற மனித மிருகங்கள் நடமாடிய தகவல்கள் அடுத்தடுத்து வெளிவந்து நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.
அப்பாவி காஷ்மீர் மக்கள் படுந்துயரங்களை எண்ணியெண்ணி வேதனையில் வெம்பித் துடித்து, வடித்த கண்ணீரின் ஈரம் காய்வதற்குள் குஜராத் போலி என் கவுண்டர் படுகொலைகள் குறித்த உலுக்கும் உண்மைகள் வெளியாகி, நடுநிலையாளர்களின் நெஞ்சங்களி, நெருப்பினை அள்ளிக் கொட்டி விட்டதைப் போல் ஆகிவிட்டது.
ஷெôராப்தீன் என்ற அப்பாவி முஸ்லிமை என்கவுண்டர் எனும் பெயரில் வஞ்சமாய் கொன்று தீர்த்த குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் படை பிரிவின் இயக்குனர் வன்சரா, தீவிரவாதத் தடுப்புப்படை பிரிவின் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புக் காவல்படையின் அதிகாரி தினேஷ் குமார் ஆகிய மூவரும் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜ்குமார் பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.

தற்பொழுது இந்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரி களுக்கு இந்தப் போ­ என்கவுண்டர் படுகொலையில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
நவம்பர் 22, 2005ல் ஷெôராப்தீன் ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் சங்க்லிக்கு அவரது மனைவியுடன் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகளும் சீருடை அணியாத மற்றொரு மர்ம நபரும் கடத்திச் சென்று கொன்று விட்டதாக ஷெôராப்தீனின் சகோதரர் ருபாப்தீன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்றம் முறையான விசாரணை மேற்கொள்ளும்படி குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
நடந்தவை அனைத்தும் என் கவுண்டர் என்ற பெயரில் நடந்த படுகொலைகளே என குஜராத் மாநில சிஐடி பிரிவு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
வன்சரா மற்றும் பாண்டியன் என்ற இரு காவல்துறை அதிகாரிகளும் (போலி என்கவுண்டர் கொலையாளிகள்) உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத் திற்கு அழைக்கப்பட்டு டி.ஜி.பி முன்னிலையில் கைது செய்யப்பட்டனர்.
இது அரசியல் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்ட படுகொலை என மனித உரிமைப் போராளி தீஸ்தா செதல்வாட் குற்றம்சாட்டுகிறார்.
அதிகாரி வன்சரா, முதலமைச்சர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் அதுவே அவருக்கு எல்லையற்ற துணிச்சலைக் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
சிறிதும் இரக்கமின்றி, சட்டம் நியாயம் பேண வேண்டும் என்ற பொறுப்பின்றி தார்மீக நெறியை வீசி எறிந்து போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்திய மோடி அரசின் காவல்துறை உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் ஹிட்லர் மோடியின் கோரமுகம் உலகின் முன் வெளிச்சத்திற்கு மீண்டுமொருமுறை வந்துள்ளது.
இந்தப் படுகொலைகளுக்காக மோடியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க பாரதிய ஜனதா தயாரா? (காமெடி பண்ணாதீங்கப்பா..) என குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத் சோலங்கி தெரிவித்தார்.
மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இத்தகைய போலி என்கவுண்டர் படுகொலைகள் நடந்து வருகின்றன. தன்னை ஒரு வீரமிக்க கதாநாயகனாக காட்டுவதற்காக இத்தகைய செயல்களை இழைப்பதாக குஜராத் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மொதவாடியா தெரிவித்தார்.
போலி என்கவுண்டர் படுகொலைகள் குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என இடது சாரிகள் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக நாடாளுமன்றதில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதனை காங்கிரஸ் வலிமொழிந்தது. தற்பொழுது சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் நிகழ்ந்த 6 என்கவுண்டர் படுகொலைகள் குறித்த விவரங்களை காங்கிரஸ் வெளியிட்டது. அக்டோபர் 2002ல் நிகழ்ந்த என்கவுண்டர் படுகொலை களிலும் மோடிக்கு நெருக்கமான காவல்துறை இயக்குநர் வன்சரா சம்பந்தப் பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலில் உள்ளது.
சமீர்கான் பதான் என்ற 30 வயது இளைஞர் ஒரு போலிஸ்காரரை கொன்றதாகக் கூறியும், பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதாகக் கூறியும் என்கவுண்டர் எனும் பெயரில் கொன்று தீர்த்துள்ளனர்.
இதுவரை 21 என்கவுண்டர் படுகொலைகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மது சூதனன் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இதற்கு வேர் காரணமாக விளங்கும் முதலமைச்சர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாமீதும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலி என்கவுண்டர் படுகொலைகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வந்ததை தற்போது மோடிக்கு நெருக்கமான அதிகாரிகள் கைது செய்யப்பட்டதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஷெôராப்தீனோடு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அவர் மனைவி கவுசர் பீவியின் கதி என்னவாயிற்று? என்பது குறித்து மோடி அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட ஷெôராப்தீன் ஷேக் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் மாவட்டத்தின் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக ஷெôராபுதீனின் தாயார் ஜைபுன்னிசா பீவி இருந்து வருகிறார்.
ஷெôராப்தீனை இப்போதும் ஒரு கிரிமினைலைப் போல் பல ஊடகங்களில் சித்தரிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு ஜரானியா கிராமத்தின் கிணறு ஒன்றிலிருந்து ஏகே,36 மற்றும் ஏகே, 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. காவல் துறையின் சந்தேகப் பார்வை முதல்முறையாக ஷெôராப்தீன் மீது விழுந்தது. பின்னர் அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார்.
ஷெôராப்தீன் விவகாரத்தில் காவல் துறையினர் எவ்வாறு காட்சிகளை போலியாக கட்டமைத்து சுட்டுக் கொன்றனர் என்பதையும் திருடிய வாகனத்தில் அவரது தடயங்களை பதித்து விட்டு அநியாயமாக ஷெôராபுதீனை படுகொலை செய்த சதிச் செயலையும் காவல்துறை அதிகாரி ராஜ்குமார் பாண்டியனின் அந்தரங்க உதவியாளர் அஜய் பர்மர் விவரிக்கிறார்
'என்னை எனது மேலதிகாரி ராஜ்குமார் பாண்டியன், ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தின் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான விடுதியில் தங்குமாறு உத்தர விடுகிறார். உண்மையில் அது காவல்துறை உயர்அதிகாரி பாண்டியன் பெயரில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான அறை புக் செய்யப்பட்டிருக்கிறது.நவம்பர் 22 ஆம் தேதிக்கு சரியாக புக் பண்ணப் பட்டிருக்கிறது. பர்மர், அஹமதாபாத்துக்கு நவம்பர் 23 ஆம் தேதி பாண்டியனின் டிக்கட்டிலியே திரும்புகிறார். அதே நாளில் ஷெôராப்தீன் ஹைதராபாத்தி­ருந்து, 180 கிலோமீட்டர் தூரமுள்ள டன்டோலா கிராமத்துக்கு அருகில் சொகுசு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்து அவரை அஹ்மதாபாத்துக்கு தனது குவாலிஸ்காரில் ராஜ்குமார் பாண்டியன் கடத்திக் கொண்டு செல்கிறார்.
காவல்துறையைச் சேர்ந்த குரு தபாள் சிங் ஜாட்டின் டாடா சுமோ கார், குவாலிஸை தொடருகிறது. நவம்பர் மாதம் 22லி23 தொடங்கும் வேளை ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளின் உதவியுடன் மும்பைலிபெல்காம்லிபகுதி, ஹைதராபாத்லி மும்மை நெடுஞ்சாலையின் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது.
ஷெôராப்தீன் பயணம் செய்யும் பேருந்து நிறுத்தப்படுகிறது. நள்ளிரவு 1.30 மணி. சீருடை அணியாத ஆயுதம் ஏந்திய மூன்று பேர் அந்தப் பேருந்தில் ஏறுகின்றனர். டார்ச் லைட் அடித்து பேருந்தில் உள்ள ஒவ்வொரு பயணியையும் உற்று நோக்குகின்றனர்.
'கிடைத்துவிட்டான்' என உற்சாக மிகுதியில் கத்துகிறார் ஒருவர், டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருவரை பேருந்துக்கு வெளியே இழுக்கிறார்கள். அவர் பெயர் பிரஜாப்தி, மற்றொருவரை இழுத்து வருகிறார்கள் அவர் பெயர் ஷெôராபுதீன், அடுத்து தரதரவென இழுத்து வருகிறார் கள். பர்தா அணிந்த கவுசர் பீவி தன்னோடு வருவதைப் பார்த்து ஷெôராப் தீன் கத்துகிறார் நீ வராதே உள்ளே போ!. ஆனால் கவுசர் பீவி கணவனைப் பிரிய மனமில்லாது பிடிவாதமாக உடன் செல்கிறார்.(இதை உடன் பயணம் செய்த ஷரத் அப்தி கூறினார்)
அஹ்மதாபாத்தில் சோக்சிங் யாதவ் என்பவர் மோட்டார் பைக்கை காணவில்லையே எனத் தவிக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து அவரது மோட்டர் பைக் படத்துடன் ஒரு செய்தி வருகிறது. லஷ்கர்லிஇலிதொய்பா தீவிர வாதி, குஜராத் முதல்வர் மோடி உள்பட முக்கிய புள்ளிகளை சுட்டுக்கொல்ல வந்த போது, அவனின் முயற்சி முறியடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்டதாக காவல்துறையினர் வெளியிட்ட தகவலையும், அதற்கு அருகில் தனது பைக்கை, கண்ட ஷோக் சிங் யாதவ் அதிர்ச்யில் உறைந்தார்.
சதீஷ் சர்மா என்பவரிடம் ஊருக்கு வெளியே ஒரு பண்ணை வீடு, உடனடியாக தேவை என காவல்துறை உத்தரவிடுகிறது.
காந்தி நகரின் ஜமியத் புராபகுதியில், தனது நண்பர் கிரிஷ் பாட்டிலின் தோட்டத்து வீட்டை போலிஸ்காரர் களுக்கு என்று ஒதுக்கிக் கொடுக்கிறார். நவம்பர் 24 ஆம் தேதி இரவு ஷெôராபுதீனும், கவுசர் பீவியும் கொண்டு செல்லப்படுகின்றனர் என சிஜடி போலிஸாரிடம் சதிஷ்சர்மா தெரிவிக்கிறார்.
நவம்பர் 26 ஆம் தேதி சரியாக 10 மணிக்கு கவுசர் பீவி தனது கணவர் தோட்டத்து வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்படுவதை பார்க்கிறார். ஒரு மணிநேரத்தில் ஷெôரபுதீன் என் கவுண்டர் என்னும் பெயரில் படுகொலை செய்யப்படுகிறார்.
இது உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் குஜராத் சிஐடி போலீஸாரின் வழியாக வெளிவந்த உண்மை.
கவுசர் பீவியின் கதி என்னவாயிற்றோ என ருபாபுதீன் பதைபதைப்புடன் வேதனையுடன் உச்சநீதிமன்றதில் முறையீடு செய்ய கவுசர் பீவியும் கொல்லப் பட்டிருக்கலாம் என குஜராத் அரசு, நீதிமன்றத்தில் பதில் அளித்திருக்கிறது.
என்கவுண்டர் என்னும் பெயரில் 21 படுகொலைகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாக, மேலும் போலி எண்கவுண்டர் படுகொலைகள் தொடர்பாக பல காவல்துறை அதிகாரிகள் விசாரணை வளைத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் ஆட்சிகாலத்தில் அனைத்து சம்பவங்களுக்கும் விரிவான விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை கள் நாடெங்கும் எதிரொலித்து வருகின்றன.
மோடியின் 'ஒப்பந்த கொலைகாரர் களாக' கருதப்படும், மோடிக்கு நெருக்கமான காவல் அதிகாரிகளால் நடத்தப்பட்ட 15 போலி என்கவுண்டர் படுகொலைகள் குறித்து, விசாரணை நடத்தப்படவேண்டும் என மோடிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர் நளின்பட், சித்தார்த் பர்மர் மற்றும் ரமீலா தேசாய் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராஜஸ்தானில் ஒரு ஹிந்துத்துவ பிரமுகரோடு ஷெôராபுதீனுக்கு ஏற்பட்ட மோதலால் ஷெôராபுதீனை தீர்த்துக் கட்ட வேண்டும் என ராஜஸ்தான் மாநிலத் தி­ருந்து சதித்திட்ட கால அட்டவணை குறிக்கப்பட்டிருக்கலாம் என தீஸ்தா செதல்வாட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். குஜராத்தில் அப்பாவி முஸ்லிகளின் உயிர்கள் பறிக்கப்படுவது அன்றாட நடவடிக்கைப் போன்றே மாறிவிட்டது.
கவுசர் பீவியின் கதி குறித்து ஷெôரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்தார் அல்லவா? கவுசர் பீவி கொல்லப்பட்டிருக்கலாம் என குஜராத் அரசு கூறியுள்ளது. தங்களுக்கும் அந்த கொடூர சம்பவத்துக்கும் தொடர்பே இல்லாததைப் போல அரசின் பதில் இருந்தது.
கவுசர் பீவி படுகொலை குறித்த திடுக்கிடும் தகவல்கள் விசாரணையின் போது வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட தீவிரவாதத் தடுப்புப் படையின் அதிகாரிகள், கவுசர் பீவியின் படுகொலை குறித்து விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். கவுசர் பீவி கொல்லப்பட்டு அவர் உடல் எரிக்கப்பட்டது. அவர் உடலை எரிப்பது தெரியாமல் இருக்க ஏராளமான மரத்துண்டுகள் மரக்கட்டையிலிருந்து வாங்கப்பட்டன.
ஷெôரப்தின் கொல்லப்பட (26 நவம்பர் 2005) இரண்டாவது நாள் (நவம்பர் 28, 2005) கவுசர் பீ படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் தீவிரவாதத் தடுப்புப் படையின் காரில் கொண்டு செல்லப்பட்டது.
400 கிலோ கிராம் எடையுள்ள மரக்கட்டைகள் டிம்பர் டிப்போவில் இருந்து வன்சராவின் சொந்த கிராமமான ஹிம்மத் நகருக்கு டாடாலி407 என்ற வண்டியில் கொண்டு செல்லப்பட்டு, இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள வயல்வெளியில் வைத்து கவுசர் பீவியின் உடல் எரிக்கப்பட்டது.
சாம்பல் கவுசர் பீவியின் வயலிலும் கிணறுகளிலும் தூவக்கப்பட்டன. உடலைக் கொண்டு வந்த 407 வாகனமும் சாம்பலை வீசி எறிந்த கிரேன் (ஜி.ஜெ.9.பிலி4355) (இது கனேஷ் மூவர்ஸ் என்ற நிறுவனத்தை சேர்ந்தது) மற்றும் குவாலிஸ் ஜி.ஜெ.25லி7007 என்ற வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. (இது போர்பந்தர் மீனவருக்கு சொந்த மானது) இந்த வாகனத்தில் தான் ஷெôராப்தீன் மற்றும் கவுசர் பீ கடத்தப்பட்டுள்ளனர்.
உயிரற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முக்கியத் தடயங்களாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மோடி அரசில் உயருள்ள அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்படும் நிலை ஆபத்தான கட்டத்தையடைந்து வெகுநாட்களாகி விட்டது.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், மோடியும்லி குஜராத் உள்துறை அமைச்சரும். மோடியின் நிழலாகவே செயல்படும் அமித் ஷா வையும் மோடியைக் கொல்ல முயற்சி செய்தார்கள் என்று கூறி 13 பேரை கொலை செய்த வன்சாராவுக்கு பக்கபலமாக இருந்த வஞ்சகக் கூட்டத்தையும் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். குஜராத் மாநிலம் முஸ்லிம்களின் ரத்தத்தால் ஈரமாவாது என்றுதான் நிற்குமோ?.

No comments:

Web Counter Code