இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007


சச்சார் அறிக்கை சொல்வது என்ன?அபூசாலிஹ்
தீவிர கண்காணிப்பில் வைத்து பராமரிக்க வேண்டிய அபாய நிலையில் இந்திய முஸ்லிம்களின் நிலை உள்ளது. இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்த சச்சார் கமிட்டியின் முழு அறிக்கையையும் பார்த்தபின் மனிதநேய ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் வேதனையுடன் வெளிப்படுத்திய வாசகங்கள் தான் நாம் மேலே கண்டது.
முஸ்லிம்கள் குறித்து இந்த நாடும், ஏடும் ஏற்படுத்தியிருந்த கற்பிதங்களெல்லாம் கற்பனை என்பதை கடந்த வாரம் சச்சார் கமிட்டி அறிக்கையை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தன் பின்னர் இந்த உலகம் உணர்ந்து கொண்டது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் முகப்பு அட்டை
இந்த நாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்தார்கள், அற்புதமாக நிர்வகித்தார்கள். உள்ளாட்சி முறைகளும், வரிவிதிப்பு முறைகளும் இந்திய மண்ணிற்கு அறிமுகப் படுத்தினார்கள். நாட்டிற்கு ஒரு நிரந்தர ராணுவம் என்பது அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் தான் முதன்முறையாக செயற்படுத்தப்பட்டது. அதுவரை எதிரிநாட்டு மன்னன் படையெடுத்து வருவது தெரிந்தபின் தான் அரண்மனை உப்பரிகையிலிருந்து யுத்த அழைப்பு விடுக்கப்படும். காடுகளில் விறகு பொறுக்கிக் கொண்டி ருந்தவர்களும், பிறவேலைகளில் ஈடுபட்டவர்களும், போட்டது போட்டபடி கிடக்க கையில் கிடைத்த வாள்,வேல்,வில் அம்புகளுடன் போருக்கு ஆயத்தமாவார்களாம். போர் அறிவிப்பு கேட்டவுடன் பயந்து ஓடுபவர்களும் ஏராளம். இத்தகைய நிலையை மாற்றி நிலையான ராணுவம் ஏற்படுத்தினார். கில்ஜி வமிசமன்னன் அலாவுதீன் கில்ஜி. ராணுவத்துக்கு என திடகாத்திர மானவர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். படைக்கலன்கள் தயாரிக்கப் பட்டன, பராமரிக்கப்பட்டன.
அவ்வாறே முஸ்லிம்களின் ஆட்சியில்தான் நிலங்கள் சர்வே செய்யப் பட்டன. சாலை வசதிகள் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டன. மன்னன் ஷேர்ஷாஹ் வின் ஆட்சி இந்தப் பெருமையை தட்டிச் சென்றது. ஷேர்ஷாவின் ஆட்சியில் தான் 80 வயது மூதாட்டியும் தலைமுதல் கால்வரை தங்க நகைகள் அணிந்து, நடுநிசியிலும் செல்லும் அளவுக்கு ஆட்சியின், பாதுகாப்பின் கூர்மை இருந்ததாக வரலாறு கூறுகிறது. முஸ்லிம் ஆட்சியின் பெருமையும் அருமையும் கூறிக் கொண்டிருக்க காலம் போதாது.
முஸ்லிம்களின் ஆட்சிக்கு முற்றுபெற்ற பின் அன்னியரான ஆங்கிலேயர் ஆட்சி வந்தது.
தாய்நாட்டை காக்க முஸ்லிம்கள் வீறுகொண்டு எழுந்தார்கள். வெஞ்சமரில் விளை யாடும் வீரத்தோள்களுடன் போரிட்டு ஆங்கிலேயரை அதிர வைத்தார்கள். சமுதாயத்தின் விகிதாச் சாரத்தை விட அதிகமாக இந்த நாட்டின் விடுதலைக்காக தங்கள் உடல் பொருள் ஆவியை தியாகம் செய்தார்கள்.
நரித்தனமூளை கொண்ட வெள்ளைக்காரர்கள் நயவஞ்சகமாய் சிந்தித்தனர். ஹிந் துக்களையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமையுடன் போராடும் முஸ்லிம்களுக்கு பாடம்(!) கற்றுக் கொடுக்காமல் இருந்து விட்டால் விஷயம் விபரீதமாகி விடும் என ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது இந்தியாவில் இருந்த ஒரு கூட்டமும் சிந்தித்தது. நாசகார கும்பல் கூடிப் பேசியது. இந்திய நாட்டை துண்டாடும் முயற் சிக்கு முன்னுரை எழுதப்பட்டது. காங்கிரஸின் முன்னனி தளகர்த்தராக விளங்கிய வழக்கறிஞர் முஹம்மதலி ஜின்னா தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார்.
முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் இந்திய வடமேற்கு மாகாணங்களில் தனி நாடு கோரிக்கை ஒருமித்து எழுப்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிராந்திய வாதமாக கணக்கெடுக்கப் படாமல் அது மதம் சார்ந்த கோரிக்கையாக பரப்பப் பட்டது. இந்தியா பிளக்கப்பட்டது. காந்தியிடம் மலர்ச்சியில்லை. இந்திய முஸ்லிம் கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந் தனர். ஆங்கிலேயர்களிடமும் இந்தியா வில் சில அதிகார வர்க்கத்தினரிடமும் அளவில்லாத குதூகலம் அவர்களின் மனதை ஆக் கிரமித்தது. ஏற்கெனவே இருந்த இடஒதுக்கீடு சலுகைள் கூட முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டன. அது ஆச்சு அறுபதாண்டுகாலம் இந்திய தேசத்தின் எல்லா சமூக ங்களும் எட்ட முடியாத உயரத்தில் சென்றுவிட அறுபதாண்டுகளாக அதனை அண்ணாந்து பார்த்தபடி காலம் கழிக்கும் அப்பாவி முஸ்லிம் இந்தியன். இவர்களின் வாக்குகளின் வலிமை அறிந்திருந்த அரசியல்வாதிகள் தேனொழுக பேசி ஆட்சிக் கட்டிலைப் பிடித்து பதவிகளில் அமர்ந்தார்கள். பாழாய்போன வாக்குறுதி கள் இவர்களுக்கு பகட்டு பல்லக்குகள் அவர்களுக்கு.
இவர்களின் நிலையை ஆய்வு செய்ய இதுவரை அமைக்கப்பட்ட கமிட்டிகள் தங்கள் ஆய்வுகள் சமர்ப்பிக்காமலும் முழுமையான முறையில் வெளியிடாமலும் இருந்த நிலைக்கு மாறாக நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான பிரதமரின் உயர்மட்டக்குழு முழுமை யான ஆய்வுகளில் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சி யூட்டக் கூடியவை. கல் நெஞ்சங்களையும் கரைய வைக்கக் கூடியது.
இந்திய திருநாடு என்ற எழிலுறு கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் தங்களது கண்ணீராலும், நெந்நீராலும் வார்த்தெடுத்து கட்டமைத்த அந்த திருச்சமூகத் தின் அவலநிலையை சச்சார் ஆய்வுக்குழு விவரிக்கிறது.
2005 மார்ச் 9 உயர்மட்டக் குழுவுக்கு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகம் உத்திரவிட்டது.
நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தலைவராகவும், ஸயீத்ஹமீத், டி.கே.உமன், எம்.ஏ.பாஸித், டாக்டர்.ராகேஷ் பசந்த், டாக்டர் அக்தர் மஜீத் போன்றவர்களை உறுப்பினர்களா கவும், டாக்டர் அபூசாலஹ் ஷரீஃப்லிஐ உறுப்பினர் செயலராகவும் நியமித்து அறிவிக்கப்பட்ட இந்தக்குழு தனது ஆய்வினை மேற்கொண்டது. ஏப்ரல் 21, 2005 அன்று முதல் கூட்டத்திற்குப் பின் கூட்டப்பட்டடு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதமரின் உயர்மட் டக் குழுவான ராஜிந்தர் சச்சார் ஆய்வுக்குழுவுக்கு தங்களுக்கு தெரிந்த, விவரங் கள் தகவல்களை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பின்னர் சச்சார் ஆய்வுக்குழுவின் கோரிக்கை நாடெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாளேடுகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டது.
மத்திய மாநில அரசுகளின் முக்கிய துறைகளின் அதிகாரிகள், அனைத்து மாநிலங்களிலுமுள்ள தலைமைச் செயலாளர்கள் பிற அமைப்புகள் ரிஜிஸ்ட்ரர் ஜெனரல் ஆஃப் சென்சஸ், நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் (சநநஞ) இந்திய தேர்தல் ஆணையம் சிறுபான்மை ஆணையம், பிற்படுத்தப் பட்டோர் ஆணையம், பல்கலைக்கழகங்கள், நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு காவல் துறை இயக்குநர்களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளச் சென்ற போது அந்தந்த மாநில முதல்வர்களையும், அமைச்சரவை சகாக்களையும் இக்குழு சந்தித்தது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, மத்தியப்பிரதேசம், குஜராத், பிகார் மற்றும் மகராஷ்ட்ரா மாநிலங்களுக்கு சச்சார் கமிட்டி விஜயம் செய்து தனது ஆய்வுகளை மேற் கொண்டது.
தமிழ்நாடு, ஜார்கண்ட் மற்றும் லட்சத்தீவுகளுக்கும் சச்சார் குழு தனது ஆய்வு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது எனினும் கடந்த ஆண்டு தமிழகத் தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், லட்சத்தீவுகளில் அப்போது நிலவிய கடுமையான சீதோஷ்னநிலை, ஜார்கண்ட் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆயத்தப் பணிகள் நடைபெற்றது இந்தக் காரணங்களால் மூன்று மாநிலங்களுக்கும் நேரடி ஆய்வுப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை எனினும் தேவையான தகவல்கள் திரட்டப்பட்டன. (இது சச்சார்குழு பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் நாம் அறிந்தது)
15 மாத கால ஆய்வுகளின் முடிவுகளை 12 பகுதிகளாக வகைப்படுத்தி சச்சார் ஆய்வுக்குழு பிரதமரிடம் சமர்பித்தது சிறுபான்மையினரை மேம்படுத்த, நெறிப் படுத்த வேண்டிய அரசின் பொறுப்புகள் பற்றி குறிப்பிடும் இக்குழு ஒரு நாடு பாரபட்சமற்ற முறையில் செயல்படும் அமிலப்பரிட்சை குறித்து கூறுகிறது.
முஸ்லிம்கள் தங்களது உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்து அறியும் உணர்ச்சி இன்றி இருந்திருக்கிறார்கள். நாடு விடுதலைப் பெற்றதிலிருந்தே இந்நிலைதான் தொடருகிறது.
சம வாய்ப்பு இல்லாமை குறித்து அறியாத நிலையில் இருந்த தன்விளைவு அவர் கள் மீதான பாகுபாட்டுக்கு வழிகோலியது. தங்களின் தனித்தன்மையை காப்பாற்ற அவர்கள் போராட வேண்டியதாயிற்று.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கடன் வசதி, வாழ்க்கை கட்டமைப்பு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து 12 அத்தியாயங்கள் விவரிக்கின்றன.
முஸ்லிம்கள் இரண்டு சுமைகளை சுமக்க வேண்டிய நிலையை அடைந்தி ருக்கிறார்கள். முஸ்லிம்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் கூறும் அவதூறு அதே வேளையில் அவர்கள் திருப்தி செய்யப்படுகிறார்கள் என்பதுமாகும்.
முத்திரைக் கருத்துக்கள்
எங்காவது ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் முஸ்லிம் இளைஞர்களை அள்ளிச் செல்லுகிறார்கள், காவல்துறையினர். ஒவ்வொரு தாடி வைத்த மனிதனையும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் என்பதைப் போல பார்க்கப்படுவதால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் வாழவேண்டியுள்ளது. இந்த தேசத்தில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்படுகிறார்கள். குடியிருக்கும் இடங்களிலிருந்து விரட்டப்படு கிறார்கள். குறைவான கல்வி பெற்றுள்ளதால், முறையான உயர்வான வேலை வாய்ப்புகளுக்கு உயர்கல்வி அவசியம் என்பதை அவர்களால் அறியவில்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் குறைந்த அளவே உள்ளன. பாடநூல்களில் முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி கருத்துகள் பரப்பப்பட்டது. ஏழை முஸ்லிம்களுக்கு மதரஸாக் கல்வி மட்டுமே எளிதாகக் கிடைக்கிறது. மதரஸாக்கள் குறித்து வேறுபாடான கருத்துகள் பரப்பப்படுவதால் இது விஷயத்தில் அரசு உடன் கவனம் செலுத்தி மதரஸாக்களை நவீனமயமாக்க வேண்டும். உருது முஸ்லிம்களின் மொழி என்று முத்திரை குத்தப்பட்டதால் அதன் வளர்ச்சி தேக்க நிலை அடைந்தது. முஸ்லிம் மாணவிகளை அதிக அளவு கல்வி நிலையங்களில் சேர்க்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவருவதால் சமூகத்தின் பாதுகாப்பின்மையை உணரும் முஸ்லிம் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுகிறார்கள். தேர்வுக்கு குழுக்களில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை சேர்ப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களில் முஸ்லிம்கள் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். கடன்வசதிகள் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் இவர்களுக்கு மிகவும் குறைவு. முஸ்லிம் பெண்கள் தகுதியான வேலைக்கு போட்டியிட முடியவில்லை. பல வங்கிகளை முஸ்லிம்களை எதிர்மறையாகவும், முஸ்லிம் பகுதிகளை தங்க் ழர்ய்ங் ஆகவும் கருதி கடன் தர மறுக்கிறார்கள். இந்திய ஆட்சிப்பணி ஐ.ஏ.எஸ்.யில் 3 சதவீதமும், ஒஎந ல் 1.8 சதவீதமும் இந்திய காவல் பணியில் 4 சதவீதமும் முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்த முஸ்லிம்களில் 4.9 சதவீத ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். இந்திய ரயில்வேத் துறையில் 4.5 சதவீதமே முஸ்லீம்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 98.7 சதவிகிதத்தினர் கடைநிலை ஊழியர்கள்

No comments:

Web Counter Code