இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007

ஜெருசலம்: அகழ்வாராய்ச்சியில் பள்ளிவாசல் கண்டுபிடிப்புபுனித அல்அக்ஸா

பள்ளிவாசல் வளாகத்தில் அல்மஹ்ரிபா நுழைவாயிலில் இஸ்ரேல் அடாவடியாய் தனது அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது. முஸ்லிம் உலகின் கடும் கண்டனத்தையும் பொருட்படுத்தாது இஸ்ரேல் தனது அடாவடி யைத் தொடர்ந்து வந்தது. அல்அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் மஹ்ரிபா நுழைவாயிலில் தோண்டும் வேலையைத் தொடங்கியுள்ள நிலையில் 11ஆம் நூற்றாண்டில் மாவீரன் சலாஹுத்தீன் காலத்திய தொழுகைக்கூடம் உள்ளிட்ட சிறிய மதரஸா கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அது 2004ல் இஸ்ரேல் அல்மஹ்ரிபா நுழைவாயிலில் தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பிரபல யூத அகழ்வாராய்ச்சி நிபுணர் யுவல்பரோச்சி தெரிவித்துள்ளார். சலாஹுத் தீன் காலத்திய பள்ளிவாசல் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை ரகசியமாகவே வைத்து தனது சதிவேலையை இஸ்ரேல் தொடருவதைக் கண்டு இஸ்லாமிய உலகம் கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளது.
இஸ்ரேலிய அகழ்வாராய்ச்சி நிபுணர் பரோச்சி இதுகுறித்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை தற்போது வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அல்மஹ்ரிபா வளாகத்தில் இஸ்ரேலின் அகழ்வாராய்ச்சி ஓர் உரிமை மீறல் பிரச்சினை எனப் போராடி வரும் நிலையில் சலாஹுத்தீன் காலத்திய பள்ளிவாசல் மற்றும் மதரஸா கண்டுபிடிக்கப்பட்டது இஸ்ரேலின் வாதத்தை வலுவிழக்கச் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, புனித அல்அக்ஸா மஸ்ஜிதை படிப்படியாக பலமி ழக்கச் செய்யும் முயற்சியாகவே இஸ்ரேல் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜெருசலமின் முஃப்தி ஷேக் முஹம்மத் ஹுஸைன் இஸ்ரேலின் அகழ்வாராய்ச்சி முஸ்லிம்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் முயற்சி என தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே இது அகழ்வாராய்ச்சியில் தெரிந்த உண்மை களை இஸ்ரேல் மறைத்திருக்கிறது. பல விஷயங்களை இஸ்ரேல் தொடர்ந்து திட்டமிட்டு மறைத்து வருகிறது. மேற்கு சுவர், அதன் பல பகுதிகள், அதன் வாயில்கள், அந்தப் பகுதிகளின் அழிக்கப்பட்ட பெயர்கள், அதன் கட்டமைப்பு, பிரிக்கப்படாத அல்அக்ஸா அனைத்துமே முஸ்லிம்களுக்கு சொந்தமானது என இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஷேக் ரயீத் சலாஹ் அறிவித்திருக்கிறார். மேற்கு சுவர் அல்அக்ஸாவின் மேற்கு மினாரா வாகும். அதையே யூதர்கள் 'ரஹண்ப்ண்ய்ஞ் ரஹப்ப்' (புலம்பும் சுவர்) எனக் கூறுகிறார்கள். எல்லாமே முஸ்லிம்களுக்கு உரிமையானது என்கிறார் சலாஹ்.
முஸ்லிம்களின் ஆதாரங்கள் அழிக்கப்படுவதின் முதல் முயற்சியே இது என சலாஹ்வின் கண்டனத்தை ஒப்புக் காண்ட இஸ்ரேலின் மற்றொரு பிரபல அகழ்வாய்வு நிபுணர் மீர்மென்டவ், ''இஸ்ரேல் மூன்று ஆண்டுகளாக இந்த விஷயத்தை ஏன் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் ரயீத் சலாஹ் போன்றவர்களுக்கு ஆயுதமாக மாறிவிடுகிறது'' என இஸ்ரேலைக் கண்டித்தார். இதுவரை நடந்த அகழ்வாய்வு விஷயங்களை முறைப்படி அறிவிக்காதது உலக அரங்கில் நமது (இஸ்ரேல்) பெயரை மேலும் மோசமடையவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அல்அக்ஸா பள்ளிவாசலில் தடையை மீறி தொழச் சென்ற பாலஸ்தீன தலைமை நீதிபதி ஷேக் தமிமி கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் மீதான விசாரணை மே 8ஆம் தேதி விசார ணைக்கு வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து உள்நாட்டிலே சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி யான தமிமியின் மீதான விசாரணை மேலும் காலதாமதமாகிக் கொண்டே வருகிறது. விசாரணைகள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தின்படியே நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் நீதிமன்றங் களில் அல்அக்ஸா தொடர்புடைய வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. ஜெருசலம் தொடர்பான விவகாரங்களும் அவ்வாறே.
சர்வதேச உடன்பாடுகள் குறிப்பாக நான்காவது ஜெனிவா கன்வென்சன், ஜெருசலம் நகரை ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்றே குறிப்பிடுகிறது. அதோடு மேற்குக்கரை காஸா பகுதிகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே அறிவித் திருக்கிறது. அல்அக்ஸா பள்ளிவாசலில் நுழைய முழு உரிமை எனக்குண்டு. இந்த உரிமையை உயிர் போகும் வரை ஆதிக்க சக்திகளிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார் பாலஸ்தீன தலைமை நீதிபதியும் அல்அக்ஸாவுக்கான உரிமைக்குரல் எழுப்புபவருமான ஷேக் தய்ஸீர் தமிமி

No comments:

Web Counter Code