இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007

ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் புதிய பள்ளிவாசலை கட்டுவோம்'இஸ்லாத்தைத் தழுவிய கரசேவகர்கள் உறுதி...
ஸப்ரன் ஹபீப்
பாபர் மஸ்ஜித் எனும் இந்தியாவின் 400 ஆண்டு கால பெருமைக்குரிய பள்ளிவாசல் தகர்ப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவர் முஸ்லிமாக மாறியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய உருது இதழான ராஷ்ட்ரிய சஹாரா செய்தி ஏடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் மனப் பூர்வமாக இஸ்லாத்தில் இணைந்த போது அவர்களுக்கு கலிமா சொல்லிக் கொடுத்த மார்க்க அறிஞரின் பேட்டியோடு இச்செய்தியை வெளியிட்டு தகவலை உறுதிப்படுத்தியுள்ளது ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகை.
மனித குலமே வெட்கித் தலைகுனியத்தக்க அந்தக் கொடிய செயலை செய்ய ஆயிரக் கணக்கான கரசேவைக் காலிகள் வெறி கொண்டு பாப்ரி மஸ்ஜிதை நோக்கி புறப்பட்டபோது தர்மேந்திரா, பல்பீர் என்ற இரு இளைஞர்களும் மஸ்ஜிதை மண் மேடாக்கும் ஆவலோடு பாய்ந்து சென்றனர்.
தர்மேந்திரா ஹரியானா மாநிலத்தின் சோனி பட் பகுதியைச் சேர்ந்தவர். பாப்ரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போது மஸ்ஜித்தின் இடிபாடுகளின் மீது சிறுநீர் கழித்தார். சிறிது காலத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறிப் போனார்.
மகனின் மனநிலை பாதிக்கப்பட்டதால் வேதனை உறுத்தலுடன் இருந்த தர்மேந்திராவின் தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவும் தனது மகனையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவும் முடிவு செய்தார்.
இரண்டாவது கரசேவகரான இவரது பெயர் பல்பீர். இவர் ஹரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியைச் சேர்ந்தவர். இவரும் அந்த டிசம்பர்லி6 என்ற தேசத்தின் கறுப்பு நாளில் பாப்ரி மஸ்ஜிதை தகர்த்தவர்களில் ஒருவர்.
கரசேவை செய்யப் போகிறோம் என்றுதான் உச்சநீதிமன்றத்திடமே பொய்யான வாக்குறுதி கொடுத்து அயோத்தி சென்றனர் சங்கும்பல். அவ்வாறே நாட்டின் பெரும்பாலான மக்களும் எண்ணியிருந்தனர். அவ்வாறே பல்பீரின் தந்தையும் எண்ணியிருந்தார்.
1992லிடிசம்பர் 6 சூரியன் மறைவதற்குள் பாபர் மஸ்ஜிதை தகர்த்து இந்தியாவின் பெருமையையும் இருட்டுக்குள் தள்ளிய தேசத் துரோகிகள் குறித்து நாடெங்கும் செய்தி பரவத் தொடங்கியது.
மஸ்ஜிதை இடித்தாயிற்று. மனமகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டார். பல்பீரின் தந்தையார் ஒரு கண்ணியவான். மகனின் செயல் கண்டு கடும் ஆத்திரம் அடைந்தார். கடவுளின் வீட்டை ஏன் இடித்தீர்கள் என சீறித்தள்ளினார். வேதனை பொங்க விளாசினார்.
சிறிது காலம் கழிந்த பின்னர் தீய செயலைக் கண்டித்த தந்தை மரணமடைந்தார். தந்தையின் மறைவைத் தொடர்ந்து பல்பீர் மனசஞ்சலமடைந்தார், நிம்மதி இழந்தார்.மவ்லானா கலீம் சித்திக்கி என்னும் மார்க்க அறிஞரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் ஜமியத் இமாம் வலியுல்லாஹ் என்ற அறக்கட்டளை அமைப்பின் ஆன்மீகப்பணி, கரசேவகர்கள் இருவரையும் அரவணைத்தது.
முதலில் கூறப்பட்ட தர்மேந்திராவும் அவரது தந்தையும் ஜமியத் இமாம் வலியுல்லாஹ் அறக்கட்டளையின் தலைவர் கலீம் சித்திக்கியின் கரம் பற்றி சத்திய தீனுல் இஸ்லாத்தில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மனநிலை சீராகத் தொடங்கி ஆரோக்கிய மனநிலையுடன் வாழ்வதாகவும் ஜனவரி 30 ஆம் தேதி வெளிவந்த ராஷ்ட்ரிய சஹாரா செய்தி குறிப்பிட்டுள்ளது. தர்மேந்திரா உமர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
பல்பீரின் மனவேதனைக்கு அருமருந்தாகவும் இஸ்லாம் மாறியது. மார்க்க அறிஞர் கலீம் சித்திக்கி இவருக்கு கலீமா (உறுதிமொழி) சொல்லிக் கொடுத்து சத்திய தீனுல் இஸ்லாத்தை தழுவ உதவினார். பல்பீர் தற்போது ஆமிர் என அழைக்கப்படுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினமான டிசம்பர் 6 அன்று ஒரு புதிய பள்ளிவாசலை திறப்போம் என ஆமிர் (பல்பீர்) உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஜமிய்யத் இமாம் வலியுல்லாஹ் அறக்கட்டளை சேவையின் விளைவாக ஏராளமானோர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருவதாக தெரிவித்த மவ்லான சித்திக்கு பாரதிய ஜனதாவின் முன்னணித் தலைவரான விஜய் குமார் மல்ஹோத்ராவின் சகோதரரும் தங்கள் அறக்கட்டளை நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தில் இணைந்தார் என்றும் அவரது பெயர் டாக்டர். சயீத் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் சித்திக்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Web Counter Code