இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, May 16, 2007

இஸ்லாத்தைத் தழுவினார் அமெரிக்க மேயர்




இஸ்லாத்தைத் தழுவினார் அமெரிக்க மேயர்அமெரிக்காவில் ஜார்ஜியா மாகா ணத்தில் உள்ள Macon மாநகர மேயர் ஜேக் எல்லிஸ் இஸ்லாமிய நெறியை ஏற்றுக் கொண்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யில் இஸ்லாமிய நெறியினை அவர் ஏற்றுக் கொண்டார்.

மத்திய ஜார்ஜியாவில் உள்ள கிறிஸ் தவர்கள் நிறைந்து வாழும் Macon நகரத்தின் கிறிஸ்தவ மேயர் ஜேக் எல்லிஸ் முஸ்லிமாக மாறியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக அவர் தனது ஜேக் எல்லிஸ் என்ற பெயரை ஹக்கீம் மன்சூர் எல்லிஸ் என சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்து கொண்டார். தனது மனமாற்றம் தற்செயலானதல்ல. தான் கடந்த பல வருடங்களாக திருக்குர்ஆனை ஓதி, அதன்படி நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நான் முஸ்லிமாக மாறியது வியப்பிற்குரியதல்ல. இஸ்லாம் எமது முன்னோர்களின் மார்க்கம் என மகிழ்வுடன் தெரிவித்தார்.

கறுப்பின மக்கள் அமெரிக்க கண்டத்துக்கு அடிமைகளாக ஆப்ரிக்க கண்டத்திலிருந்து கொண்டு வரப் பட்டபோது அவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர். எனவே 'இஸ்லாம் எமது முன்னோர்களின் மார்க்கம்' என ஜேக் எல்லிஸன் ஆக இருந்த ஹகீம் மன்சூர் தெரிவித்தார்.

61 வயதாகும் ஹகீம், ஆப்பிரிக்க வம்சாவழி கறுப்பின சமூகத்தை சேர்ந்தவராவார். அமெரிக்காவின் மதச் சுதந்திரம் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் ஹக்கீம் மன்சூர் எல்லீஸ் தெரிவித்தார்.

தனது மனமாற்றம் குறித்தும் இஸ்லாத்தைத் தழுவிய சம்பவம் குறித்தும் அல்ஜஸீரா ஆங்கில தொலைக்காட்சி சேனலுக்கு நீண்ட நேர்காணலை வழங்கினார்.

அல்ஜஸீரா ஆங்கிலச் சேனலின் வட அமெரிக்க செய்தியாளர் விவியானோ ஹர்டடோவுக்கு அளித்த நீண்ட பேட்டியில் ''வேறுபாடுகளிலிருந்து சகிப்புத் தன்மையிடம் சேர்ந்த புதிய பிறப்பு'' என தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது குறித்து தெரிவித்தார். ஆண்டுகள் பலவாக குர்ஆனைக் கற்றுத் தெளியும் நான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் Macon இஸ்லாமிய சென்டரில் தொழுகை க்கு செல்வதாகக் குறிப்பிட்டார்.

ஏசு - இறைவனின் திருத்தூதர்களில் ஒருவர் என்பதையும், முஹம்மத் (ஸல்) இறைவனின் இறுதித்தூதர் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

மேயர் ஹகீம் எல்லீஸின் மனமாற்றம் குறித்து அதிர்ச்சியடைந்த பிற்போக்கு சக்திகள் மேயரைக் குறித்து அவதூறான செய்திகளை பரப்பத் தொடங்கினர். வாழ்த்துக்களும் குவியத் தொடங்கின.


உலகம் முழுவதும் இருந்து 5000 ஈமெயில்கள் மேயர் ஹகீம் எல்லீஸை மொய்க்கத் தொடங்கின.

ஏராளமான ஈமெயில்கள் மேயரை வாழ்த்தியே அனுப்பப்பட்டன. ஜார்ஜியாவின் மத்தியப் பகுதியிலிருந்து அவருக்கு ஆதரவான தகவல்களே அனுப்பப்பட்டன.

அல்லாஹ், மேயர் எல்லிஸின் அனைத்து செயல்களையும் அங்கீகரித்து அருள் புரிய வேண்டும் என ஸ்வீடனிலிருந்து வந்த ஈமெயில் பிரார்த்தனையுடன் அனுப்பப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டார் எல்லிஸ்.

கொலராடோவிலிருந்து ஈமெயிலில் தகவல் அனுப்பிய எழுத்தாளர் 'எங்கள் நாட்டை விட்டு ஓடு' என்ற வெறித்தனமான கருத்துக்களை புறம் தள்ளியதாகக் குறிப்பிட்ட எல்லிஸ், தன்னை அமெரிக்காவை விட்டு பிரிக்க முடியாது. தனது தேசப்பற்று குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் தெரிவித்ததோடு தான் வியட்நாம் போர்க்களத்தில் அமெரிக்காவுக்காகப் போராடிய முன்னாள் வீரர் என்றும் தெரிவித்தார்.

61 வயதான ஙஹஸ்ரீர்ய் மேயர் ஹகீம் எல்லீஸ் தான் இப்போது மனநிறைவுடன் வாழ்வதாகத் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற அமெரிக்கக நாடாளுமன்றத் தேர்தலில் மிக்சிகனைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கீத் எல்லிசன் முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அமெரிக்க மக்களின் மேம்பாட்டுக்காகவும் அமெரிக்க முஸ்லிம்களின் உரிமைக் காகவும் பாடுபடப் போவதாக கீத் எல்லிசன் சூளுரைத்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் ஏற்கும்போது திருக்குர்ஆனை ஏந்தி உறுதிமொழி ஏற்றார். அமெரிக்க வரலாற்றில் இதுவரை பைபிள் ஏந்தியே அனைவரும் தங்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துள்ளனர். குர்ஆனை வைத்து உறுதிமொழி ஏற்பதை அனுமதிக்கக் கூடாது என நிறவெறியர்கள், மதவெறியர்கள் ஒன்றாக கூக்குரலிட்டனர். எந்த சர்ச்சைகளையும் சலசலப்பையும் கண்டு அஞ்சாத கீத் எல்லிசன் எம்.பி., அஞ்சாத நெஞ்சுரத்துடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் திருக்குர்ஆனுடன் நுழைந்தார். பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆர்ப்பாட்டம் செய்த ஷைத்தான் தற்காலிகமாக வாய் மூடினான். இது கடந்த மாதத்தின் நிகழ்வு.

பிப்ரவரி மாதம் ஙஹஸ்ரீர்ய் மாநகர மேயர் ஜேக் எல்லிஸ் இஸ்லாமிய நெறியை ஏற்று ஹக்கீம் மன்சூர் எல்லிஸாக தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

மேயர் எல்லிஸ் 1999 ஜூலையில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் 176 ஆண்டு களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பின மேயராக எல்லிஸ் அறிவிக்கப் பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

18 ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்க இஸ்லாமிய வரலாறு துவங்குகிறது. முஸ்லிம்கள் அதிகமாக அமெரிக்காவில் குடியேறத் தொடங்கினர். அமெரிக்க முஸ்லிம்களில் பெரும் பாலனோர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்ரிக்க வம்சாவழி கறுப்பின மக்கள் என்றும், கடந்த எழுபது ஆண்டுகளாக இஸ்லாம் வேகமாக பரவி வருவதாக ரண்ந்ண்ல்ங்க்ண்ஹ குறிப்பிடுகிறது.

இஸ்லாத்தைப் பற்றி அறிவார்ந்த விவாதத்துக்கு தான் தயாராக இருப்பதாக மேயர் ஹகீம் மன்சூர் எல்லீஸ் அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்

No comments:

Web Counter Code