இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 18, 2008

abusalih news

மன்னிப்பு கேட்ட மகாராஷ்டிரா சி.ஐ.டி.போலிஸ்

மகாராஷ்டிரா மாநில போலிஸ் ஹுவாஜா யூனுஸ் என்ற இளைஞரின் மீது வழக்கு விசாரணையை மேற்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்
கொண்டது. மேலும் தங்களால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் சக்தி மிகுந்த இடங்களில் செல்வாக்குமிகுந்தவர்கள். எனவே ஹுவாஜா யூனுஸ் வழக்கில் தங்களால் விசாரணை செய்ய முடியாது. சுயேச்சையான ஒரு விசாரணைக் குழுவினரே இதனை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

யார் அந்த ஹுவாஜா யூனுஸ்? 2002 ஆம் ஆண்டு கட்கோபாரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவர் இறந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்த குண்டு வெடிப்பு தொடர்பாக வளைகுடாவில் வாழ்ந்து வந்த கணினி மென்பொருள் பொறியாளரான ஹுவாஜா யூனுஸை போலிஸ் கைது செய்தது. காவல் நிலைய லாக்கப் அறையில் காவல்துறையினரின் கடும் சித்திரவதைகளால் ஹுவாஜா யூனுஸ் ஜனவரி 2003 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் காட்கோபார் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர்.அப்துல் மதீன் உட்பட இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் மீதும் வழக்கு தொடர மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. போலிஸ் மகாராஷ்ட்ரா மாநில அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மகாராஷ்ட்ரா மாநில அரசு நான்கு காவல்துறையினர் மீது மட்டுமே வழக்குத் தொடர அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநில சி.ஐ.டி. காவல்துறை சி.பி.ஐ.யிடம் இவ்வழக்கை ஒப்படைக்கு மாறு கேட்டுக்கொண்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநில சி.ஐ.டி.காவல்துறையின் வெளிப்படையான தன்மையையும் அதே பரிதாபகரமான தோல்வியையும் மகாராஷ்டிரா அரசின் உள்நோக்கத்தையும் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எட்டு பேரை குற்றமற்றவர்கள் என மும்பை பொடா நீதிமன்றம் விடுதலை செய்தது. போலிஸ் காவலில் இறந்த ஹுவாஜா யூனுஸின் மர்ம மரணம் குறித்த சந்தேகம் வலுப்பெற்றது. ஹுவாஜா யூனுஸை சித்திரவதை செய்து படுகொலை செய்ததாக
பதினான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

No comments:

Web Counter Code