இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 18, 2008

abusalih news about food crisis

விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்!

உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது. சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது. உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்

No comments:

Web Counter Code