இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 18, 2008

abusalih news

இந்தோனேஷியாவில் அனாதைகளாக்கும் பெற்றோர்கள்!

இந்தோனேஷியாவில் தொடரும் உணவுப் பொருட்கள் விலையேற்றத்தால் வறுமையில் சிக்கிய இந்தோனேஷிய பெற்றோர் தங்களின் குழந்தைகளை அநாதை இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இத்தகவலை ஜகார்த்தா போஸ்ட் வெளியிட்டுள்ளது.

சுனாமி என்ற ஆழிப்பேரலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள்
பெற்றோரை இழந்தனர். அப்போது ஏராளமான அனாதை இல்லங்கள் நிறுவப் பட்டன. சமூகநலத் துறையின் சார்பிலும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் யூனிசெஃபின் அனாதை நிலையங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.
5 லட்சம் குழந்தைகளைக் கொண்ட அனாதை நிலையங்களில் வெறும் 6 சதவீத குழந்தைகளே உண்மையில் அநாதைகள் என்றும் மற்றவர்கள் பெற்றோர்களால் அனுப்பப்பட்ட குழந்தைகள் என்றும் தெரிய வந்தது.

உணவுப்பொருள் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Web Counter Code