இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 18, 2008

abusalih article about petrol price hike

பெட்ரோல் விலையேற்றம்: திவாலாகும் உலகம்!
அபூசாலிஹ்



பெட்ரோல் விலையேற்றம் உலக அளவில் பெரும் ஆத்திர அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார திட்டமிடலில் விற்பன்னர்களாக விளங்கு பவர்களே செய்வறியாது திகைத்து நிற்கிறார்கள். பிரிட்டனில் ஆடம்ஸ்மித் விருது வாங்கிய பொருளாதார மேதை மன்மோகன்சிங்கும், அமெரிக்காவில் மேலாண் மைக் கல்வி கற்ற வழக்கறிஞர் பழனியப்பன் சிதம்பரமும் (நம்ம நிதியமைச்சர் தாங்க) சாக்குபோக்குகளும் சால்ஜாப்பு களும் கூறி முடித்தபாடில்லை. எ(த்)தை தின்றால் பித்தம் தணி யும் என்ற நிலையில் அனைத் துத் தலைவர்களும் விழி பிதுங்க விடைத்து நின்றனர்.

70 சதவீத எரிபொருளை இறக்குமதி செய்துவரும் இந்தியா மானியங்களை ரத்து செய்தது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலைகள் எகிறியது. இது பொதுமக்களை வாட்டும் விலையேற்றத்தால் நாடெங்கும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நிஜமான எதிர்க்கட்சிகளான இடது சாரிகளும், பிரதான எதிர்க்கட்சி என்று அழைக்கப்பட்ட பாஜகவும் போராட்டங் களை அறிவித்தன.

மலேசியாவிலும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் அங்கும் மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தோனேசியா வில் சில வாரங்களிலேயே பெட்ரோலின் விலை 30 சதவீதம் ஏற்றப்பட்டதால் மக்களின் ஆத்திரம் எல்லை மீறியது.

ஐரோப்பிய நாடுகளில் மீனவர்கள், விவசாயிகள், சுமையுந்து ஓட்டுநர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.

பெல்ஜியம் நாட்டில் மீனவர்கள் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது.

ஆசிய நாடுகள் பெற்ற பொருளாதார வளர்ச்சியே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என மலேசிய வர்த்தக நிபுணர் ஷியோக் சூ மற்றும் அகில பெட்ரோல் தரகு நிபுணரான ஜான் கில்டஃப் தெரிவித்தனர்.

சீனா மற்றும் இந்தியாவில் பெட்ரோல் அதிகம் செலவிடப்படுகிறது. இந்நாடு களில் கார்கள் அதிக அளவு விற்பனை யாவதும் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

யு.எஸ். கேரியர் ஏர்லைன்ஸ் பெட் ரோல் விலையேற்றத்தால் நூற்றுக் கணக்கான வேலையாட்களை நீக்கி பணிக்குறைப்பு செய்துள்ளது.

வெனிசுலாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு, சவூதி அரேபியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரேசில், ஹாங்காங், பிரிட்டன், துருக்கி போன்றவை உலக அளவில் குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் நாடுகளாகும்.

சரி எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் எதேச்சதிகார போக்குதான் இன்றைய நிலைக்கு காரணமா?

சவூதி அரேபியாவின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் அலிலிஅல்லிநயீமி, ''எண்ணெய் விலையேற்றம் நியாயப் படுத்த முடியாத ஒன்று; இது சந்தையின் அடிப்படைக் கொள்கைக்கே விரோத மானது'' என்கிறார்.

இங்கு போதுமான அளவு எண்ணெய் இருக்கிறது. ஏற்றுமதி நாடுகளால் எவ்விதக் குழப்பமோ, தட்டுப்பாடோ, எண்ணெய் விலை விஷயத்தில் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படுவதில்லை என்கி றார் லிபியதேசிய எண்ணெய் கார்ப்ப ரேஷனின் தலைவரும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் பிரதிநிதியுமான ஷோக்ரி ஹானெம்.

உலக எரிசக்தியின் பயனை 13 நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலையேற்றத்தைக் கண்டு ஏதாவது தீர்வுகாண வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி என்ற ஜி8 நாடுகளும், இந்தியா, சீனா, தென்கொரியா நாடுகளும் ஜப்பானின் ஆமோரி நகரில் கூடினர்.

எண்ணெய் ஏற்றுமதி நாடுகளே எண்ணெய் விலை யையும் விநியோகத்தையும் நிர்ணயிக்கின்றனர்.

ஆனாலும் சர்வதேச அளவில் கொள்ளை லாபம் ஈட்டிய உலகின் முதல் ஐந்து எண்ணெய் நிறுவனங்கள் எவையவை தெரியுமா?
1. Conoaco Philips 1200 கோடி டாலர்களை லாபம் ஈட்டியுள்ளன.
2. Chevron 1900 கோடி டாலர்களை கொள்ளை லாபமாக கடந்த ஆண்டு ஈட்டியுள்ளது.
3. BP நிறுவனம் 2100 கோடி டாலர்கள்
4. Shell 3100 கோடி டாலர்கள்
5.Exxon Mobil 4100 கோடி டாலர்களை சுரண்டிக் கொழுத்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விவகாரத்தில் சுரண்டிக் கொழுத்துவரும் நிறுவனங் களைப் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம்.

எண்ணெய் விநியோகம், எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எரிபொருள் துறை நிபுணர்கள் நிராகரிக்கிறார்கள்.

எண்ணெய் விநியோகத்தை அதிகப் படுத்துவதால் எவ்விதத் தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது காலின் முட்டிப் பகுதியை உடைத்துப் போடும் வேலை. இது அரசியல்வாதிகளின் சோம்பேறி மூளைகளின் வேலை என்கிறார் Globe an Institute for Tomorrow வின் சந்திரன் நாயர்.

இந்த உலகம் வெகுகாலமாகவே எதிர்கொள்ளும் பிரச்சினை இது. ஒபெக் அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்வது தீர்வின் சின்னஞ்சிறு பகுதியாக இருக் கும் அவ்வளவுதான் என்கிறார்.

மனோசஹர்தாகின் என்ற மூத்த நிபுணர் இவர் Centre for Global Emergency Studies-ன் முக்கியப் பிரமுகராவார்.

சஅதல்லாஹ் பாதி. இவர் ஒபெக்லி கின் முன்னாள் தலைவரும் ஈராக்கின் எண்ணெய் வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகருமாக விளங்கு கிறார். எண்ணெய் விநியோகிப்பாளர் களால் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியும். சில நாடுகள் அதிகமாகவே உற்பத்தி செய்கிறது. ஒபெக் எந்த குளறுபடிக்கும் பொறுப்பல்ல. இடையிலிருப்பவர்களின் (பெரிய நிறுவனங்களின்) வியாபார வஞ்சகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இருப்பினும் 11 எண்ணெய் வள நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தன.

உலக அளவில் கச்சா எண்ணெயில் முதலிடம் பெற்று விளங்கும் சவூதி அரேபியா இம்மாத துவக்கத்திலிருந்து நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இரண்டாமிடம் வகிக்கும் ஈரான் நாளொன்றுக்கு 2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. ஜூன் மாதத்தில் 25 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட கப்பல் கள் ஈரானிலிருந்து புறப்பட்டு பாரசீக வளைகுடாவிலிருந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறே சவூதி 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இம் மாதம் ஏற்றுமதி செய்யப்படும் என அலிலிஅல்லிநயீமி குறிப்பிடுகிறார்.
ஈராக் கடந்த ஐந்து வருடத்தில் இல்லாத அளவு தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. ஆனால் உலகத்தின் தேவை அதிகமாக இருக்கிறது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 1980ல் ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் போது இவ்வாறே கச்சா எண்ணெய் தட்டுப்பாடுகள் அதன் மீதான கட்டுப் பாடுகள் அதிகரித்தன. கச்சா எணணெய் ஏற்றுமதி நாடுகள் உலக எரிசக்தி வளத்தில் மூன்றில் ஒரு பகுதி தேவையை நிறைவு செய்கிறது. வளை குடாவில் வல்லூறுக்கண் பதிந்த பின்பு தான் இராக் ஐந்து ஆண்டுகாலம் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது. சதாம் ஹுஸைன் பிறந்த இடமான திக்ரித் மற்றும் கிர்குக் பகுதிகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை செயல்படுத்த முடியாமல் கிளர்ச்சியாளர்களின் கெடு பிடியால் வெறும் தொழில் நுட்ப இடைஞ்சலை காரண மாகக் கூறி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியாமலும் அதனால் பலன்பெற முடியா மலும் அமெரிக்கா தவித்த கதை புஷ்ஷும் டிக்செனியும் அனுபவித்த அவலம்.

ஈரான் அணுஆற்றல் தொடர்பான தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாவிடில் இஸ்ரேல் ஈரானைத் தாக்கும். 70களில் ஈராக்கின் அணுக்கரு உலையை விமானத்தில் இருந்து ஏவுகணையை வீசி தாக்கி அழித்ததைப் போல அழிப்போம் என இஸ்ரேலிய துணைப் பிரதமர் சவுல் மொஃபாஸ் தெரிவித்த வெறிக்கருத் தினால் எச்சரிக்கை அடைந்த ஈரான் தனது எண்ணெய் வள ஆதாரங்களைப் பாதுகாக்கத் தொடங்கிவிட்டது. ஈரானின் அதிஜாக்கிரதையான இந்த அதிரடி நடவடிக்கை உலக பொருளாதார வல்லுனர்களை மூர்ச்சையடையச் செய்தது.

சரி ஆப்பிரிக்காவில் நிலத்தடியில் பொங்கிப் பெருகும் கடல் போல் இருப் பதாக கூறப்படும் கச்சா எண்ணெயின் கதை என்ன? அதன் கதிதான் என்ன?
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் எட்டாவது இடம் வகிக்கும் நைஜீரியா தனது எண்ணெய் ஏற்று மதியை 2006 பிப்ரவரியிலிருந்து நிறுத்தி வைத்துள்ளது. இதனால் உலக பயன் பாட்டுக்காக ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய 5 லட்சத்து 64 பீப்பாய் கச்சா எண்ணெய் தடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடல் ஆழத்தில் கிடைத்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் வளம் வறண்டு விட்டது. அமெரிக்க எரிசக்தி கழகத்தின் அறிக்கை யின்படி ஓர் ஆண்டுக்கு இரண்டு கோடியே 70 லட்சம் பீப்பாய் கச்சா எண்ûணையை அமெரிக்க வாகனங் களும் உபகரணங்களும் உண்டு செரித்து விடுகின்றன. எரிபொருள் வளத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற அமெரிக்கா தற்போது எண்ணெய்க்காக தலையை பிய்த்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டி ருக்கிறது. அமெரிக்க எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையங்கள் வறண்டு போகும் நிலையை அடைந்துள்ளது. பல்வேறு ஏமாற்றங்களால் எரிச்சலுற்ற அமெரிக்க எரிசக்தி அமைச்சர் இர்க்ம்ஹய் ஆசிய நாடுகள் மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார். உலக கச்சா எண் ணெயில் பாதியை ஜப்பான், அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் தென் கொரியா எடுத்துக் கொள்கின்றன.

மானியங்களை சாடி வந்த அமெரிக்கா ஆசிய நாடுகளில் வாழும் கோடிக்கணக் கான பாட்டாளி மக்களின் சலுகைகளை பறித்து வெறுப்பினை வாரிக் கொண்டது.

சீனா 2500 கோடி டாலர்களை மானியங்களாக வழங்கியது. இந்தியா 2000 கோடி டாலர்களை மானியமாக வழங்கியது. இரண்டு ஆண்டுக்குள் இரண்டாவது தடவையாக பெட்ரோல் விலையை ஏற்றியுள்ளது:.

அதனால் விளைந்த எதிர்ப்பலையில் இந்திய அரசு திணறுகிறது. உணவுப் பொருள் விலையேற்றத்தை குட்டி சுனாமி என சமூகவியலாளர்கள் கூறினர். பிரச்சினையால் பூமிப்பந்து பந்தாடப் படுகிறது. மூன்றாவது உலகப் போர் தண்ணீருக்காக மூளும் எனக் கூறப்படு கிறது. ஆனால் திரவத் தங்கம் என்ற பெட்ரோலுக்காகத் தான் போர் மூளுமா? என்ற புதிய ஐயப்பாடு விளைந்துள்ளது. ஆனால் அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் எந்த நாடும் தன் நிலையை விட்டுக் கொடுக்காது மூர்க்கமாக போராடும் ஏனெனில் திரவத் தங்கத்தின் மகிமை அப்படி?

No comments:

Web Counter Code