இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, May 29, 2008

கர்நாடகத்தில் அரசியல் அபாயம்! ஓர் எக்ஸ்ரே ரிப்போர்ட்
-சத்தியவேந்தன்



கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க முடியா விட்டாலும் கூட பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் சென்ற பாஜக சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் ஏறுகிறது. (இதற்கி டையில் தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளிவந்து ஜனநாயகக் கேலிக்கூத்தும் நடந்தது). வழக்கமான தேர்தல் முடிவுகளைப் போல கர்நாடக தேர்தலை எடுத்துக் கொள்ள முடியாது என அரசியல் பார்வை யாளர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

மதவாத சக்தியை முறியடிப்போம் என காங்கிரஸும் மதவாத, சக்திகளை நாங்கள் தன் முறியடிப்போம் என மதசார்பற்ற(!) ஜனதாதளமும் பெருங்குர லெடுத்துக் கூவின. ஏற்கனவே சந்தர்ப்ப வாத தேவேகவுடாக் கட்சியினால் மனம் வெறுத்துப்போன கர்நாடக மக்களுக்கு, தேவே கவுடாக் கட்சியினரின் கூச்சல் எரிச்சலைத் தந்தது. எவ்வாறெனில் தேவேகவுடாக் குடும்பத்தின் மீதான வெறுப்பு பாஜகவின் எடியூரப்பா மீது அனுதாபம் காட்டும் அளவுக்குச் சென்றது ஒரு கட்டத்தில் பாஜகவுக்கும் மதச்சார் பற்ற(?) ஜனதா தளத்திற்கும் தான் போட்டி என்பதைப் போல மாநில மெங்கும் பிரச்சாரம் தூள்பறத்தது. மதசார்பற்ற(?) ஜனதா தளத்தின் மீதான கோபம் பாஜகவுக்கு வாகாய் அமைந்தது. வாகையாய் வாய்த்தது. மதசார்பற்ற(?) ஜனதா தளம் கடந்த தேர்தலில் பெற்ற பல தொகுதிகளை பாஜகவுக்கு கர்நாடக மக்கள் தாரை வார்த்துக் கொடுத்தனர்.

விளைவு முன்பைவிட பாரதிய ஜனதா 31 இடங்களை அதிகம் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட 15 இடங்கள் கூடுதலாகக் கிடைத்தது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சுயேட்சை கும்பலின் எண்ணிக்கையும் 16 குறைந்தது. கடந்த தேர்தலில் 58 இடங்களைப் பெற்ற தேவேகவுடாவின் மதசார்பற்ற(?) ஜனதாதளம் இந்த முறை 30 இடங்களைப் பறிகொடுத்து வெறும் 28 இடங்களை மட்டுமே பிடித்தது. முந்தையத் தேர்தலைப் போலவே பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் மூன்றாவதாக மதசார்பற்ற(?) ஜனதாதளமும் இடம் பிடித்துள்ளது. பெரிதும் பரிதாபத்துக்குரிய கட்சியாக தேவேகவுடாவின் மதசார்பற்ற(?) ஜனததளம் மாறியிருக்கிறது. ஆனாலும் பாஜகவுக்கு வெற்றியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டி சாதனை (!)யில் காங்கிரஸும் இடம்பெற்றுக் கொள்கிறது.

காங்கிரஸின் அசட்டுத்துணிச்சலே அக்கட்சிக்கு வினையான முடிந்திருக் கிறது. பாஜக எடியூரப்பாவை முன்நிறுத்தி யது. முதல்வர் வேட்பாளர் இவர்தான் என்று பகிரங்கமாக அறிவித்தது. காங்கிரஸில் மூலைக்கு மூன்று நான்கு பேர் நாங்கள் தான் முதல்வர், நான் தான் அடுத்த முதல்வர் என எண்ணிக் கொண்டே வலம் வந்தார்கள்.

காங்கிரஸின் அரசியல் சாணக்கிய ரான முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா நான் முதல்வர் பதவிக்கு போட்டியிடமாட்டேன் என அறிவித்தார். காங்கிரஸ் இவரை மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்து தேர்தலுக்காக அழைத்து வந்தும் கூட எஸ்.எம்.கிருஷ்ணா இவ்வாறு கூறியது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இவ்வாறு பல்வேறு குளறுபடிகளுக்கிடையில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா வலம் வந்தார்.

முதன்முறையாக பா.ஜ.க. தென்னிந்தியாவில் காலூன்றிவிட்டது என பல பத்திரிக்கைகள் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது என தம்பட்டம் அடிக்கும் ஊடகங்களில் போக்கு வினோதமாக உள்ளது. பா.ஜ.க.வின் வெற்றிக்கு தொகுதி மறுசீரமைப்பும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நகர்புற சாதி சமூகத்தினர் செறிவாக வாழும் பகுதிகள் பல தொகுதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு உள்ளன. இது பாஜகவுக்கு சாதகமான அம்சம் என்றும், நாட்டுக்கு பாதகமான அம்சம் என்றும் அரசியல் ஆய்வாளர் கள் கருதுகின்றனர்.

இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்தால் ஊசி நுழையாத இடத்தில் கூட பாஜக நுழையும் அபாயம் ஏற்பட்டிருக் கிறது. மதசார்பற்ற சக்திகள் குறிப்பாக காங்கிரஸ் விழித்துக் கொள்ளாவிட்டால் அபாயம் அருகில் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. நல்ல வேளையாக தேசிய அளவில் பாஜக நொண்டிக் குதிரையாகவே இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. பாஜக என்ற நொண்டிக் குதிரையால் துள்ளிக்குதிக்க முடியாது.
ஆனால் காங்கிரஸ் போன்ற மதசார் பற்ற சக்திகள் பாஜகவை சண்டிக் குதிரையாக மாற்றமலிருந்தால் போதும் ஏனெனில் கடப்பாறை கும்பல்கள் தங்களின் எதிர்கால வெற்றிக்கு காங்கிர ஸையே மலைபோல நம்பிக் கொண்டுள்ளன.

அது காங்கிரஸுக்கு தெரிய வேண்டுமே

No comments:

Web Counter Code