இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, May 29, 2008

நாடாளுமன்றத்தில்; தென்காசி குண்டு வெடிப்பு சதி விவகாரம்
அவமானத்தில் சுருண்டு போன பாஜகவினர்
-தமிழ் மாறன்



அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில் சமாதானச் சோலையாக விளங்கிய தென்காசியில் ஹிந்து முஸ்லிம் மக்களிடையே உள்ள நல்ணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக சதிகளை தொடர்ந்து அரங்கேற்றி தென்காசியை அமளிக்காடாக்கினர்.

உச்சகட்டமாக குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தி பழியினை அப்பாவி முஸலி்ம் இளைஞர்களின் மீது போட்டு சந்தடியில்லாமல் முஸலி்ம்களை சாய்ந்து விட முயன்றனர்.

தமிழக காவல்துறையின் நடுநிலையான அணுகுமுறையினால் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதன் பிண்ணயில் இருந்த பயங்கரசதி அம்பலமானது.

இந்து முண்ணனி பிரமுகர் குமார பாண்டியன் கொலை செய்யப்பட்ட பின்பும் இந்துக்களிடையே எந்த கோபமோ ஆத்திரமோ ஏற்படவில்லை. எனவே இந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவே தென்காசியில் இரண்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம் என கொலையுண்ட குமார பாண்டியனின் சகோதரர் ரவி பாண்டியன் உள்ள குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர்.

இந்தக் குற்றவாளிகள் அனைவரும் சங்பரிவாரின் முக்கிய பிரமுகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சங்பரிவாரின் நயவஞ்சக நாடகம் அம்பலமானதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் மூழ்கியது.

கொதிப்படைந்த சமூகநல ஆர்வலர்கள் சதிகளின் பிண்ணனி குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பினர்.

தென்காசியில் சங்பரிவாரின் சதிவலைகள் சமூக நல்ணக்கத்திற்கு வேட்டுவைப்பதை அறிந்து வேதனையடைந்த தமுமுக, இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தது.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் வெடித்த பைப் வெடிகுண்டைப் போலவே தென்காசியில் வெடித்த இரண்டு குண்டு வெடிப்புகளும் உள்ளதால் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவார். எனவே நாடெங்கிலும் இதுவரை நடைபெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த துல்யமான விசாரணைகள் தேவை என தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் கருத்து தெரிவித்திருந்தார் இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தில் தென்காசியில் வெடித்த சங்பரிவார்குண்டு' குறித்த விவாகாரம் வெடித்தது.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் தாங்களே தங்கள் அலுவலகத்தின் முன்பு குண்டு வைத்து விட்டு முஸலி்ம்கள் மீது பழியை போட்ட இழி செயலைப் போன்று நாடு முழுவதும் நடைபெற்ற சம்பவங்களை ஒருங்கிணைத்து மத்திய புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு மூலம் விசாரிக்க மத்திய புலனாய்புப் பிரிவு மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் முன்வருமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் பிருந்தா காரத் வினா எழுப்பினார். அவர் தனது விரிவான உரையில் நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும் மற்றும் பேருந்துநிலையத்திலும் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்திலும் மிகவும் கேடு கெட்ட முறையில் நடைபெற்ற சதி குறித்து உண்மைகளை வெளிக் கொணர்ந்த தமிழ்நாடு காவல்துறையினர் பாராட்டப்படவேண்டியவர்கள். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதை நாடு அறியும். ஆனால் காவல்துறையின் புத்திசாத்தனமாக விசாரணை மூலமாக இப்போது கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய குற்றவாளிகள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய இந்து முண்ணனியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அப்பகுதியில் மதப்பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதிவேலையின் நடவடிக்கையே இந்த சம்பவம் என்பது காவல்துறையினரின் புலனாய்வில் புலப்பட்டிருக்கிறது.

மதவெறி தீ மூட்டி விடப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். பாஜகவில் இருக்கக்கூடிய நபர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைப்படாத அந்த நபர்கள் இச்சம்பவத்தில் முழுமையாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு பிருந்தா காரத் பேசியதும் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் தென்காசி சங்பரிவார் குண்டு வெடிப்பு' குறித்த முழு விவரங்களையும் அவையில் தெரிவித்தார். சம்பவத்தின் பிண்ணனி எந்தவிதமான நோக்கம் இருந்திருக்கக்கூடும் என அவையே தீர்மானிக்கப்பட்டும் என்று கூறிய சிவராஜ் பாட்டில் சங்பரிவார் சதிகளை விலாவாரியாக விவரித்தார். பின்னர் இது இந்து முஸ்லிம்களும் இந்த சதிக்கு இலக்காவில்லை என்பதை தெரிவித்த சிவராஜ் பாட்டில் தமிழக சம்பவம் தற்போது புலனாய்வில் இருந்து வருகிறது என்று கூறிவுடன் மீண்டும் துணைக் கேள்வி எழுப்பிய பிருந்தா காரத் எம்.பி., இதைப் போன்ற ஒரு குண்டு வெடிப்பு தான் மகராஷ்ட்ர மாநிலம் நான்டெடில் நடந்தது. இதில் மத்திய என்ன நடவடிக்கை எடுத்தது என அறிய விரும்வதாக தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த சிவராஜ் பாட்டில் 2006 ஏப்ரல் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பஜ்ரங் தள்ளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதை மகராஷ்ட்ரா மாநில காவல்துறையினர் கண்டறிந்தனர். காவல்துறையினர் விசாரணையில் ஆட்சேபணைகள் எழுந்ததால் பின்னர் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கும், அதற்கும் ஆட்சேபனை எழுந்ததால் மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணையில் தற்போது நான்டெட் குண்டு வழக்கு நடைபெற்று வருகிறது. உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் சந்தேகம் இருந்தால் மத்திய புலனாய்வுத்துறையின் கீழ் விசாரணை செய்யப்படும் என சிவராஜ் பாட்டில் உறுதி அளித்தார்.

இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்க இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்மையாக இருக்கிறது என சிவராஜ் பாட்டில் சங்பரிவாரின் சதிகுறித்து கூறும் போது பாஜகவினரின் முகங்களில் ஈயாடவில்லை

No comments:

Web Counter Code