இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, May 29, 2008

வேலியில் போகும் ஓணானை..

.ரக்சன்




அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பலத்த சர்ச்சைகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் சூழலில் சர்ச்சைகளில் அடிபடாத முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்திய ஏவுகணை தொழில் நுட்பத் தின் முன்னோடி என்றும் அணு ஆயுத தொழில் நுட்பத்தின் பிதாமகன் என்றும் போற்றப்படும் கலாம் இத்தகைய கருத்தினை உதிர்த்திருக்க வேண்டாம் என்பதே பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

நாட்டில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையங்கள் யுரேனியம் எரிபொருள் களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. இந்த எரிபொருள் இந்தியாவில் அதிக அளவு கிடைப்பது இல்லை. ஆனால் இதற்கு மாற்றாக, தோரியம் எரிபொருள் நிறையக் கிடைக்கிறது.

இதனை அணு உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ள சுமார் பத்து வருடங்கள் ஆகலாம். எனவே யுரேனியம் எரிபொருளை பெறுவதற்கு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார்.
இதையே ஒரே பிடியாக பிடித்துக் கொண்ட அமெரிக்காவின் நேசாபிமானி பிரதமர் மன்மோகன் சிங் அறிவார்ந்த விஞ்ஞானிகள் சொல்வதை நாட்டு மக்கள் ஏற்பார்கள் என பாய்ந்து விழுந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

எதற்காக ஒப்பந்தம் என்பதைவிட யாருக்காக ஒப்பந்தம்,,,, என்பதே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் மின்சாரத் தேவையை நிறைவேற்ற அணுமின் நிலையத்தை தாராப்பூரில் அமைத்தபோது எரிபொருள் தருவதாகக் கூறிய அமெரிக்கா அப்பட்டமாக ஏமாற்றியது. அமெரிக்காவின் அத்தகைய மனப் பான்மை இன்றும் மாறவில்லை என்பதே விவரமறிந்தவர்களின் கருத்தாக இருக் கிறது. இந்நிலையில் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சலாம் போடுவது எதற்காக?

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் 'ஹைடு' ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக பேசாமல் அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பேசி பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.

சொன்னது அப்துல் கலாமாகவே இருந்தாலும் கூட அது புறக்கணிக்கப்படக் கூடிய கருத்தே.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாதின் இந்திய வருகை குறித்து அமெரிக்கா என்ன சொன்னது? எவ்வாறு ஆணவமாக உத்தரவிட்டது. ஈரான் அதிபரோடு அணுசக்தி விஷயம் பற்றி பேச வேண்டாம் என உத்தரவிட வில்லையா? உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர எத்தனிக்கும் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கண்ணை மூடி ஆதரிக்கும் கலாம்களும் மன்மோகன் சிங்குகளும் அமெரிக்காவின் ஆதிக்க மனோபாவத்தை மூடி மறைத்து என்ன தான் ஆதரவு கானங்கள் பாடினாலும் இந்திய மக்களிடம் அது எடுபடாது என்பது உறுதி

No comments:

Web Counter Code