லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள்
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 61 ட்ரக்குகளும் மாயமாயின. அந்த டிரக்குகளில் 400 டன் வெடிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை மத்திய பிரதேசத்திற்கு வந்து சேர்ந்த போது மாயமாகிவிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.
காணாமல் போன வெடி மருந்து லாரிகளில் 4 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதனைத் தொடர்ந்து வந்த தகவல்கள் தெரிவித்தன.
வெடிப் பொருட்களின் மொத்த மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாயாகும். ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் இந்த வெடிப் பொருட் கள் காணாமல் போயி ருக்கக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தின் டோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து (ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்) ஸிணிசிலி மற்றும் கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிடிபட்ட லாரியின் டிரைவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படு கிறது. இது ஜெய்கிஷன் மற்றும் தேவேந்திர தாகூர் ஆகியோருக்கு சொந்தமானதாகும். கடந்த ஜூன் மாதமே காணாமல் போன வெடிப்பொருட்கள் பற்றி நாட்டிலுள்ள ஊடகங்கள் எதுவும் பெரிய அளவில் கண்டுகொண் டதாகவே தெரியவில்லை.
எங்கள் தரப்பில் எந்தத் தவறும் நிகழவில்லை என ராஜஸ்தான் அரசு வெடிப்பொருட்கள் தொழிற்சாலையின் அதிகாரி ஓய்.சி உபாத்யாயா தெரிவித்தார். வெடிப்பொருட்கள் விற்கப்பட் டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் இருப்பதாக காவல் துறை ஐ.ஜி அவ்னாஷ் மங்கலம் தெரிவித்தார்.
முதல்கட்ட புலனாய்வில் இந்த வெடிபொருட்கள் மகராஷ் ட்ரா. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தனிநபர் களிடம் விற்கப்பட்டதாக தெரிய வந்தது.
2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சூரத் நகரில் 18 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக் கப்பட்டன. பின்னர் அவை செயலி ழக்கப்பட்டன.
அந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் ராஜஸ்தான் மாநில வெடி மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமானது என்பது குறிப்பி டத்தக்கது. தற்போது அதே நிறுவனத்திலுள்ள வெடிமருந்துகள் காணாமல் போனதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
சூரத் நகரின் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாய த்தின் மீது பழிபோடப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் மாவட்ட முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடி த்து குஜராத் மாநில காவல் துறையினர் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு குஜராத்திலும் ஜெய்ப் பூரிலும் வெடிக்காத குண்டு களை புதைத்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
ஆஜம்கார் மாவட்ட இளை ஞர்கள் மீது குற்றம் சாட்டிய வர்கள், இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனையான இயக்கத்தை கட்டமைத்தவர்கள். வெடிமருந்துக் களை விநியோகம் செய்தவர்கள் குறித்து எவ்வித கடுமையும் காட் டாதது ஏன்? உண்மையிலேயே படுபயங்கரவாதிகள் யார்? என்ற கேள்வி 120 கோடி இந்தியர்களின் உள்ளங்களிலும் எழுகிறது
No comments:
Post a Comment