இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, September 26, 2008

மகனே... சரணடைந்து குற்றமற்றவன் என நிரூபித்துவிடு...
ஒரு வீரத் தாயின் ஆவேசம்

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்படும் தவுகீர் என்னும் அப்துல் சுபுஹானின் தாயார் தனது மகனுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.

அப்துல் சுபுஹான் டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் ஒரு நபராக இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஹ்மதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு தவுகீர் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் புலனாய் வுத் துறையினர் கூறி வருகின்றனர். ஒரு மனிதன் பிடிபட்டாலே மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை கட்ட விழ்த்து விடும் சில ஊடக பயங்கர வாதிகளுக்கு குண்டுவெடிப்பு தொடர் பாக ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என செய்தி கிடைத்தால் எப்படி இருக் கும்? கும்மாளம் போடாத குறையாக சந்தோஷத்தில் மூழ்கி சதிக் கதைகளை சந்திக்கு ஒன்றாக அவிழ்த்து விடுவார் கள். அதே கதை இங்கும் அரங்கே றியது. லஷ்கரே தொய்பா என்ற தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் சுபுஹான் என்றும், இந்தியாவின் பின் லேடன் என்றும் நம்மூரு தினத்தந்தி கூட செய்தி வெளியிடுகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, அப்துல் சுபுஹான் என்ற தவுகீர் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்ற பதைபதைப்பு அவரது குடும்பத்தின ருக்கு ஏற்பட்டது. அப்துல் சுபுஹானின் தாயார் சுபைதா குறைஷி தனது மவுனத்தைக் கலைத்தார். செய்தியாளர் களின் முன் அவரது வழக்கறிஞர் சொலேகருடன் தோன்றினார். உயிர் களை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வு களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.

குண்டுவெடிப்பில் என் மகனுக்கு தொடர்பு இருந்தால் எண் கண் முன்பாக அவன் தண்டிக்கப்படட்டும். எங்கள் குடும்பத்தின் முன்பாகவே அவனை தூக்கில் போடுங்கள். அவனை தூக்கில் போடுவதைத் தடுத்து நிறுத்த மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் அறிவித்த அந்த வீரத்தாய், தனது மகன் உடனடியாக சரணடைந்து நிரபராதி என தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வீரத்தாய் சுபேதா குறைஷியின் அறிவிப்பு பல்வேறு பத்திரிகையிலும் பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.

தவுகீர் அப்பாவி

தாயார் கூறுகிறார் என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. தவுகீரின் தாய் அவரை சரணடையுமாறு வேண்டுகிறார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் சிறிய செய்தியாக ஆரம்பித்து ஏழாம் பக்கத்தில் செய்தியை தொடர்கிறது.

தினமணி தவுகீரின் தாயார் கூறியதை சிலாகித்து நெகிழ்ந்து தலையங் கமாகவே தீட்டியுள்ளது. இப்படி இந்தி யாவை நேசிக்கும் சகோதரர்கள் இஸ் லாமிய சகோதரர்கள்தான் பெரும்பான்மையினர் என்பதை ஏனைய
மதங்களைச் சேர்ந்த இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள் ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங் களும் வீரத்தாய் சுபேதா குறைஷியின் கருத்தை நல்ல நோக்கத்துடன் வெளி யிட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின், உழைப்பிலும் உதிரத்திலும் உருவாக்கப் பட்ட தினத்தந்தி இதுபோன்ற சம்பவத் தில் செய்தி வெளியிட்ட விதம் அந்தப் பத்திரிகையை போற்றி வளர்த்த நியாய உணர்வு கொண்ட அனைவரின் முகத்திலும் கரி பூசுவதைப் போன்று அது வெளியிட்ட செய்தி அமைந்தது. குண்டுவெடிப்பு சதிகாரன், இந்தியாவின் பின்லேடன் தவுகீரின் தாய் ஆவேசம் என சற்றும் தனது தகுதிக்கு பொருந்தாத தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

எல்லா நடுத்தர குடும்பத்தினரைப் போன்றே கனவுகளோடு வளர்த்தேன். குண்டுவெடிப்புகளுக்கு என் மகன் அப்துல் சுபுஹான் குறைஷியே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் என் பிள்ளைக்கு நான் நல்ல குணங்களை யும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளேன். எனவே என் மகன் அப்துல் சுபுஹான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான் என எங்க ளால் நம்ப முடியவில்லை என்றும் அந்த வீரத்தாய் சுபைதா குறைஷி தெரிவித் தார். அப்துல் சுபுஹான் என்ற தவுகீரின் விவகாரத்தில் உண்மைகள் வெளி வருமா

No comments:

Web Counter Code