போலிஎன்கவுண்டர்:
''எங்கிருந்தோ கொண்டுவந்த பிணங்கள்!
சர்ஜுன்
டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாடு முழுவதும் எழுந்த விமர்சனக் கணைகளால் ஆடிப் போன மத்திய அரசும், டெல்லி பிரதேச அரசும் எத்தைத் தின்றால் பித்தம் தனியும் என்ற நிலையில் தடுமாறியது. இதுவரை நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என அப்பாவிகள் மீது குற்றம்சாட்டி வளைத்துப் பிடித்து வரும் நிலையில் குண்டுவெடிப்பு குற்றங்களில் சங்பரிவார் இயக்கங்கள் பின்னணியில் இருந்ததாக பல்வேறு மட்டங்களில் நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த கோணத்தில் இதுவரை மத்திய அரசோ, மாநில அரசுகளோ துப்பறிந்த தில்லை. உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய உண்மை எண்ணம் இல்லையோ என்பதை நிரூபிக்கும் விதமாக அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் இரண்டு பேரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி களுடன் துப்பாக்கி சண்டை நடந்ததாக வும் அதில் இருவர் கொல்லப்பட்ட தாகவும், கொல்லப்பட்டவரில் ஒருவர் ஆதிஃப் என்ற பஷீர்தான் முக்கிய சதிகாரன் என்றும் டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் தெரிவித் தார். இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவல்துறை அதிகாரியும் பலி யானதுதான் பெரும் சோகம்.
டெல்லியின் ஜாமியா நகர் பகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதி யாகும். குறுகிய சந்துகளில் திடீரென நாடகம் போல் நடைபெற்ற என்கவுண்டர் சம்பவம் அப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
குறுக்குச் சந்துகளில் குமுறலுடன் கூடிய முஸ்லிம் இளைஞர்கள் என்ன நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் முஸ்லிம் கள் குழுமினர்.
ஒலிபெருக்கிகளின் மூலம் பள்ளி வாசல்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பாரம்பரியம் மிக்க பல்கலைக் கழகமான ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டது தேவையற்ற பதட் டத்தை ஏற்படுத்தியது. ஜாமியா நகரில் ஒரு போலி என்கவுண்டர் நிகழ்த்தி ஓர் அபார்ட்மெண்டில் நான்காவது தளத்தில் இரண்டு உடல்களை வேண்டுமென்றே வைத்து நாடகமாடுவதாக ஜாமியா நகர மக்கள் கோஷம் எழுப்பினர்.
சில உள்நோக்கம் கொண்ட தொலைக்காட்சிகள் பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தவறான தகவல்களைக் கொடுத்தன.
ஜாமியா நகர் பாட்லா ஹவுஸ் அபார்ட்மென்டில் 4வது மாடியில் என்கவுண்டர் நடத்தப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.
நடைபெற்ற இந்த என்கவுண்டர் குறித்து நீதி விசாரணை நடத்த வேண் டும் என டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜீலானி கோரிக்கை விடுத்திருக்கிறார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆன வர். ஜாமியா நகர் பகுதி மக்கள் வெகு காலமாகவே காவல்துறையினரின் கெடுபிடிகளில் சிக்கி வேதனையடைந்து வருகின்றனர். எந்த ஒரு நிகழ்வுக்கும் பிறகு இப்பகுதியை சல்லடையாக சலிப்பதே நடைமுறையாகி விட்டது என்றும் தனது குமுறலை ஜீலானி தெரிவித்தார்.
இருவர் முன்கவுண்டர் செய்யப்பட்ட விதமும், என்கவுண்டர் செய்த இடமாக காவல்துறையினர் குறிப்பிடும் இடமும் முழுமையாக சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவரின் முகத்தை பொதுமக்களிடம் காட்டவில்லை. மர்ம மான முறையில் போர்வையால் மூடப் பட்டதைக் கண்டு சந்தேகம் எழுப்புகிறார் ஃபைஸல்கான் என்ற அப்பகுதிவாசி. எங்கள் பகுதியைச் சேர்ந்தவரை சுட்டுக் கொன்றதாக கூறுகிறார்கள். அவர் மாணவரா? அல்லது குடும்பஸ்தரா? என்பதை எங்களிடம் காட்டாமல் அவர்கள் எவ்வாறு அறிவிக்கிறார்கள்? அவர்களாகவே மர்மமான முறையில் அறிவித்திருப்பது நிச்சயம் சந்தேகத்துக் குரிய ஒன்றாகவே உள்ளது என குறிப்பிடுகிறார்கள் அவ்வூர் வாசிகள்.
நீங்கள் இந்தப் பகுதி யைப் பாருங்கள், யாரும் தப்பித்து ஓடும் நிலையிலா இருக்கிறது? மிகவும் மக் கள் நெருக்கமான பகுதி யில், அதிலும் ஆயிரக் கணக்கான காவல்துறையினர்முகாமிட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ள யாருமே எவ ரும் தப்பித்து ஓடியதைப் பார்த்ததில்லை என டெல்லி ஜாமியா நகர் பகுதிவாசி ஆர்.ஆபித் குறிப்பிடுகிறார்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத் தின் விரிவுரையாளர் ஃபரியாத் தீவிர வாதிகள் பதுங்கி இருந்ததாக சொல்லப் படும் எல்-18 அபார்ட்மென்ட்டின் பின்னால் வசிக்கிறார். ஒரே ஒரு சிறிய புல்லட் சத்தத்தைக் கேட்டேன் என்கிறார்.
எங்களுக்கு ஒரு உண்மை தெரி கிறது. ஒவ்வொருவரும் முஸ்லிம்களைக் குறிவைப்பதையே விரும்புகிறார்கள். அதனால் இந்த முஸ்லிம் பகுதி குறி வைக்கப்படுகிறது என்கி றார் ஜாமியா நகர்வாசி சலீமுத்தீன்.
டெல்லியில் நடந்த தாகக் கூறப்படும் என் கவுண்டர் குறித்து நேரம் வாரியாகப் பார்ப்போம்.
காலை 10 மணி
20 காவல்துறை அதி காரிகளைக் கொண்ட படை துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ் தலைமையில் ஜாமியா நகரில் நுழைகிறது. அந்தப் படை பிளாக் எல்-18 அபார்ட் மென்ட்டை சுற்றி வளைக்கிறது.
11 மணியிலிருந்து 11.45 மணிக்குள்
காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா, புல்லட் புரூஃப் என்ற குண்டு துளைக்காத சட்டை அணியாத நிலை யில் கதவை உடைக்கிறார். காவல்துறை சோதனைக்காக வந்திருக்கிறோம் என பெருங்குரலில் கத்திக் கொண்டே உள்ளே செல்ல முயலும் போது உள்ளி ருந்து 3 எம்.எம். பிஸ்டல் சீறுகிறது. மூன்று தோட்டாக்கள் சர்மாவை நோக் கிப் பாய்ந்தன. இரண்டு தோட்டாக்கள் அவரது உடலைத் துளைத்தது. சர்மா தரையில் சாய, அவரை காவல்துறை யினர் தாங்குகின்றனர். மற்றொரு தோட்டா ஏட்டு பல்வான் சிங்கின் வலது கையில் துளைத்தது. காவல்துறை ஆய் வாளர் சர்மா `ஹோலி பேமிலி` மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு வயிற்றிலிருந்த குண்டு அகற்றப் பட்டது.
மூத்த காவல்துறை அதிகாரிகள் இணை ஆணையர் (சிறப்புப் பிரிவு) கர்னால் சிங் மற்றும் துணை ஆணையர் (சிறப்பு) அலோக் குமார் உள்ளிட்டவர்கள் ஜாமியா நகர் வந்தனர்.
சிறப்புப் படையின் பல்வேறு பிரிவின ரும் தேசிய பாதுகாப்பு கமாண் டோக்களும் அங்கு வந்தனர். மீண்டும் ஒருதடவை காவல்துறை அதிகாரிகள், அபார்ட்மென்டுக்குள் நுழைய முயல்கின்றனர். இப்போது இவர்கள் அனைவரும் படு முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
22 சுற்றுகள் துப்பாக்கிகள் தோட்டாக் களை உமிழ்கின்றன. இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இரண்டு பேர் குதித்து தப்பியதாகவும், ஒருவர் காவல்துறையினரிடம் பிடிபட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்களை காவல் துறையினர் அப்புறப்படுத்து கின்றனர்.
சரியாக 11.45 மணி துப்பாக்கிச் சண்டை ஓய்ந்து விட்டதாக காவல் துறை அறிவித்து விட்டது. காவல் துறை அறிவித் ததுதான் தாமதம், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம் கள் வீதிகளுக்கு வெளியே வந்து உள்ளூர் தொலைக் காட்சி சேனல்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பள்ளிவாசல்களில் தீவிர வாதிகள் பதுங்கியிருந்ததாக பொய்ச் செய்தியை ஒளிபரப்பியதால் முஸ்லிம் கள் ஆத்திரம் அடைந்தனர்.
மாலை 4 மணிக்கு
டெல்லி காவல்துறை ஆணையர் ஒய்.எஸ்.தாத்வால் செய்தியாளர் கூட்டத் தில் என்கவுண்டர் குறித்து அறிவித்தார்.
மாலை 7 மணி
காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த் சர்மா படுகாயம் அடைந்த அவர் மரணமடைந்தார்.
காவல்துறையினரின் என்கவுண்டர் அறிவிப்புகள் தங்களால் ஜீரணிக்க முடியவில்லை என முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் விவகாரக்குழு செயலாளர் முஜ்தபா ஃபரூக் அகில இந்திய மில்லி கவுன்சிலின் செயலாளர் அப்துல் வஹாப் கில்ஜி மற்றும் டாக்டர் தஸ்லிம் ரஹ்மானி போன்றோர் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்திய அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
என்கவுண்டர் நடந்ததாகக் கூறப் பட்ட இடங்களில் முஸ்லிம் தலைவர் களின் குழுவோடு நானும் சென்றேன். ஆனால் எங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என குமுறலுடன் கூறினார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். டாக்டர் ஜஃபருல் நாட்டின் முன்னணி சமூகநல ஆர்வலர். மில்லி கெஜட் ஆங்கில செய்தி ஏட்டின் ஆசிரியர் அவர் உள்பட முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் சம்பவ இடத்தைப் பார்வையிடச் சென்றபோது காவல்துறையினர் அனு மதி மறுத்ததால் என்கவுண்டர் விவகா ரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக் கிறது. முக்கிய முஸ்லிம் அமைப்புகளான முஷாவராத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த் போன்ற முக்கிய அமைப்புகள் போலி என்கவுண்டரை எதிர்த்து மறியல் போரை செப்டம்பர் 26ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அறிவித்திருப்பது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.
இதனிடையே முறையற்ற கைதுகள் தொடர்ந்து வருவதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. அலஹா பாத்தைச் சேர்ந்த முஹம்மது ரஷீத் புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றவர். அவர் ஜாமியா மில்லியா இஸ்லா மியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. என்ற ஆராய்ச்சி உயர்படிப்பு கற்று வந்தார். அவரை அபுல் ஃபஸல் என்கிளேவ் பகுதியில் வீடு எண் சி.81லிருந்து கைது செய்துள்ளனர். முஹம்மது ரஷீத் வீட் டிற்கு அருகில் டீக்கடை நடத்திவரும் 75 வயது பெரியவர் இதனை தெரிவித் திருக்கிறார்.
இந்தியத் தலைநகர் ஆயிரத்து நூறு ஆண்டுகள் முஸ்லிம்களால் ஆளப்பட்ட போதும் அனைத்து மக்களுக்கும் கூர்மையான நீதி வழங்கி மகிழ்ந்தனர்.
ஆனால் உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியின் காவல்துறையின் சித்திரவதைகளால் மனம் நொந்து நிஜாமுத்தீன் (30) மற்றும் முயீனுத்தீன் (25) ஆகியோர் தற் கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அதற்குக் காரணமான இரண்டு அதி காரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் நிலை விளிம்பு நிலைக்கு தள்ளப் படுகிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment