சிமிக்கு எதிரான 194 வழக்குகளில் 192ல் ஆதாரமில்லை!
மண்டை காயும் மகாராஷ்டிரா அரசு!!
ரையான்
மத்திய அரசு சிமி இயக்கத்தின் தடைக்கு மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அரும்பாடுபட்டு வருகிறது. சில மாநில அரசுகளும் சிமி தடை விஷயத்தில் முனைப்பு காட்டின.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை துன்புறுத்துவதில் எப்போதுமே ஆர்வம் காட்டிவரும் மகாராஷ்டிர அரசும் சளைக்காது தனது தீவிரத்தைக் காட்டியது.
அப்பாவி இளைஞர்களை வளைத்துப் பிடிப்பதில் எப்போதும் வேகம் காட்டிவரும் மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் 194 வழக்குகளை சிமி என்ற இயக்கத் திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது. இதில் மகாராஷ்டிர அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள் எதுவும் பெரும்பாலான வழக்குகளில் நிரூபணமாகவில்லை. 192 வழக்குகளில் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு தனக்குத் தானே கரி பூசிக் கொண்டது. இரண்டு வழக்குகளில் மட்டுமே (கொஞ்சூண்டு) ஆதாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தீவிரவாத தடுப்புப் படையும், புலனாய்வு அமைப்புகளும், காவல்துறை யினரும் நாட்டில் நிகழ்ந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் சிமியே காரணம் என பிரச்சாரத்தை மேற்கொண் டும் இன்றைய தேதி வரை தங்களது குற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங் களைக் கூட சமர்ப்பிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
மகாராஷ்டிர அரசின் அரசு வழக்கறிஞ ரும் உச்சநீதிமன்றத்தில் சிமி மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது தான் வினோதமாகும்.
மகாராஷ்டிர அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் சிமியைத் தடை செய்ய வேண்டும், நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என தங்களது அறிக்கைகளை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளன.
மகாராஷ்டிர அரசு சிமிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகள் குறித்து பார்ப் போம். மகாராஷ்டிர அரசு 1,057 பேர் மீது குற்றம்சாட்டி 194 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
ஆனால் மகாராஷ்டிர அரசின் காவல் துறை தொற்ற வழக்குகளில் வெறும் இரண்டு வழக்குகளில் மட்டுமே பூர்வாங்க ஆதாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 56 வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 246 பேர் எவ்வித ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப் பட்டனர்.
ஆறு வழக்குகளில் சிக்க வைக்கப் பட்ட 79 சிமி அமைப்பினர் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுவித்தது. இவர் களைத்தான் பயங்கரவாத இயக்கங் களுக்குத் தொடர்பு உடையவர்களாக மகாராஷ்டிர அரசு குற்றம்சாட்டி துன்புறுத் தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. (தூ... வெட்கமாயில்லை?)
693 சிமி இயக்கத்தினர் தொடர்பு டைய 111 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் முடிவும் மகாராஷ்டிர அரசுக்கு படு தோல்வியை பரிசளிக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனி டையே இதுதொடர்பாக மாநில காவல் துறைத் தலைவர் அனாமி நாராயண் ராஜ் என்பவரை சந்திக்க செய்தியாளர்கள் முயன்றும் அவர் மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை முன்னணி செய்தி ஏடான இன்குலாப் ஏடு தெரிவித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment