இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, March 12, 2008

ஆப்பிரிக்காவை ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமெரிக்கா!



அமெரிக்காவின் பார்வை தற்போது ஆப்பிரிக்காவை நோக்கித் திருப்பி யுள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்கவும், இழந்த பெருமிதத்தை மீட்கவும் அமெ ரிக்கா இந்த நிலைபாட்டை மேற்கொண் டுள்ளதாக கருத்துக்கள் உலாவருகின்றன.

புஷ் சென்ற வாரம் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் ஐந்து நாடுகளில் அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை குறிப்பிடும் அரசியல் ஆய்வாளர்கள், 2015ஆம் ஆண்டு 25 சதவீத பெட்ரோல் பற்றாக்குறையை சந்திக்க இருப்பதால் தனது எண்ணெய் வல்லாண்மையை நிலைநிறுத்த அமெ ரிக்கா முயற்சி செய்வதாக வெளியுறவுக் கொள்கைகளை ஆய்வு செய்துவரும் எமிராவுட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்கா, எண்ணெய் வளம் பெற்றுள்ளது. பின்னர் ராணுவ வலிமையைப் பெருக்க முயற்சி செய்கிறது. அதோடு இனி ஆப்பிரிக்காவின் வெளியுறவுக் கொள்கையே சீர்குலையும் என்றும் எமிராவுட்ஸ் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனா அதிக நட்புறவு பேணி வருகிறது. எண்ணெய் வர்த்தகம், உலோகங்கள் மற்றும் பல்வேறு வர்த்தகத் தொடர்புகளிலும் ஆப்பிரிக்காலி சீனா இடையே ஒத்துழைப்புகள் தொடர் கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தலையீடு ஆப்பிரிக்க பூபாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1,800 அமெரிக்கத் துருப்புகள் தற்போது ஜிபோதியில் நிலைகொண்டுள்ளது.

சூடானின் தார்ஃபரில் ஆப்பிரிக்க யூனியனின் கண்காணிப்புப் படைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா நெடுநாளாகவே காத்திருக்கிறது. சோமாலியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற எத்தியோப்பிய துருப்புகள் தாக்குதலைத் தொடர்கின்றன. எகிப்து அமெரிக்காவின் முக்கிய நேச நாடாக திகழ்கிறது. லிபியா அடக்கி வாசிக்கிறது. இந்நிலையில் புஷ் சென்ற வாரம் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்கா தனது அதிகார எல்லையை விரிவாக்குவதற்காக தனது ராணுவ மேலாண்மையை நிலைநிறுத்த முயல்வதாகவும் கருத்துக்கள் புறப்படத் துவங்கியுள்ளன.

No comments:

Web Counter Code