இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, March 12, 2008

கொசோவோ விடுதலை! தொடரும் உலக ஆதரவு!!


ஐரோப்பாவில் இஸ்லாம் பண்டைய காலத்திலேயே பரவிவிட்டது. ஸ்பெயி னில் 800 ஆண்டுகாலம் முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றது. 14ஆம் நூற்றாண் டில் உருவான சக்திமிக்க உதுமானிய பேரரசு 20ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் வடஆப்பிரிக்க பகுதிகளிலும் ஆட்சி செலுத்தியது.

முதல் உலகப் போருக்குப் பிறகு உதுமானிய பேரரசின் கீழ் இருந்த பகுதிகள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. 1917ல் ரஷ்யாவில் வெடித்த கம்யூனிஸப் புரட்சியின் ஈர்ப்பால் பல பகுதிகள் கம்யூனிச குடையின் கீழ் ஒன்றிணைக்கப் பட்டன. அவ்வாறு இணைந்தவைகளில் யூகோஸ்லோவியா போன்ற பல நாடு களைச் சார்ந்த முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட பிராந்தியங்கள் உண்டு. போஸ்னியா ஹெர்ஸகோவினா, கொசோவோ போன்ற பகுதிகளும் அடக்கம். அவற்றிற்கு நீண்டகாலமாக சுதந்திரம் மறுக்கப்பட்டதோடு அடக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்டன.

போஸ்னியா 90களில் விடுதலைப் பெற்றது. கொசோவோ கடந்த மாதம் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகினாலும் கொசோவோவுக்கு எதிர்ப்பும் பல வழிகளில் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் கொசோவோ சுதந்திரத் திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்காவை எதிர்த்து செர்பியர்கள் பெரும் கலவரத்தில் இறங்கினர். கொசோவோவின் சுதந்திர அறிவிப்பினை எதிர்த்து ஒன்றரை லட்சம் செர்பியர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர். தலைநகர் பெல்கிரேடில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப் பட்டது வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன.

வெறிபிடித்த செர்பிய இளைஞர்கள் அமெரிக்க தூதரகத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காவல் துறையினரும் தாக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி மற்றும் கனடா நாட்டு தூதரகங் களும் தாக்கப்பட்டன. வன்முறையாளர் களின் வெறியாட்டத்தில் போஸ்னியா, க்ரோஷியா மற்றும் துருக்கி நாட்டு தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டன.

ஐரோப்பிய யூனியன் 2 ஆயிரம் உயர் அதிகாரிகளை கொசோவோவுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் காவல் துறை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை யில் பயிற்சியளிப்பார்கள் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

கொசோவோ என்ற புதிய நாட்டின் உதயம் உலக அளவில் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளது. ரஷ்யாவும், செர்பியா வும் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. நமது அண்டை நாடான இலங்கை கூட தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள

No comments:

Web Counter Code