இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, March 11, 2008

காஸா ஹமாஸின் பதிலடியால் பின்வாங்கி ஓடியது இஸ்ரேல்!

அபூசாலிஹ்.



1979ல் அமெரிக்காவின் அடிவருடி யாக இருந்த ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சி அகற்றப்பட்டு இஸ்லாமியக் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.

2006ல் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலி ஆக்கிரமிப்பு படைகள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் விரட்டியடிக்கப்பட்டன. இதைப் போன்று ஒரு வரலாற்று நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

2008 மார்ச் 3 ஆம் தேதி மூர்க்கமான இஸ்ரேலியத் துருப்புகள் வீரப் போராளி களான ஹமாஸின் பதிலடியை எதிர் கொள்ள முடியாமல் காஸாவை விட்டு காலி செய்துள்ளனர். சமாதான ஆர்வலர் கள் கெஞ்சியபோது முரண்டு பிடித்த இஸ்ரேல், ஹமாஸின் பதிலடிக்குப் பிறகு ஓட்டம் பிடித்துள்ளார்கள்.

படுகொலைகளைப் புரிந்த பாதகர்கள் பின்வாங்கி ஓடினார்கள். உலகின் மிகமோசமான ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் காஸாப் பகுதியை விட்டு தனது ராணுவத்தை திரும்பப் பெற்றது.

பாலஸ்தீனர்களின் பேராதரவுப் பெற்ற மக்கள் இயக்கமான ஹமாஸ் நாடாளு மன்றதைக் கைப்பற்றியது. தூய்மையான ஆட்சியையும் வழங்கி வருகிறது. பாலஸ் தீனர்களது வெற்றியின் வீச்சைகண்டு பொறுக்காத இஸ்ரேலும், அமெரிக்காவும் ஹமாஸுக்கு வாக்களித்த அப்பாவி பாலஸ்தீன மக்களை கொடூரமாக தண்டித்தன.

பாலஸ்தீனத்தில் செல்வாக்கிழந்த மற்றொரு இயக்கமான ஃபதாஹையும் தனது கைப்பாவையாக மாற்றிக் கொண்டு பாலஸ்தீன மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர்.

ஹமாஸின் செல்வாக்குப் பெற்ற காஸா பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் மறுக்கப்பட்டன.

வான் தாக்குதலில் பச்சிளம் பாலகர்கள் உட்பட பல அப்பாவிகள் கொல்லப்பட்ட னர். வாழ்வாதாரங்களைத் தேடி அப்பாவி பாலஸ்தீன மக்கள் காஸா எல்லையைத் தாண்டி எகிப்தில் நுழைந்தனர். வெள்ள மாய் புகுந்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

தடுப்புச் சுவர்கள் உடைக்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களில் இஸ்ரேலின் வான்தாக்குதலில் 116 அப்பாவி பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 22 பேர் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகர்கள் என்பது நெஞ்சை உலுக்குகிறது.

பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் அருகேயும் குண்டு வீசப்பட்டுள்ள விமானங்களும் ராக்கெட்களும் சீறிப்பாய்ந்து கவச வாகனங்களும் நெருக்கத் தொடங்கின.

அடர்ந்த இருட்டில் மெழுகுவர்த்தி ஒளியில் குழந்தைக் கொழுந்துகள் தங்கள் பள்ளிப் பாடங்களை படிக்க நேர்ந்தது.


பாலஸ்தீன மக்களின் அவலநிலை குறித்து தாங்கள் மிகவும் வேதனை அடைவதாகவும் ஆனால் ஹமாஸால் தான் பிரச்சினை எனவும் நடுநிலையான
(!) கருத்தொன்றை உதித்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீஸா ரைஸ்.

இந்திய விண்வெளி ஏவுதளத்திலிருந்து இஸ்ரேலின் உளவு செயற்கை கோள் ஏவப்பட்டதின் பிறகே பாலஸ்தீ னின் காஸாப் பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட உலகமே கைவிட்ட நிலை யில் பாலஸ்தீன மக்களின் துயரவாழ்க்கை தொடகிறது.

இந்நிலையில், 2008 மார்ச் மூன்றாம் தேதி அதிகாலையில் இஸ்ரேல் படைகள் இடத்தைக் காலி செய்தன.

முதலாவதாக காஸாநகரின் வடக்குப் பகுதியான ஜபலிய்யா அகதி முகாமிலிருந்து இஸ்ரேலின் கவச வாகனங்கள் திரும்பத் தொடங்கின.

இஸ்ரேலின் திடீர்பின் வாங்கலுக்கு ஹமாஸின் பதிலடியே காரணம் என வளைகுடாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரே லின் கடுமையான தாக்குதலுக்கு மோசமாக தாக்கப்பட்ட ஹமாஸ் போராளிகளிடம் இருந்து மிகமோசமான பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை.

இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரான ஆஸ்க்லான் குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகளின் கட்யூஸா ராக்கெட்டுகள் முதல்முதலாக சீறிப்பாயத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் காஸாப் பகுதியை விட்டும் திரும்பத் தொடங்கின.

அவர்களும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்தால் நாங்கள் தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேலிய ராணுவப் படையின் முக்கிய அதிகாரி கூறியதாக இஸ்ரேலின் பிரபல ஹாரெட்ஸ் நாளேடு குறிப்பிடுகிறது. இந்த அறிவிப்புக்கு பின்னரும் ஹமாஸின் 33 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை நோக்கி பாய்ந்துள்ளன.

காஸா எப்போதுமே எதிரிகளின் கல்லறையாக இருக்கும் அதில் மாற்ற மில்லை என மூத்த ஹமாஸ் தலைவர் அபூ ஜெôஹ்ரி தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸின் ராக்கெட்டுகள் தான் இஸ்ரேலின் பெரும்பாலான ஆட்டத்தை நிறுத்தியிருப்பதாக இஸ்ரேலின் ஊடகங் கள் குறிப்பிட்டுளளன.

தற்போது இஸ்ரேலிய அமைச்சர் அமி அய்லோன் வெளியிட்டிருக்கும் கருத்து சர்வதேச அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் கவுரவம் பார்க்காமல் ஹமாஸ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதற்கு எகிப்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும். அதுவே இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப வழிவகுக்கும். என அமி அய்லோன் தெரிவித்ததோடு 5 ஆம் தேதி கூட்டப்படவுள்ள இஸ்ரேலிய அமைச்சர வைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக் கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸை அங்கீகரிக்க மறுத்து. அழிச்சாட்டியம் செய்து வந்த இஸ்ரேல் ஹமாஸிடம் சமரசம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஹமாஸ் போராளிகளுக்கு போர்க் களத்தில் கிடைத்த முக்கிய வெற்றியாக இது கருதப்படுகிறது. வாழ்க பாலஸ்தீனம்

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my site, it is about the CresceNet, I hope you enjoy. The address is http://www.provedorcrescenet.com . A hug.

Web Counter Code