இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, May 19, 2007

சதாமுக்கு வலித்திருக்குமே வாப்பா...அபூசாலிஹ்


சதாமுக்கு வலித்திருக்குமே வாப்பா...அபூசாலிஹ்
துரோகிகள் சூழ்ந்து நிற்க, அந்த ஒற்றை மனிதன் கம்பீரமாக நடந்து சென்று மரணத்தை எதிர்கொண்ட காட்சி உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது மட்டு மின்றி, அதற்குக் காரணமான காட்டுமிராண்டிகளின் மீதான ஆத்திரமும் காட்டுத் தீயாக உருவெடுத்தது.
தியாகத் திருநாளன்று அந்த வீரபூமியின் மகிழ்ச்சிக்கு தீ வைத்த தீயவர்களின் செயல் கண்டு உலகம், குமுறும் எரிமலையாய் மாறியது. கண்டன ஆர்ப்பாட்டங் களும், கண்டனக் கருத்தரங்குகளும், ஆர்ப்பரிப்பு பேரணியும் போர்ப்பரணி பாடின.
இவை மட்டுமே மாவீரன் சதாம் படுகொலையின் முதல் எதிர்வினைகள் என நாம் எண்ணியிருந்தோம். ஆனால் சதாம் படுகொலை பிஞ்சு உள்ளங்களில் விபரீத எண்ணங்களை விதைத்து சமூக ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதயத்தை நொறுக்கச் செய்யும் அந்த விபரீத நிகழ்வு செய்திகள் செவியுறு வோரை வேதனையின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
சதாம் தூக்குக் கயிறை மாட்டும் முன்பு, வீர உரை நிகழ்த்தி, கம்பீரமாக மரணத்தை எதிர்கொண்ட அந்தக் காட்சிகள் உலகம் முழுவதும் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டன. அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் பாதிக்கப்பட்ட இளஞ்சிறார்கள், சிறுமிகள் லி அதைப் போலவே தாங்களும் தூக்குக் கயிற்றினைக் கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த திடுக்கிடும் தகவல்கள் சவூதி அரேபியா விலிருந்து வெளிவரும் முன்னணி செய்தி ஏடான 'அல் ஹயாத்' வெயிட்டிருக் கிறது.
இதுவரை உலகம் முழுவதும் எட்டு பிஞ்சுகள் இந்த விபரீத முடிவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதி கிராமமான சட் லூயிஸைச் சேர்ந்த இஸத் அக்தியின் 12 வயது மகன் அலிஷாத் அக்தி சதாம் ஹுஸைன் உயிர் துறக்கும் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு கண்ணீருடன் தொடர்ந்து கேள்வி களால் துளைத் திருக்கிறான். எப்படி சதாமை தூக்கிலிட்டார்கள்? சதாமுக்கு வலித்திருக்கும் இல்லையா வாப்பா? லி எனக் கண்ணீருடன் அலிஷான் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். அலிஷானின் பெற்றோர் வீட்டின் மற்றொரு பகுதி யில் இருக்க, வீட்டின் தட்டுமுடடு சாமான்கள் வைத்திருக்கும் அறையில் சதாம் ஹுஸைனைப் போல் தூக்கு கயிற்றை மாட்ட முயற்சித்து உயிரை விட்டிருக் கிறான். இத்தகவலை பொங்கும் கண்ணீ ருடன் அலிஷான் அக்தியின் இறுதி ஊர்வலத்தில் அவரின் தந்தை இஸத் அக்தி ஆஎட செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.
இவ்வாறே, ஏமன் நாட்டில் 13 வயது ஜூனியர் ஹைஸ்கூல் மாணவன், சதாம் ஹுஸைனைப் போல் கயிற்றை மாட்டி உயிரை மாய்த்துக் கொண்டான். இந்தச் சிறுவனும் சதாமின் தூக்கு மேடைக் காட்சியைக் கண்டு கதறிய நிலையிலேயே இருந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர் தலைநகர் சானாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது அந்தக் கொடூரக் காட்சியைக் கண்டனர். வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தங்கள் செல்வ மகன் பாரம்பரிய அரபு உடை யணிந்து தூக்கில் தொங்குவதைக் கண்டதாக அந்தச் சிறுவனின் ஒன்றுவிட்ட சகோதரன் யஹ்யா அல் ஹம்மாதி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் காவல்துறையினர் இதுகுறித்த உண்மைத் தகவல்கள் வெளிவர விடாமல் கட்டுப்பாடு விதித்ததாக தகவல்கள் வெளியாயின.
சவூதி அரேபியாவின் வடகிழக்குப் பகுதி நகரில் 12 வயது சிறுவன் ஒருவன் இதேபோன்ற முடிவினை எடுத்ததாக அல் ஹயாத் தெரிவிக்கிறது. நியூயார்க்கில் தனது போர்வையில் உள்ள நாடாவை கழுத்தில் சுருக்கிட்டு படுக்கையிலேயே ஒரு பாலகன் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் முபஸர் அலி என்ற 9 வயது சிறுவன், சதாம் கொலைக் காட்சி யைத் தொலைக்காட்சியில் கண்டு, அதைப் போல் செய்து, உயிரை இழந்துள்ளான். இந்த சிறுவனுக்கு கச்சிதமாக சுருக்கு மாட்ட இவனது 10 வயது அக்கா உதவி இருக்கிறாள்.
அல்ஜீரியாவில் பள்ளிக்கூட சிறுவர்கள் சேர்ந்து நிற்க 12 வயது சிறுவன் சதாம் படுகொலைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விபரீத முயற்சியில் இறங்கி உயிரைப் பறிகொடுத்துள்ளான்.
ஜனவரி 4ஆம் தேதி இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 15 வயது மாணவி மின் விசிறியில் தூக்கிலிட்டு மாண்டு போனாள். சதாம் மறைந்த 30ஆம் தேதி சனிக்கிழமை முதல் சாப்பிடாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மட்டுமே பார்த்த அந்த அப்பாவிச் சிறு பெண் இந்த விபரீத முடிவுக்கு வந்ததாக அவரது தந்தை தாளாத துயரத்துடன் தெரிவித் துள்ளார்.
அமெரிக்க அழிவுநடவடிக்கைகளின் விளைவுகள் சர்வதேச சமூகத்தை இந்த அளவுக்கு பாதித்திருப்பதாகவும், இது மிகவும் கவலைக்குரிய செயல் என்றும் சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பிஞ்சுகளின் நெஞ்சுகளில் கூட விரக்தியையும் விபரீதத்தையும் விதைத்த அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் கொடுஞ்செயலுக்கு உலகம் தனது தண்டனையை விரைவில் வழங்கியே தீரும் என்பதில் ஐயமில்லை. நடேன்கேஸ்லவ் என்ற அட்லாண்டா எமோரி பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் கூறியதைப் போல் அமெரிக்கா தனது வக்கிரத்தையும் வன்மத்தையும் ஏற்றுமதி செய்து வருகிறதா? தனது அழிவுச் செயலுக்கு இழி தண்டனையை அமெரிக்கா பெறுவது எப்போது?
குண்டுவீச்சில் அப்பாவி மழலைகளை சாகடித்த ஏகாதிபத்திய பயங்கரவாதிகள் மண்ணுரிமை வீரர்களைப் படுகொலை புரிந்து அந்நாட்டின் மழலைகளையும் மனோதத்துவ ரீதியாகப் பழிவாங்கத் துடிக்கின்றனர்.
இந்நேரத்தில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த சம்பவம் சற்றே புன்முறுவலை வரவழைக்கிறது.
போர்த் தளபதிகளின் உடையுடன் 42 சிறுவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு ஜோத்பூர் நகர் முழுவதும் வந்து சதாம் ஹுஸைனைப் புகழ்ந்தும், அமெரிக்க ஏகாதிபத்திய திமிரை வீழ்த்துவோம் என்ற வீர முழக்கமிட்டும் சென்றுள்ளனர். இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இனி வருவது தான் ஆச்சரியம். போர்ப்படைத் தளபதிகள் போல் உடையணிந்து ஊர்வலம் வந்தவர்கள் அனைவரும் சதாம் ஹுஸைன்கள்தான். ஆம் அவர்கள் அனைவரின் பெயரும் சதாம்தான். முதல் வளைகுடா போர்க் காலத்திலிருந்து அந்த ஊரில் பிறந்த குழந்தைகளுக்கு சதாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சதாம்களின் ஊர்வலத்தை தோஹித் அஹமத் கான் ஒருங்கிணைத்தார்.
இதில் மூன்று வயது குட்டி சதாமும் பங்கேற்று அமெரிக்க ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராக வீர முழக்கமிட்டான். ஒரு சதாம் மறைந்தார், உலகெங்கும் பல சதாம்கள் உலாவரத் தொடங்கி விட்டனர்.
சதாமின் கடைசி நிமிடங்கள் உண்மை என்ன?
ஊடகங்களின் வர்த்தகப் பசியில் உண்மைகள் உண்டு செறிக்கப்படுகிறது என்பது உலகம் அறிந்த ஒன்று. சதாம் தூக்கி­டப்பட்ட அரை மணி நேரத்தில் அந்த காட்சி தொகுப்பு ஊடகங்களின் வழியே உலகத்தின் பார்வைக்கு வந்தது. குழந்தைகளும், இதயம் பலகீனமும் உள்ளவர்களும் இதனைக் காணவேண்டாம் என்ற அறிவிப்பு எதுவும் இல்லை. அந்த காட்சித் தொகுப்பு, ஒ­ப்பதிவுகள் நீக்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டது. ஆனால் சதாமுக்கும் அவரது எதிரிகளுக்குமிடையே கடும்விவாதங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின. 'குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிக்கை, ''மரணத் தருவாயிலும் எதிரியின் பெயரை உச்சரித்தார் சதாம்'' என்ற சொற்றொடரை முகப்பில் வெளியிட்டிருந்தது. பா. ராகவன் எழுதிய அது தொடர்பான கட்டுரையில் சதாம் 'முக்ததா' என்பவரது பெயரைக் கூறினார். முக்ததா என்பவர், இளம் ஷியா போராளியான முக்ததா அல் சத்தரின் தந்தை, அவரை சதாம் கொன்று விட்டார். அதற்குப் பழிவாங்கவே உன்னை தூக்கில் போடுகிறோம் என்று சதாமை பார்த்து கூறியுள்ளார்கள். சதாமும் அவர்களைப் பார்த்து, என்ன முக்ததா முக்ததா? என்று கோபத்துடன் கேட்டார் என்பது போன்றும் எழுதியிருந்தது.
சதாமின் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டுவது வரைதான் முதல் நாள் காட்சி வெளியிடப்பட்டது. ஆனால் செல்போனில் பிடிக்கப்பட்ட சதாமின் கடைசி நிமிடத் துளிகள் மறுநாள் தான் வெளியாயின. அதில் சதாம், தூக்கு மேடையில் நின்றவாறு, இஸ்லாமிய இறை நம்பிக்கையை ஒப்புக் கொள்ளும் வசனங்களை உச்சரிக்கும் ஒ­ப்பதிவுகள் அதில் வெளியாயின துல்லியமாகவும் கேட்டன. இந்த செல்போன் படம் மிக ரகசியமாக பிடிக்கப்பட்டு வெளியானது. அதே நேரம், சதாமை பார்த்து இழிவுபடுத்தும் வார்த்தைகளை, நீதியை (!) நிறைவேற்ற வந்த, அமெரிக்க தயாரிப்பு அரசு பிரதிநிதிகள், கீழே நின்று கோஷ மிட்டுள்ளனர். இத்தகைய கொடும் செயல்களால் ஒரு நாட்டின் அதிபர் இழிவுபடுத்தப்பட்டுள்ளார் என்பதை கண்டிக்க மனமில்லாத வக்கிரபுத்தி கொண்ட ஜார்ஜ் புஷ், சதாமை கொஞ்சம் கண்ணியமாக தூக்கில் போட்டிருக்கலாம் என்று திமிராகப் பேசி இருக்கிறார். ஈராக்கின் எடுபிடி அரசு அதற்காக வருத்தம் தெரிவிக்காமல், அந்த காட்சி எப்படி வெளியானது என்று விசாரணை நடத்தி வருகிறது.
இவர்கள் தங்களின் பழிவாங்கும் உணர்ச்சிமிகையால் சர்வதேச சமுகத்தின் முன், 'இஸ்லாமிய நெறிகளை' இழிவுபடுத்தி வருகின்றனர். ஏனைய இஸ்லாமிய நாடுகளும், மார்க்க அறிஞர்களும், பொது சமுகமும் இதனை கண்டிக்க வேண்டும். கையில் திருக்குர்ஆனோடும்,உதட்டில் இறைவசனங்களோடும் சதாம் உயிர் நீத்தக் காட்சி அவருக்கு உலக இஸ்லாமிய மக்கள் மத்தியில் மரியாதையையும், கௌரவத்தையும் ஏற்படுத்தியிருப்பது ஈராக்கின் ஆக்கிரமிப்பு அரசுக்கும், அமெரிக்காவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. செல்போன் காட்சி வெளியாகியிராவிட்டால் சதாம் இறைநம்பிக்கையற்றவர் என்பதும், எதிரியின் பெயரைத்தான் இறுதியாக உச்சரித்தார் என்று குமுதம் ரிப்போட்டரில் பா.ராகவன் எழுதிய தகவலும் நம்பத்தகுந்த செய்திகளாகியிருக்கும்

No comments:

Web Counter Code