இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, February 3, 2009

ஜார்ஜ் புஷ்ஷுக்கு அமெரிக்காவிலும் ஷூ மரியாதை?



அமெரிக்க அதிபராக இருந்து ஓய்வு பெற்ற ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஈராக்கில் கிடைத்த கடைசி வழியனுப்பு மரியாதை உலகெங்கும் பரபரப்பை தோற்றுவித்தது.

இந்நிலையில் அவர் வெள்ளை மாளிகையி­ருந்து வெளியேறு வதற்கு முன்னதாக அவரது அலுவலக அறைவாசலில் பழைய செருப்புகள் வீசப்பட்ட தகவலை அமெரிக்க ஊடகங்கள் சுவாரஸ்ய மாக குறிப்பிட்டுள்ளன.

போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் 500 பேர் வெள்ளை மாளிகையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் 50 ஜோடி செருப்புகள் மட்டுமே வீசப்பட்டதாக வாஷிங்டன் பீஸ் சென்டரின் அமைப்பாளர் ஜமில்லா எல் ஷஃபி கவலை தெரிவித்திருந்தார்.

நியூயார்க் டைம்ஸ் சிபிஎஸ் நியூஸ் எடுத்த சர்வேயின்படி 73 சதவீத மக்கள் புஷ்ஷை ஒரு நல்ல அதிபராக மட்டு மின்றி ஒரு மனிதராகக் கூட கருத முடியாது என தெரிவித்துள்ளனர்.

ஈராக்கின் மீது காலனி ஆதிக்கத்தை நடத்திய புஷ்ஷின் மீது காலணி மரியாதை நடத்திய ஷூ வீரன் முன்ததர் அல்ஜைதிக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் முன்ததர் அல் ஜைதியின் நிலைமை என்னவென்பது குறித்து சர்வதேச மனித உரிமை ஆர்வலரும் சட்டவல்லுநரு மான மவுரோ போகி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வாயிலாக ஈராக்கின் பொம்மை அரசிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன் சுவிட்சர்லாந்தில் அவருக்கு அரசியல் அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாகவும் மவுரோ தெரிவித்திருக்கிறார்

No comments:

Web Counter Code