இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, February 3, 2009

மோடிக்கு சிபாரிசு

அம்பானி, மிட்டல், டாடாவுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம்!



சர்ஜுன்

இனப்படுகொலையின் சூத்திரதாரி நரேந்திர மோடி பிரதமரானால் ரொம்ப நல்ல பிரதமராக விளங்குவார் என உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சிவரும் இந்தியாவின் ஏகபோக முதலாளிகளாக வர்ணிக்கப்படும் ரிலையன்ஸ் அம்பானி மற்றும் மிட்டல் வகையறாக்கள் வெளியிட்ட கருத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பலைகள் பெருகி வருகின்றன.


இன சுத்திகரிப்புக்கு மூலகாரணமான மோடியைப் புகழ்ந்து தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என பல்வேறு சமூகநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


உலகளாவிய முதலீட்டாளர்களின் உச்சி மாநாடு ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்றது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் அனில் அம்பானி, சுனில் மிட்டல், ரட்டன் டாடா முதலியவர்கள் மோடிக்கு ஆதரவாக வரிந்து கட்டிக் கொண்டு தெரிவித்த கருத்துகள் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


இனப்படுகொலையாளரை எதிர்காலப் பிரதமருக்கு தகுதியானவர் என பொருத்தமில்லாமல் புகழ்ந்தது சகித்துக் கொள்ள முடியாதது என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்திருக்கிறார். தொழிலதிபர்கள் கருத்து முழுக்க முழுக்க தவறானது என்றும் நுஸ்ரத் அலி தெரிவித்தார்.


பாசிஸ்டுகளுக்கும் தொழிலதிபர்களுக்குமான இடைவெளி மிகவும் குறுகியதாக இருக்கிறது. பாசிஸவாதிகளும் தொழிலதிபர்களும் இந்தியாவில் மிகவும் நெருங்கி வருகின்றனர், இது நாட்டிற்கு நிச்சயம் ஒரு கெட்ட செய்திதான் என்றும் நுஸ்ரத் அலி தெரிவித்தார். அனில் அம்பானி சேர்மனாக இருக்கும் ஹனுஹழு நிறுவனங்கள், சுனில் மிட்டலை சேர்மனாகக் கொண்டிருக்கும் பாரத் குரூப் (குறிப்பாக ஏர்டெல் போன்ற மொபைல் சேவைகள்) ரட்டன் டாடாவை தலைவராகக் கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களை பாசிசத்தையும் மதவாதத்தையும் எதிர்க்கும் நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நாட்டு மக்கள் அனைவரும் தொழிலதிபர்களின் பொறுப்பற்ற அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


நரேந்திர மோடியின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்காதீர்கள், அவரது மறுபக்கம் இருள்மயமானது என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த டாக்டர் காசிம் ரசூல் இல்யாஸ் தெரிவித்திருக்கிறார்.


நாட்டு மக்கள் பாசிச சக்திகளிட மிருந்தும், பாசிசத்துக்கு ஆதரவாக புறப்பட்டிருக்கும் தொழிலதிபர்களையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என அகில இந்திய மில்லி கவுன்சிலின் தலைவர் அப்துல் வஹாப் கில்ஜி தெரிவித்தார்.


முஸ்லிம்கள் ரிலையன்ஸ் மொபைல் களையும், பெட்ரோல் தயாரிப்புகளையும் புறக்கணிக்கத் தயாராக வேண்டும் என ஹைதராபாத்தை தளமாகக் கொண்டு விளங்கும் மஜ்லிஸ் பச்சாவோ தஹ்ரீக் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு ஹைதராபாத்தில் ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்தியது. ஹைதரா பாத் பகுதியின் சைதாபாத்தில் உள்ள உஜ்லெஷா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் அங்கிருந்த ரிலையன்ஸ் ஃப்ரெஷ் நிறுவனத்தை முற்றுகையிட்டு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முஹம்மத் அம்ஜத்துல் லாஹ்கான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனில் அம்பானியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

மதவெறி, இனப்படுகொலை செய் யும் சக்திகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த பணமுதலைகளுக்கு நாடெங் கும் எதிர்ப்பு வலுக்கிறது

No comments:

Web Counter Code