இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Sunday, August 5, 2012

டெல்லி: பூமியில் புதைந்த பள்ளிவாசல் - மெட்ரோ ரயிலுக்காக தோண்டும்போது வெளிப்பட்டது - தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு


டெல்லி: பூமியில் புதைந்த பள்ளிவாசல் - மெட்ரோ ரயிலுக்காக தோண்டும்போது வெளிப்பட்டது - தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு

E-mailPrintPDF
டெல்லி மெட்ரோ ரயில் வழிப்பாதைக்காக பூமிக்கடியில் தோண்டும்போது பள்ளிவாசல் ஒன்று சிதிலமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டது.
17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற அக்பராபாதி மஸ்ஜித் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் முஸ்லிம்கள் குவிந்தனர். பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
வெள்ளிக்கிழமை அன்று டெல்லி அக்பராபாதி மஸ்ஜிதை நோக்கி திரண்ட முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி காவல்துறை திணறியது. கூட்டத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க முயன்ற காவல்துறையினர் மீது கூடியிருந்த பொதுமக்கள் கல்வீச்சு நடத்தினர்.
அக்பராபாதி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செளிணிய முஸ்லிம்கள் குவிந்தனர். அதேவேளையில் மத்திய தொல்லியல் துறை, பள்ளிவாசலைக் கைப்பற்ற முயற்சித்தது. இந்நிலையில் டெல்லியில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் சாஹெப் இக்பால், டெல்லி மாநில அமைச்சர் ஹாரூண் யூசுப், தொல்லியல் துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட சமாதானக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அக்பராபாதி மஸ்ஜிதை தற்போதைய நிலையிலேயே பராமரிக்க வேண்டும். வேறு எந்தக் கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என முஸ்லிம்களுக்கும், தொல்லியல் துறைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி அக்பராபாதி மஸ்ஜித் மீட்கப்படுமா? இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது

No comments:

Web Counter Code