
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!
-அபூசாலிஹ்
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நிகழ்ந்த தியேட்டர் குண்டுவெடிப்பு சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் விஷ்னுதாஸ் பவே ஆடிட்டோரியத்திலும், தானேயில் உள்ள கத்காரி ரங்கயாதன் ஆடிட்டோரியத் திலும் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக உடனடியாக செய்தி வெளியிட்ட சில 'முந்திரிக் கொட்டை' பத்திரிகைகள் வழக்கம்போல் முஸ்லிம்களை வேத னைப்படுத்தும் விதமாகவும், நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் விதமாகவும் இவர்களே சிறப்பு புலனாய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்றும் விஷமச் செய்திகளை வெளியிட்டன. காவல்துறையினரும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதைப் போன்று அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதே சந்தேகக் கண் கொண்டு பார்த்ததாக தகவல்கள் பரவின.
பின்னர், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையினரின் தீவிர புலனாய்வுக் குப் பின், நாட்டின் பழம்பயங்கரவாத இயக்கமான சங்பரிவார் இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட தகவல்கள் அம்பலமாயின.
இதனைத் தொடர்ந்து நான்கு சங்பரிவார் பயங்கரவாதிகள் தீவிரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப் பட்டனர்.
1. மங்கேஷ் தினகர் நிகாம்
2. ரமேஷ் ஹனுமந்த் காத்கரி
3. சந்தோஷ் ஆங்ரே
4. விக்ரம் பவே
என்ற நால்வரும் கைது செய்யப் பட்டனர்.
முதலில் இவர்கள் பஜ்ரங்தள் பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறினர். ஆனால் தற்போது ஜனஜாகுருதி சமிதி மற்றும் சந்தன் சந்த்ஸா என்ற தீவிர இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் என பிடிபட்ட பயங்கரவாதிகள் வாக்கு மூலம் அளித்தனர்.
பொதுவாகவே பிடிபட்ட உடன் தங்களது தாய் இயக்கத்தை காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு பெயரைச் சொல்வதே இவர்களது வழக்கம். இது கோட்சே காலத்திலிருந்தே தொன்று தொட்டு இருந்துவரும் வழக்கம். அந்த பாணியையே இப்போதும் சங் பயங்கர வாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சதியில் ஈடுபட்ட சங்பரிவார் பயங்கரவாதிகளை தீவிரமாக விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல் கள் வெளிவந்ததைத் தொடர்ந்து பயங்கரவாத குற்றவாளிகளின் வீட்டில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
பயங்கரவாதிகள் வீடுகள் அமைந் திருக்கும் ராய்காட் மாவட்டம் வர்சாகிரா மம் மற்றும் பென் கிராமத்தில் தீவிரவாத தடுப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிக்கியவை:
1. அம்மோனியம் நைட்ரேட் பவுடர் (பாக்கெட் பாக்கெட்டாக)
2. 20 டெட்டனேட்டர்கள்
3. ஏராளமான ஜெலட்டின் குச்சிகள்
4. டைமர்கள்
5. வோல்டேஜ் மீட்டர்கள்
6. இரண்டு ரேடியோ சர்க்யூட்கள்
7. ரிமோட் கண்ட்ரோல்கள்
8. ரிவால்வர்கள்
9. 92 தோட்டாக்கள்
சங்பரிவார் பயங்கரவாதிகள் முழுமை யாக அம்பலப்படுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
தேசத் துரோகிகள் தண்டிக்கப்படுவார்களா?
No comments:
Post a Comment