இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, March 5, 2008

வருடந்தோறும் 10 இலட்சம் மக்களைக் கொல்லும் அரக்கன்!

சப்ரன் ஹபீப்



இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மக்கள் புகையிலை என்னும் அரக்கனுக்கு அடிமையாகி பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை எந்த வடிவில் பயன் படுத்தினாலும் அது பயன்படுத்து வோரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். 10ல் ஒரு பகுதி ஆண்களின் மரணத் திற்கு புகை பிடிப்பது முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடிப்பதால் மரணமடையும் 10 லட்சம் மக்களில் 70 சதவீதம் பேர் இளவயதிலேயே மரணத்தை தழுவு கிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்தி குறிப்பிடுகிறது.

யார் சிகரெட்டை தொடர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள். பீடி புகைக்கும் ஆண்கள் 6 ஆண்டுகளை தங்கள் வாழ்நாளில் இழக்கிறார்கள். பீடி புகைக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 8 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் மரணத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பான ஆ சஹற்ண்ர்ய்ஹப்ப்ஹ் தங்ல்ழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ஸ்ங் ஈஹழ்ங் லி ஈர்ய்ற்ழ்ர்ப் லி நற்ன்க்ஹ் ர்ச் நம்ர்ந்ண்ய்ஞ் ஹய்க் உங்ஹற்ட் ண்ய் ஒய்க்ண்ஹ லிவும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் பட்ங் சங்ஜ் ஊய்ஞ்ப்ஹய்க் ஓர்ன்ழ்ய்ஹப் ர்ச் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங் என்ற பத்திரிக்கையும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன.
பொதுவாக ஆண்களில் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்கும்போது 30 முதல் 69 வயது வரை மரணம் அடைபவர்களில் கணிசமானோர் புகை பிடிப்பவர்கள்தான் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஒன்று புகைப் பிடிப்பதால் நிகழும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியாவில் 60 கோடி மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் ஆவர். நமது இளைய தலைமுறையை புகையிலை அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி யுள்ளது, அதற்கென சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தி மரணமடைபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் வெறும் இரண்டு சதவீதம் தான். ஆனால், சீனாவில் 9 சதவீதத்தினர் தங்களை புகை பிடிப்பதிலிருந்து மீட்டுக் கொண் டுள்ளனர்.

பிரிட்டனில் புகை பிடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். இது 20 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகும். 2003ல் ஜெனிவாவில் கூடிய மாநாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தங்கள் நாடுகளில் பின்பற்றப்போவதாக 183 நாடுகள் அறிவித்திருக்கின்றன.

No comments:

Web Counter Code