இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, November 28, 2007

tamilnadu cm kajzhainchar speech in nandri arivippu maanaadu

தனி இட ஒதுக்கீடு கொடுத்ததற்காக நடைபெறும் நன்றி அறிவிப்பு மாநாட்டின் தலைவர் ஜனாப் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களே, வரவேற்புரையாற்றிய ஜனாப் ஹைதர் அலி அவர்களே, திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றிய ரிஃபாயி அவர்களே, விஞ்ஞானி அப்துல் ஜலீல் அவர்களே, நன்றியுரையாற்ற இருக்கும் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர் நல்லக்கண்ணு அவர்களே, பேராயர் சேவியர் அருள்ராசு அவர்களே, எஸ்றா சற்குணம், பீட்டர் பெர்னாண்டோ அவர்களே, தொகுப்புரையாற்றும் தமிமுன் அன்சாரி அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே...
நன்றி கூறுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்



அரங்கத்தின் உள்ளும் புறமும் பல்லாயிரக்கணக்கிலே குழுமியிருக் கிறீர்கள் என்ற நிலையை நானும் அறிவேன். இது நம்முடைய உள்ளமும் புறமும் நிரம்பியிருக்கின்றது என்பதற்கு அடையாளம். உள்ளும் புறமும் நிரம்பியிருந்தால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உள்ளே காலியாக இருந்து, வெளியேயும் அதே நிலை என்றால் நமக்கு மக்கள் தருகின்ற ஆதரவு எவ்வளவு என்ற கணக்கை சுலபத்திலே எடுத்துவிட முடியும். ஆனால் இப்போதெல்லாம் நாட்டிலே நன்றி கூறுகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, எடுத்துக்காட்டாக இந்த விழா அமைந் திருக்கின்றது.

தமிழகத்தில் நன்றி கூறுகின்றவர் களா? அடடே, ஆச்சர்யமாக இருக் கிறதே என்று நாம் நினைத்த காலம் உண்டு. இப்போது நன்றி கூறுகின்றவர்கள் இவ்வளவு பேரா? ஆயிரக்கணக்கிலா, இலட்சக்கணக்கிலா? என்று நாம் மகிழ்ச்சி யடையக் கூடிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இது எண்ண கணிதம்



ஒன்றைக் கவனித்தால் வேடிக்கையாக அல்ல, ஏதோ ஒரு குறிப்பை உணர்த்து வதாக அமைந்திருக்கின்றது. இன்று விழா நடைபெறும் நாள் 24ஆம் தேதி. சிறுபான்மை சமுதாயத்தாருக்கு, முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவ பெருமக்களுக்கும் இடஒதுக்கீடு சம நிலையிலே இருவருக் கும் அளிப்பது என்ற முடிவெடுத்து, அதை முதன்முதலாக அறிவித்தது, கவர்னர் பேரவையிலேயே உரையாற்றி யது போது தான்லிஅப்படி அவர் உரையாற்றியது 24லி05லி2006. கவர்னர் உரையில் நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி இந்த அரசு விரைவில் சிறுபான்மை சமுதாயத்தினருக் கான இடஒதுக்கீட்டைச் செய்யுமென்ற செய்தியை அறிவிப்பாக வெளியிட்டது 24.05.2006. ஆளுநர் உரையிலே அறிவித்ததும் 24, அது நிறைவேறி நன்றி கூறுவதும் 24.

இன்னொரு ஒற்றுமை. நம்முடைய தமுமுக பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்புரையாற்றும்போது சொன்னார், 1995ஆம் ஆண்டு தமுமுக உதயமாயிற்று என்று. நாம் இந்த நான்கு எண்களையும் கூட்டிப்பார்த்தால் அதுவும் 24. அவ்வளவு ஏன்? நான் பிறந்த ஆண்டே 1924. நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதை இதை விட அழுத்தந்திருத்த மாக, சிறப்பாக எண் வைத்து ஜாதகம் கணிப்பாளர்களே, எண் இல்லாமலே எண்ணத்தை வைத்து இந்த ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கின்றது.

ரத்தத்தில் ஊறிய ஒன்று.

இன்று நேற்றல்ல, நெடுங்காலமாக நாம் உறவு கொண்ட இரு சமுதாயத்தினர். மன்னிக்க வேண்டும். இரு சமுதாயம் என்று சொன்னதற்காகலிஒரு சமுதாயத் தினர் தான்லிஎல்லோருக்கும் சகோதரர்கள் தான்லிசிறுபான்மைச் சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளைப் பெறவேண்டு மென்பதற்காக நீண்டகாலமாக கோரிக்கை வைத்து, குரலெழுப்பி, போராடி இந்த உண்மையை உணர்ந்து உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோமென்றால்லிஅது மன்னிக்க வேண்டும்லியாரும் தவறாக கருதிக் கொள்ளக்கூடாதுலிஇது எங்களு டைய ரத்ததோடு ஊறிய ஒன்று.

1920லி25ம் ஆண்டுகளில் இந்த மாநிலத்தை ஆண்ட கட்சி, முழுமையான பலத்தோடு ஆண்ட கட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒருபுறத்திலே வெள்ளைக்காரர்களுடைய ஆதரவோடும், மக்களுடைய வாக்கு களைப் பெற்றும் நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்ற போதே, இப்போது இடஒதுக்கீடு என்று சொல்கிற இந்தத் தத்துவத்திற்கு , இந்தக் கொள்கைகைக்கு அப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தின் பயனை சிறுபான்மைச் சமுதாயத் திற்கு, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு லிபச்சையாகச் சொல்ல வேண்டுமேயானால் மேலார், உயர்ந்தோர், என்று சொல்லப்படு கின்ற பார்ப்பனர்களை அன்னியில் உள்ள பார்ப்பனர் அல்லாத சமுதாயத்திற் காக நீதி வழங்கிய ஆட்சிதான் லிநீதிக்கட்சியின் ஆட்சி. 1920லி25ஆம் ஆண்டுகளில் எப்படி எங்களுக்கு திடீரென்றுலிகருணாநிதிக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் நினைவு வந்ததென்றால், இது ரத்ததிலே ஊறிய உணர்வு. இன்று நேற்றல்லலிநீங்கள் கூறுகின்ற நன்றி இதற்கெல்லாம் நமக்கு ஆதரவளித்த, மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய துணையாக, வழிகாட்டுதலாக இருக்கின்ற அம்மையார் சோனியா காந்தி அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்லலிபிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடைய ஆதரவோடு மாத்திரமல்ல, குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால்லிநான் அல்ல, என்னுடைய அமைச்சரவை யிலே இருக்கின்ற நண்பர்கள் அல்லலி எங்களையெல்லாம் இப்படிப்பட்ட கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து, நீங்கள் சொன்னவுடன் அதைப் புரிந்து கொள்கின்ற சக்தியையும் அளித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழி இதுலிஎனவே இந்த நன்றியெல்லாம் அவ்வழி செல்ல வேண்டிய நன்றியே தவிர இவ்வழி எனக்குத் தர வேண்டிய நன்றியல்ல. நன்றி கூறியிருக்கிறீர்கள். நான் நன்றிக்கு நன்றி கூறுகிறேன். நன்றி கூறிய உங்களுக்கெல்லாம் நன்றி கூறுகிறேன்.

நலிந்தோருக்கு உதவும் தமுமுக

நம்முடைய வரவேற்புரை ஆற்றிய பொதுச் செயலாளர் (ஹைதர் அலி) குறிப்பிட்டார், நம்முடைய மாநாட்டின் தலைவரிடமும் அதைப் பற்றிய விவரங் களைக் கேட்டறிந்தேன். அவர் களும் 'ஆமாம்' என்றார்கள். இந்த தமுமுக இயக்கம் 1995ஆம் ஆண்டிலே தோன்றிய போது அப்போது ஐந்து ஆம்புலன்ஸ் வண்டிகளோடு பணிகளை ஆற்றியது என்றும், இப்போது 31 ஆம்புலன்ஸ் வண்டிகள் என்றும் சொன்னார்கள். ஆக இந்த இயக்கத்தி னுடைய பணி, ஆக்க வேலை மக்களுக்குத் தொண்டாற்றுவதுலி மக்கள் சமுதாயத்திலே நலிந்த பிரிவினருக்கு நன்மைகளைச் செய்வது, அவர்களுடைய உடனடி உதவிகளிலே ஒன்றாக இயலாதவர்களுக்கு, ஆதரவற்ற வர்களுக்கு, அனாதைகளுக்கு உதவு கின்ற இந்தப் பணியையும் சில கருணை இல்லங்களைப் போல, அன்பு இல்லங்களைப் போல, இந்தப் பணிகளை யும் இவ்வளவு பெரிய இயக்கம், தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கின்ற தமுமுக என்ற இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு அதற்காக மிகக் குறுகிய காலத்திலே ஐந்தாக இருந்த ஆம்புலன்ஸ் வண்டி களை 31, என்ற அளவிற்கு பெருக்கி யிருக்கின்றது என்பது வரவேற்கத்தக்க, மகிழத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.

என் சொந்த செலவில்

ஆம்புலன்ஸ் அதிகமாகப் பயன் படுகின்ற அளவிற்கு நோய்நொடிகள், நலிவுகள் வரவேண்டுமென்று நான் விரும்பவில்லை. ஆனால் வந்த நலிவு களைப் போக்க ஆம்புலன்ஸ் வண்டிகள் தேவை. அப்படிப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டிகளின் உதவிகளை அளிக்க, சில ஆண்டுகளிலேயே லி ஐந்தாக இருந்தது 31 ஆக ஆகியிருக்கின்றது. எனக்கு அவர்கள் நன்றி பாராட்டுகின்ற இந்த விழாவிலே நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பொறுப்பில் உங்களுடைய 31 ஆம்புலன்ஸ் வண்டிகளோடு இன்னும் இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகளை நீங்கள் வாங்கிக் கொள்ள அதற்குரிய நிதி எவ்வளவு என்று இந்த அமைப்பின் சார்பில் தலைவரும், பொதுச் செய லாளரும் எனக்கு எடுத்துச் சொன்னால், என் சொந்தப் பொறுப்பிலே நான் இந்தத் தொகையை வழங்கிலிஇந்த நாள் நம்முடைய நினைவிலே நிற்க வேண்டிய நாள், நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள லி நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறை வேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும் என்ற முறையிலே நான் இதை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் உங்களில் ஒருவன்

நான் சிறப்பு விருந்தினர் என்று இங்கே வாழ்த்துரை வழங்கியவர்கள் எல்லாம் சொன்னார்கள். நான் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன் என்றார்கள். மன்னிக்க வேண்டும், நான் விருந்தினர் அல்ல லி விருந்தினர்களாக உள்ளவர்களையெல்லாம் வரவேற்கின்ற உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி விருந்தினர் என்று சொல்லி, என்னை வேறுபடுத்த வேண்டாம், நீங்கள் வேறு, நான் வேறல்ல என்ற இந்த தத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடிப்போம்.

நாம் தமிழ்நாட்டிலே இன்று நேற்றல்ல, இங்கே என்னை அறிமுகப்படுத்திப் பேசிய நண்பர் (தமிமுன் அன்சாரி) குறிப்பிட்டதைப் போல தாருல் இஸ்லாம் ஒரு கையிலே, குடியரசு பத்திரிக்கை இன்னொரு கையிலே என்ற அளவிற்கு இளம்பிராயத்திலேயே முஸ்லிம் லீக்கின் பிறைக் கொடியை ஒரு கையிலும், திராவிட இயக்கத்தின் கொடியை ஒரு கையிலுமாக வளர்ந்தவன் நான்.

காப்பாற்றிய லுங்கி

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொது வாழ்வுக்கு சொந்தக் காரன். நான் பாண்டிச்சேரியிலே அடிபட்டு, உதைப்பட்டு, உயிர் போய் விட்டது என்று என்னை குண்டர்கள் விட்டு விட்டு சென்ற பிறகு, நான் அங்கிருந்து தப்பித்து பெரியார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும்போது, மீண்டும் யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நான் கட்டிச் சென்ற ஆடை 'லுங்கி' தான் என்பதையும் லி நான் இன்று நேற்றல்ல, இந்த விழாவிற்காக அல்ல, இதை என்னுடைய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தி லேயே குறிப்பிட்டிருக்கிறேன் என்பதைச் சொல்லி லி நாம் ஆடையில், எண்ணத்தில், உணர்வுகளில், ஒன்றுபட்டு நிற்கின்றோம். அப்படிப்பட்ட சமுதாய ஒற்றுமையைப் பேணிக்காக்கின்ற தலைவர்களால் வளர்க்கப்பட்டிருக் கிறோம். ஒரு பக்கத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா. இன்னொரு பக்கத்திலே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இவர்கள் எல்லாம் இணைந்து நம்மை வழி நடத்திச் சென்றிருக் கின்றார்கள். தொடர்ந்து இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு, நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல, 'இந்து முஸ்லிம் சீக் ஈசாயி. ஆபஸ் மே ஹை பாயி பாயி' என்ற அந்தத் தத்துவத்தை இந்தியா விலே கடைப்பிடிப்போம், அதுதான் இந்த விழாவின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டு, நீங்கள் இதயம் மலர்ந்து உங்களுடைய மனம் கனிந்து நன்றியை அரும்புகளாக, மலர்களாக, ஆக்கி என் தலையிலே சொரிந்தமைக்காக என்னுடைய வணக்கத்தை, நன்றியை, மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டுலிஇவைகள் எல்லாம் தொடர்ந்து நான் உங்களுக்கு பணியாற்றுவதற்காக தரப்பட்ட முன்பணம் என்பதைச் சுட்டிக்காட்டி இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கின்றேன்

Friday, November 16, 2007

நிவாரண முகாம்களில் தவிக்கும் முஸ்லிம்களை சோனியா காந்தி ஏன் பார்க்கவில்லை..

வெடிக்கும் வேதனைக் குரல்கள்

தெஹல்கா பதிவுகளின் மூலம் வெளி வந்த உண்மைகள் உலகை உலுக்கின. முஸ்லிம்கள் இதயங்களை எரிஈட்டி கொண்டு கிழித்ததைப் போல வேதனை யில் வெம்பினர். பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு எதிர்த்தன. மோடி அரசுக்கு எதிராகவும், காவிக் கொலைக் கும்பலின் வெறிச் செயலுக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகம் பிரளயமாய் பொங்கியது.

1986லில் உச்ச நீதிமன்ற நீதிபதி இஸ்லா மிய ஷரிஅத்துக்கு எதிராக ஷாபானு வழக்கு விவகாரத்தில் கருத்துக்கள் கூறியதால் முஸ்லிம் அமைப்புகள் ஒன்று திரண்டதற்கு போராட்டங்களை நடத்தின.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் 21ஆம் நூற்றாண்டின் கொடூர இனப்படு கொலையாளனான மோடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

ஜமிய்யத்தே உலமா இ ஹிந்த், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்து உள்ளிட்ட இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தன. முஸ்லிம் அமைப்புகள் அல்லாது பிற அரசியல் அமைப்புகளும் இனப்படு கொலையாளர்களைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டன.

மதவாதத்தை எதிர்ப்பதில் சமரசம் செய்து கொள்ளாத இடது சாரிகளும், 'மோடி, அத்வானிக் கும்பலை கைது செய்ய வேண்டும்' என தெஹல்கா பதிவுகள் வெளியானவுடன் பிரதமரை சந்தித்து தனது குமுறலைக் கொட்டிய லாலுவின் கட்சி யான ராஷ்ட்ரிய ஜனதாதளமே நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

தலைநகர் டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனப்படுகொலை யாளன் மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களால் தினம்தோறும் திணறத் தொடங்கியது.

பயங்கரவாத எதிர்ப்பு இளைஞர் படை என்ற முஸ்லிம் இளைஞர் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்திலும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பங்கேற்றனர். பாஜக, வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தள் உள்ளிட்ட இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் என்றும், இனப்படுகொலையாளன் மோடிக்கு மரணதண்டனை விதித்து சாகும் வரை தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் ஷகீல் ஷைஃபி பேசினார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் நடை பெற்ற ராஷ்டிரிய ஜனதாதளத்தின் கண்டனக் கூட்டத்தில் மோடிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தின் அனைத்து நகரங்களிலும் குஜராத் இனப்படுகொலை குறித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ராம்பூர், சஹரான்பூர், கைரானா, முஷாஃபர் நகர் போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்திலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெஹல்கா பதிவுகள் அம்பலப்படுத்திய மறுநாளே ஹைதராபாத்தில் போராட்டங்கள் வெடித்தன. செப்டம்பர் 25 வியாழன் அன்று ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கிலத் தொலைக்காட்சியிலும், ஆஜ்தக் ஹிந்தி தொலைக்காட்சியிலும் வெளியான மறுநாள் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் வெள்ளிக் கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப்பிறகு திரண்ட மக்கள் தங்கள் குமுறலை வெளியிட்டனர்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடை பெறப் போகிறது. இந்திய அரசியல் சாசனத்தை மீறிய இனப்படுகொலை யாளன் மோடி மீது இதுவரை எவ்வித சட்டப்பூர்வ நடவடிக்கை யையும் மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்யாதது ஏன்? என ஜும்ஆ உரைக்குப் பின் ஹைதராபாத் பள்ளிவாசல் வளாகத்தில் திரண்ட மக்கள் காரசாரமாக தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
''குஜராத் இனப்படு கொலையாளர்கள் குறித்து ஏற்கனவே உலகம் அறிந்துகொண்டது'' தெஹல்கா காட்சிப் பதிவுகளின் மூலம் உலகம் சங்பரிவாரின் பாசிஷ முகத்தை மீண்டும் ஒருமுறை மக்கள் அறிந்து கொண்டார்கள். அவ்வளவு தான் என ஃபதேபூர் ஷாஹி இமாம் டாக்டர் முஃப்தி முகர்ரம் தெரிவித்தார்.

'குஜராத் கோரப் படுகொலைகளின் மூலம் மோடியின் கோர முகம் எப்போதோ வெளிப்பட்டு விட்டது. தற்போது மோடி அரசைக் கலைப்பது, மோடி உள்ளிட்ட இனப்படுகொலையாளர்களை கடுமையாக தண்டிப்பது என காங்கிரஸுக்குத் தான் பரீட்சை நடக்கப்போகிறது. காங்கிரஸ் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது? என்பது தான் இப்போது நம்முன் உள்ள கேள்வி'' என டெல்லி பிரதேச சட்ட மன்றத்தின் துணை சபாநாயகர் சோஹப் இக்பால் கர்ஜித்தார். மோடியையும் அவரது கும்பலையும் தேர்தலில் போட்டியிட தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

மோடி அரசு பொய்யான வாக்கு மூலங்களைக் கொடுத்து உச்ச நீதிமன்றத் தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது என்பதும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக்கீறி சிசுவை வெளியே எடுத்து இருவரையும் கொன்றதையும், உச்சநீதி மன்றத்தில் மறுத்த கயமைத் தனத்தையும், பின்னர் அந்த கிரிமினல்கள் மறுத்து உண்மைகளைப் பேசியதை அடிப்படை யாக வைத்து உச்சநீதிமன்றம் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி மாநிலத்தின் ஜனதாதள எஸ் கட்சியினர் தலைவர் ஹாஜி இக்ராம் ஹஸன் தெரிவித்துள்ளார்.

'இனப்படுகொலையாளன் மோடி மீதும் அவரது கும்பல் மீதும் நடவடிக்கை இனியும் எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்களின் விஷயத்தில் காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும்' என ஹிந்துஸ்தான் எக்ஸ்பிரஸ் என்ற உருது செய்தி ஏடு குறிப்பிடுகிறது.

'முஸ்லிம்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வதை விட, முஸ்லிம் களுக்கு எதிரான நிலையை எடுத்தவர்கள் ஆதரவாளர்களைப் போல நடிப்பவர்கள் அனைவருக்கும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்' என அன்ஸர் ஷா காஷ்மீரி எனும் மார்க்க அறிஞர் தெரிவிக்கிறார்.

''மோடி இழைத்த கொடுமைகள் ஹிட்லர் செய்த குற்றங்களை விட அதிகம்'' என்றார் அன்ஸர் ஷா. மோடியை எதிர்க்கும் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? தேர்தலுக்கு முன்பாகவே இன வெறி மோடியையும் அவரது கும்பலையும் கை விலங்கிட்டு கைது செய்து இழுத்து வரவேண்டும்'' என ஸயீத் ஹமீத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு மத்திய அரசு 'இல்லை' என்பதையே பதிலாக்கினால் 'தெஹல்கா' பதிவுகளால் ஒரு காசுக்கும் பயன் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் மிதவாத ஹிந்துத்துவாவை ஆதரிப்பதாக ஷகீல் சம்ஸி குற்றம் சாட்டினார். மோடிக்கு எதிராக எதையும் செய்ய காங்கிரஸ் நினைக்கவில்லை. தெஹல்கா பதிவுகளின் மூலமாக உண்மை கள் வெளிவந்து விட்டன. இறைவனுக்கு நன்றி என்ற ஷகீல் ஷம்ஸி, சோனியா காந்தி தனது குஜராத் பயணத்தின் போது கொலை வெறியர்களால் கொடூரமாகக் கொன்று எரிக்கப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவியார் ஜாஹியா ஜாஃப்ரியை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந் தார். பின்னர் அந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நிவாரண முகாம்களில் கிடந்து உழலும் அப்பாவி முஸ்லிம்களைப் பார்க்க நேரம் ஒதுக்க வில்லையே ஏன்? என்றும் வினாவிடுக் கிறார். இதிலிருந்தே இவர்கள் மோடியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்பது தெரிந்து விட்டது என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் இனவெறிக் கும்பலுக்கு எதிராக திரளத் தொடங்கி விட்டனர். மத்திய அரசும் மதசார்பற்ற கட்சிகள் என்று (தங்களைத் தாங்களே தமாஷாக சொல்லிக் கொள்ளும்) கட்சிகளும் என்ன செய்யப் போகின்றன?

Wednesday, November 14, 2007

கருநாகம் புகுந்த கர்நாடகம்
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகவில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. 20 மாதங்கள் மதசார்பற்ற (?) ஜனதாதளத்தின் தலைமையில் ஆட்சியும், அடுத்த 20 மாதங்களுக்கு பாரதீய ஜனதா தலைமையிலும் ஆட்சி செய்வது என வாய்மொழியாக முடிவு செய்யப்பட்டது.

சந்தர்ப்பவாத தேவேகவுடா கட்சியினர் தங்களுக்கு வாக்களித்த மக்களை மடையர்களாக எண்ணிக்கொண்டு மதவாத பாஜகவுடன் கை கோர்த்தனர். 20 மாதங்கள் முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்த தேவேகவுடாவின் புதல்வர் குமாரசாமி பதவி சுகத்தில் திளைத்திருந்த வேளையில் உடுப்பியும் மங்களூரும் காவி பாசிஷவாதிகளிடம் மாட்டிக்கொண்டு திணறித் தவித்தது. அப்பாவி முஸ்லிம்கள் சொல்லொணா துயரத்திற்கு இலக்காயினர்.

மதசார்பற்ற ஜனதாதளம் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்கள் வைத்துக் கொண்ட வெட்கங்கெட்ட கூட்டணியால் இத்தகைய அவலம் நடந்தது.

மதசார்பற்ற ஜனதாதளம் தனது கொள்கையைக் காற்றில் பறக்கவிட, பாஜக கொள்ளை பிடிப்பு பிசகாமல் நடந்து கொண்டது. அதோடு கர்நாடகாவை குஜராத்தாக மாற்றுவதே தமது இலட்சியம் என்றும் முழங்கினார்கள்.

பலதரப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்ற மதசார்பற்ற(?) ஜனதா தளம், மக்களின் பார்வையில் மிகவும் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

'முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது பன்முக நடிப்புத் திறமையைக் காட்டியதன் மூலம் ஆஸ்கார் விருது கூடப் போதாது இவரின் திறமைக்கு'' என தொழில் முறை நடிகர்கள் கூட மூக்கில் விரலை வைத்தனர்.

பாஜகவினர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாநிலத்தை சுரண்டி காவிக் காடாக்கி கலவரப் பிரதேசமாக்கினர்.

மதசார்பற்ற ஜனதாதளத்தின் காலம் முடிந்த பிறகு பாஜகவின் வன்முறை என காவிப்பட்டாளம் ஆவலோடு காத்திருந்தது.

பதவியைப் பிரிய மனமில்லாத தேவேகவுடா கட்சியினர் பாஜகவைப் பற்றி புதிதாக அறிந்து கொண்டதைப் போல, மதவாத கட்சி என்றும், கலவர பூமியாக கர்நாடகாவை மாற்றப் போகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

முதன்முறையாக தென்னிந்தியாவில் ஆட்சியமைக்கக் கிடைத்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்ற தவிப்புடன் பாஜக கிடந்து அல்லாட வேறு வழியில் முதல்வர் பதவியை பெற முடியுமா என மதசார்பற்ற (?) ஜனதா தளம் வெறியுடன் திண்டாட இந்திய ஜனநாயகத்தை இழிவுப்படுத்திய பெருமைக்கு (!) இவ்விரு தரப்பினரும் ஆளானார்கள்.

சீசன் டிக்கெட் எடுக்காத குறையாக டெல்லியிருந்து தினமும் புறப்பட்டு வந்த பாஜக தலைவர்கள் தேவேகவுடா தரப்பினரை தாஜா செய்வதை தொடர்ந்தனர். அது பாஜகாவா இல்லை 'தாஜா'வா என்று சந்தேகம் எழுப்பும் அளவுக்கு அவர்களது நடவடிக்கை இருந்தது.

தேவேகவுடா குடும்பம் நாசமாக போகட்டும் என கிராமத்துக் மூதாட்டி போல சாபம்விட்டனர் பாஜகவினர்.

தற்போது திரை மறைவில் நடந்த பேரங்களால் பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தேவேகவுடா கட்சி ஆதரவு வழங்குவதோடு அமைச்சரவையிலும் இடம் பெறப்போகிறது.

முதல்வராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான எடியூரப்பா முதல்வராகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அத்வானிக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் முகமெல்லாம் மலர்ச்சி அகமெல்லாம் பூரிப்பு.

சமூக நீதிக்கான தளமாக இருந்த கர்நாடகாவில் கருநாகப் பாம்பு குடி புகுந்ததைப் போன்று காவி பாசிஷ வாதிகள் அரசமைத்து விட்டனர்.

உலகம் மறக்க முடியாத பாசிஷ பயங்கரவாதிகள் இவர்கள் என்பதை காந்தியாரின் படுகொலையும், பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பும், குஜராத் இனப்படுகொலையும் நிரூபித்திருக்கிறது.

கர்நாடகத்தின் சமாதானத்தை சாய்க்க வடநாட்டில் தங்கள் தளங்களை இங்கு இழந்தவர்கள் இங்கு வந்துவிட்டனர். பதவிக்காக பாசிஷவாதிகளுக்கு பல்லக்கு தூக்கியவர்களுக்கு வாக்களித்தோமே என வேதனையில் விம்முகிறார்கள் சிறுபான்மை சமூகத்தினர்.

சந்தர்ப்பவாத சதிகாரர்களுக்கும் பாசிஷ பயங்கரவாதிகளுக்கும் வாக்குச்சீட்டின் மூலம் பதிலடி கொடுக்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்
ராஜஸ்தான்
மார்க்க அறிஞர்கள் கைது லி சித்திரவதை! பாஜக அரசு அட்டூழியம்!

ஹபீபா பாலன்

அஜ்மீர் தர்ஹாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளிவாசல் இமாம்களை துன்புறுத்தி கைது செய்யும் போக்கு ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமலான் மாதம் கடைசி நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதத் தில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்களாக பள்ளிவாசல் இமாம்களை கைது செய்தது அராஜகத்தின் உச்சக்கட்டமாகும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்புக்காக துப்பறிய அமைக்கப்பட்ட சிறப்புக் காவல் படை, இதுவரை 12 இமாம்களை சிறையில் அடைத்துள்ளது. பள்ளிவாசல் பேஷ் இமாம், மவ்லவிகள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் அடங்கு வர். அந்த அப்பாவி மவ்லவிகளை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல் காவல் துறை லாக்அப்லிகளிலேயே அடைத்து தாக்கி துன்புறுத்துவதாகவும் முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சட்டவிரோதமாக வளைத்துச் செல்லப் பட்ட அவர்களிடம் துன்புறுத்தி தீவிரவாத ஆதரவு ஒப்புதல் வாக்குமூலங்களை வாங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஷிபுர் ரஹ்மான் என்ற மதரஸா ஆசிரியர் ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஷிகார் மாவட்டத்தில் உள்ள கண்டேலா கிராமத்தின் பள்ளிவாசல் பேஷ்இமாமான அப்துல் ஹபீஸ் ஷமீம் சட்டவிரோதமாக வளைக்கப்பட்டார்.

ச்ரூ மாவட்டத்தின் சர்தாசாஹர் பகுதியில் உள்ள மதரஸா ஜாமியா லத்தீஃபிய்யாவின் ஆசிரியரான ரஹ்மான், மற்றும் மகராஷ்ட்ரா மாநிலத் தின் உஸ்மானாபாத் பகுதியைச் சேர்ந்த மவ்லவி இம்ரான் அலி உட்பட 12க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான் காவல்துறை யினரால் சட்டவிரோத காவலில் வைக்கப் பட்டு துன்புறுத்தப்பட்டனர்.

குண்டு வெடிப்பினால் இழப்பினை சந்தித்த முஸ்லிம்களை ஆறுதல்படுத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க திராணியற்ற ராஜஸ்தான் பாஜக அரசு, முஸ்லிம் மார்க்க அறிஞர்களை துன்புறுத்தும் செயல் உள்நோக்கம் கொண்ட ஈனத்தனமான செயல்.

முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கடும் கொந்தளிப் பினை ஏற்படுத்தியது.

உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க எத்தகைய முயற்சியும் மேற் கொள்ளாமல் முஸ்லிம்களை மட்டுமே வஞ்சம் தீர்க்கும் செயல் மூலம். குண்டு வைத்த சதிகாரர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே இச்செயல் உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆத்திரம் கொப்பளிக்க கருத்து தெரிவித்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட மவ்லவி இம்ரான் அலி உள்பட மற்றவர் கள் விடுவிக்கப்படவில்லை. இது மனித உரிமையையும் அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் என ராஜஸ்தான் முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காரி மொயினுத்தீன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி முஸ்லிம்கள் 3000 பேர்களை போலி என்கவுண்டர் மூலமும் நெருப்பிலிட்டும் கொன்றும் கொன்ற குஜராத் அரசைப் போன்று ராஜஸ்தான் பாரதீய ஜனதா அரசும் மனித உரிமை களை காலில் போட்டு மிதிக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உடுப்பியை யும் மங்களூரையும் கலவரக் காடாக்கி யவர்கள் முதல்வர் பதவியை பிடித்துள்ள னர். இது சமூகநல ஆர்வலர்களையும் தேசப்பற்றாளர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இத்தகைய சக்திகள் தண்டிக்கப் படுவது எப்போது?

Saturday, November 10, 2007

குஜராத் இனப்படுகொலை: மோடி போலிஸின் சாதனைகள்(!)

சர்ஜுன்

பி.சி. பாண்டே (குஜராத் டி.ஜி.பி ஆக இருந்து தற்போது தேர்தல் ஆணைத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்.

700லிருந்து 800 முஸ்லிம் சடலங் களை அஹ்மதாபாத் நகர் முழுவதும் சாக்கடைகளில் கொட்ட உத்தரவிட்டார்.

கொல்லப்பட்ட முஸ்லிம்களின் கணக்கை குறைத்துக் காட்டுவதற்காக அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.

• பாபு பஜ்ரங்கியையும் அவனது அடியாட்களையும் காவல்துறை இணை ஆணையர் பி.பி.பாண்டேயின் தலைமையிலான போலீஸ் படை கைது செய்தது. ஆனால் இது எல்லாமே 'சும்மா' நாடகம் தான் என காவல்துறை இணை ஆணையர் தெரிவித்ததாக பாபு பஜ்ரங்கி கூறினான்.

• உள்ளூர் சங்பரிவார் தலைவரை டி.எஸ்.பி சோலங்கி கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்ததாக செய்தி ஏடுகளும், அரசு கோப்புகளும் கூறின. ஆனால் உண்மையில் குற்றவாளி வி.எச்.பி அலுவலகத்தில் சகல சவுக்கியத் துடன் இருந்தான்.

• காவல்துறை காட்வி விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த காலுபர் ஜிலா மந்த்ரி ரமேஷ் தேவிடம் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார். குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து முஸ்லிம்களைக் கொல்வேன் என்று சொன்னதைச் செய்தாரா என வி.எச்.பி பிரமுகர் முஸ்லிம் பிணங்களை எண்ணிப் பார்த்து உறுதி செய்தார்.

• காவல்துறை ஆய்வாளர் எரடா குல்பர்க் சொஸைட்டி குடியிருப்புக்கு முன்னால் கூடியிருந்த கும்பலைப் பார்த்து கூறுகிறார். உங்களுக்கு மூன்று மணி நேரம் தருகிறேன். அதற்குள் உங்கள் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள். அடுத்த நிமிடமே வெறி முற்றிய அந்த வன்முறைக் கும்பல் பாய்கிறது. எரடாவின் கண்ணெதிரிலேயே ஒருவரை அந்தக் கும்பல் குத்திக் கொன்றது.

• காவல்துறையினர் எங்களுடனே இருந்தனர். அந்த நாள் மகத்தானது. காவல்துறையினர் எங்கள் முன்னிலை யில் துப்பாக்கியால் அவர்களை (முஸ்லிம்களை) நோக்கி சுட்டனர். நிச்சயம் அவர்கள் 70 அல்லது 80 பேருக்கு மேல் கொன்றிருப்பார்கள். அதைப் போன்று ஒரு பெண்ணைக் கூட சேதப்படுத்தாமல் விடவில்லை.

• எல்லாவற்றையும் எரித்து முடித்தோம் அப்போது காவல்துறையினர் எங்களை அழைத்தனர். முஸ்லிம்கள் சாக்கடைக்குள் ஒளிந்து கொண்டிருக் கிறார்கள் என்று காவல்துறையினர் கூறினர். நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அவர்களது வீடுகள் எல்லாம் கொளுத்தப்பட்டதால் தரைமட்டமாகி யிருந்தது. ஆனால் ஏழு அல்லது எட்டு முஸ்லிம்கள் கழிவறை செல்லும் குழியில் பதுங்கிக் கிடந்தனர். நாங்கள் அதை அதற்கென உள்ள சாக்கடை மூடியால் மூடினோம் பத்திரமாக தப்பிப்பதற்காக அங்கே ஒளிந்து கொண்டார்கள். ஆனால் நாங்கள் அவர்களை காவல்துறை உதவியுடன் பிணங்களாக்கினோம்' என்றான் நரோடா பாட்டியா குற்றவாளி சுரேஷ்.

• நரேந்திரமோடி காவல்துறையை எங்கள் தரப்பாகவே அனுப்பி வைத்தார். அஹ்மதாபாத் வி.எச்.பி தலைவன் ராஜேந்திர வியாஸ்.

• என்னைப் போல் ஒரு 50 பேர்களை போலிஸ் கமிஷனரிடமிருந்து சிறப்பு அனுமதி வாங்கினோம். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட இடங் களுக்கு சென்று எங்கள் வேலையை(!) காட்டினோம். ஹிந்துக்கள் எங்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் தெரியுமா? அன்று ஒருவருடைய வீட்டிலும் ஒரு சிறிய மரக்குச்சி கூட கிடைத்திருக்காது. கையில் கிடைத்ததை யெல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பி னோம். மூன்று அடி இரும்புக் குழாய் களை ஒவ்வொருவரும் வைத்திருந்தோம். பஜ்ரங்தளத்துக்காரர்கள் திரிசூலம் தந்தனர். எல்லா ஆயுதங்களும் எங்களுக்கு விநியோகிக்கப்பட்டனலி திமந்த் பட் கூறியது.

• நாங்கள் வெடிகுண்டுகளை தயாரித்து எடுத்துக் கொண்டு அஹ்மதாபாத் சென்றோம். எந்த போலீஸ்காரரும் எங்களை தடுத்து நிறுத்தவில்லை. அது மட்டுமல்லாமல் 'நீங்கள் செல்லுங்கள். போலீஸ்காரர்களை பார்க்கும்போது ஜெய்ஸ்ரீராம் சொல்லுங் கள் நாங்கள் புரிந்து கொள்வோம்' என்றார்கள்லிதவால் ஜெயன்டி படேல் சொன்னது.

• எல்லா போலீஸ்காரர்களும் எங்களுக்கு உதவினார்கள். தோட்டாக் களைக் கூட தந்து உதவினார்கள். ரமேஷ் தவே.

காவல்துறையினர் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லைலிபிரஹலாத் ராஜு சொன்னது.

• காவல்துறையினர் எங்களுக்கு ஆயுதங்களை தந்தனர்லிஅனில் பட்டேல்.

• என்னை குற்றப்பிரிவு காவல் துறை (கண் துடைப்புக்காக) விசார ணைக்கு கொண்டு சென்றது.. லாக் அப்பில் கொசுத் தொல்லை அதிகமாக இருந்ததால் போலீஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டோம். எங்கள் வீட்டிலிருந்து தேநீரும், சாப்பாடும் வரவழைத்து சாப்பிட்டேன்லிகுல்பர்க் சொஸைட்டியில் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட பலரை எரித்துக் கொன்ற கயவன் மாங்கிலால் ஜெயின்

Thursday, November 8, 2007

முஸ்லிம்கள் முகத்தில் விழிப்பதற்கே அவமானமாக இருக்கிறது...

தமிழ்மாறன்


குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை நாட்டிற்கு அவமானம், நீதித்துறைக்கு அவமானம் என்று பரவலாக பேசப்படு கிறதே ஒழிய பெருமைக்குரிய ஹிந்து மதத்தின் பேரால் இத்தகைய காட்டு மிராண்டித்தனத்தை நிகழ்த்திய கயவர் களைக் கண்டிக்க யாருக்கும் நா எழவில்லை.

தமது மதத்தை களங்கப்படுத்திய வர்கள் குறித்து பெரும்பாலான ஹிந்து குரு பீடங்கள், மகா சன்னிதானங்கள் கண்டுகொள்ளவேயில்லை, (ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ் மட்டும் விதி விலக்கு) நமது நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு யார் காரணம் என்பது கண்டறியப்படுவதற்கு முன்பே முஸ்லிம் பெயர்கள் ஊடகங்களில் உச்சரிக்கப்படுகின்றன. ஊடகங்கள் குறிப்பிடும் நபர்களோ இயக்கங்களோ தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கும். இருப்பினும் மனித உயிர்கள் பலியாவதைக் கண்டு மனம் பொறுக்காத முஸ்லிம் அமைப்புகள். தலைவர்கள் உடனடியாக தங்களது கண்டனங்களை பதிவு செய்வார்கள். இருந்தாலும் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் வகையில் செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடும். எனது கேள்வி அது பற்றியதல்ல? முஸ்லிம்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்டது.

எங்கேயோ எவனோ நிகழ்த்திய குண்டு வெடிப்பிற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் இதயங்களையும் குத்திக் கிழிக்க குரு மூர்த்திகளின் எழுது கோல்கள் ரத்த தாகத்துடன் காத்திருக்கும்.

வெடிகுண்டு சம்வங்களில் தொடர்பு டையவன் என்று கூறுவோர்கள் கூட தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பெயர்களைத் தான் கூறுவது வழக்கம். நமது ஐயம் என்னவெனில் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட இயக்கங்கள் அனைத்தும் நாட்டு மக்களிடையே செயல்படும் இயக்கங் களாகவே இருக்கின்றன. பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி.. பஜ்ரங்தள், ஏபி.வி.வி. போன்றவை பதிவு செய்யப் பட்ட இயக்கங்கள் பாஜக அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்து விட்டு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அது மட்டுமின்றி அடுத்து ஆளுங்கட்சியாக வரவும் அது துடித்துக் கொண்டிருக்கிறது.

இங்குள்ள பல பிரமுகர்கள், அமைப்பு கள் சாமியார்கள் என பல்வேறு தரப்பின ரும் சங்பரிவாருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள் ளனர். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் குரு பூஜைகளிலும், இந்து முன்னணியால் நடத்தப்படும் திரு விளக்கு பூஜைகளிலும் முக்கிய வர்த்தகப் புள்ளிகளும் கலந்து கொள்கின்றனர். பொது மனிதர்கள் வேடம் போடும் இவர்களோ, நாட்டின் பெரும் பான்மையான வெகுஜன ஊடகங்களோ குஜராத் இனப்படுகொலை குறித்து ஏதும் சொல்ல வில்லையே? என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அது அவர்களுக்கு வியப்பாக இருக்கலாம் நமக்கு அவ்வா றல்ல, நம்முடைய சந்தேகங்களெல்லாம் கோத்ராவில் நிகழ்ந்த விபத்தை முஸ்லிம்கள் செய்த சதியாக செய்திகளை பரப்பி திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் சொன்னதெல்லாம் ஆதாரமற்ற கட்டுக்கதை என பானர்ஜி கமிஷன் ரிப்போர்ட் கூறியது. தற்போது தெஹல்காவின் பதிவுகளும் நிரூபிக் கின்றன. சாட்சிகளை மிரட்டி முஸ்லிம்கள் மீது பழிபோடச் சொன்ன குஜராத் காவல் துறையின் ஈனச்செயலும் அதனை முழுநேரக் கடமையாகச் செய்த சங்பரிவாரின் ஆண்மையற்ற செயல் குறித்த செய்திகள் வரத்தொடங்கியுள்ள நிலையில், பொய்யான ஒரு தகவலை கர சேவர்களின் பெயரால் ஹிந்து மதத்தின் பெயரால் பரப்பியதால் அநியாயமாக படுகொலைகள் நிகழ்த்தியது குறித்து இங்குயாரும் வெட்கப்படவில்லையே? ஏன்? முஸ்லிம்கள் தானே செத்துத் தொலையட்டும் என்று அவர்கள் ஆறுதலடைந்து தொலையட்டும். ஆனால் ஹிந்து மதத்தின் பெயர் உலக அளவில் மாசுபட்டு போனதே இது குறித்து இவர்களுக்கு சிறிதும் கவலை யில்லையே?

தெஹல்கா பதிவுகளில் கயவர்களின் வாக்கு மூலங்களைப் பார்க்கும் போது கோத்ராவில் நடந்தது விபத்தல்ல.

முஸ்லிம்கள் நடத்திய சதியுமல்ல. சங்பரிவார் சக்திகளால் நடத்தப்பட்ட கொடும் சதி என்பது நிரூபிக்கப்பட்டுள் ளது. ஹிந்து மதத்தின் பெருமை குறித்து பெருமிதம் அடைபவர்கள் இது குறித்து கவலைப்படவில்லை என்பது குறித்து விளைக்குறிகள் விடைத்து நிற்கின்றன.

இந்த கொடும் சதிகள் குறித்து இவர்கள் ஒன்றும் அறியாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது 2007 அக்டோபர் 25 ஆம் தேதியிலிருந்து (தெஹல்கா உண்மைகளை அம்பலப்படுத்தியதிலிருந்து) இவர்கள் கோமாவில் கிடந்திருக்க வேண்டும் அல்லது இந்த குற்றச் செயல்கள் குறித்து மானசீகமாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரும்பாலான ஊடகங்களும் குஜராத் இனப்படுகொலை குறித்து மூச்சு கூட விடவில்லை. இவர்களின் இழிசெயலைக் காணும் போது அவமானம் தாங்க முடியவில்லை.

முஸ்லிம்களின் முகங்களை ஏறிட்டுப் பார்க்கும் துணிச்சல் எனக்கு வரவில்லை. ஏனெனில் நான் மனித மனம் படைத்தவன்

Wednesday, November 7, 2007

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் ஜனநாயகம்

பாகிஸ்தானில் பெயரளவுக்கு இருந்த ஜனநாயகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள் எவரும் இன்றி அதிபர் தேர்தலில் முஷாரஃப் ஜனநாயக (?) முறையில் வெற்றி பெற்ற பின்னரும் கூட நடுங்கி நிதானம் இழந்து அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.பாகிஸ்தானுக்கு ஜனநாயகம் என்பது எட்டாக்கனியாக இருந்தது மேலும் எட்டாத உயரத்தில் போய் விட்டது.
பாகிஸ்தான் என்றால் முஷாரஃப், பெனாசிர், நவாஸ்ஷரீஃப், அமெரிக்கா, தலிபான் ஆதரவாளர்கள் என்று கலவையான குழப்பம் என்ற நிலைமாறி பாகிஸ்தானில் மக்களின் ஜனநாயக விழிப்புணர்வு, நீதித்துறையின் சுறுசுறுப் பான செயல் பாடுகள் என மாறியதால் பழைய பாகிஸ்தானாக அது தற்போது இல்லை.
மதரஸா மாணவர்களிடையே இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசையே எதிர்க்கும் அளவிற்கு அவர்கள் சென்றனர்.
இஸ்லாமிய நெறியை பரப்ப, புரிந்து கொள்ள அவர்கள் காட்டிய விவேகமற்ற வேகம் சர்ச்சைக்குள்ளாகி லால் மஸ்ஜி தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் குடித்தது.
அரசும், மதரஸாக்களின் தலைமைப் பீடங்களும் நிதானம் இழந்து செயல் பட்டதின் விளைவு இரு தரப்புக்குமே தோல்வியாக முடிந்தது.நீதித்துறையின் சுறுசுறுப்பான செயல் பாடு பாகிஸ்தான் மக்களுக்கு மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் சவுத்ரி, நீதியை நிலை நாட்டும் முகமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆடித்தான் போனார் அதிபர் முஷாரஃப்.
பாகிஸ்தானின் மாற்றங்கள் ஏற்றங் களை நோக்கிச் சென்றாலும், தமது அதிகார வரம்புக்கு ஏமாற்றங்களையே பரிசாக அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.பெனாசிருடன் வைத்துக் கொண்ட ரகசிய அதிகார பகிர்வு குறித்த உறவும் கராச்சி குண்டு வெடிப்பு சத்தத்தில் மாயமாய் மறைந்து போனது.
பாகிஸ்தானில் முஷாரஃபின் பிடி நழுவியதோடு இந்த துணைக் கண்டத் தில் அமெரிக்காவின் பிடி நழுவும் போக்கு நாளோருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யா, சீனா, உஸ்பெ கிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தி இப்பிராந்தியத்தில் சீனாவும், ரஷ்யாவும் வலுப்பெறுவதை அமெரிக்கா வெளிப் படையாகக் கண்டு கொள்ளாதது போல் இருந்தாலும், உள்ளூர நடுக்கத்துடன் தன் கைவசம் உள்ள பாகிஸ்தானை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு பாகிஸ்தானின் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க மறைமுக காரண மாகவே மாறிவிட்டது.
இந்தியாவில் அணு ஆற்றல் ஒப்பந்தத் தில் மறைமுக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா பாகிஸ்தானில் முஷாரஃபை கொம்பு சீவி விட்டிருக்கிறது விளைவு பாகிஸ்தான் ஜனநாயகம் அருங்காட்சி யகத்தில் வைக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது.
நாளை அது புதைபொருள் ஆராய்சிக் குரிய ஒன்றாக மாறக்கூடும்.பாகிஸ்தானின் ஒற்றைத் தனி மனிதராய் முஷாரஃப் விளங்குகிறார். அவருக்கு ஆத்மார்த்தமான நட்பாக அதிபர் புஷ் மட்டுமே விளங்குகிறார். ஜனநாயகம் என்பது இவர்கள் இருவரின் நட்பு மட்டும் அல்லவே!
பாகிஸ்தான் இன்று எரிமலையாய் தகித்துக் கொண்டிருப்பதாகவே அங்கி ருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையின் மேலிருந்து மகுடி வாசிக்கும் முஷாரஃபை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது

Web Counter Code