இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, July 18, 2007

கலாம் அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

கலாம்
அடுத்த நாளே அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்த ஓய்வு பெற்ற உடன் அப்துல் கலாம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் பணியை துவங்குகிறார். இத்தகவலை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார். தான் குடியரசுத் தலைவர் பதவியை விட்டு ஓய்வு பெற்றதும் ஆசிரியர் பணிக்குத் திரும்புவேன் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

கலாமின் பதவிக்காலம் இம்மாதம் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு மறுநாளே அவர் அண்ணா பல்கலைக் கழத்துக்கு வருவதும் கௌரவ பேராசிரியர் பணியில் இணைவதும் சிறப்புக்குரியது. அண்ணா பல்கலைக் கழகக்ததிலிருந்து வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கலாம் வகுப்பெடுக்க உள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக அண்ணாப் பல்கலைக் கழக துணை வேந்தர் டி. விசுவநானிடம் கலாம் தொலைபேசியில் பேசியுள்ளார். எனினும் தனக்கு வரவேற்பு விழா எதையும் ஏற்பாடு செய்யக் கூடாது என திட்டவட்டமாக கலாம் தெரிவித்து விட்டார்.

இன்றைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் மாநிலங்களின் தலைநகரங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் 13 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலில் மக்களை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 4,120 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். நியமன எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை.

எட்டு துறைகளில் 61 திட்டங்களுக்கு தமிழகத்துக்கு 38 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மத்திய அரசு திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்து உள்ளதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

திருவான்மியூர், வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் இன்றும் நாளையும் இறுதி கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் ஆகஸ்டுக்குப் பிறகு சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் பறக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு 676 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் தேர்வுக்கு 44 ஆயிரத்துக்கு 346 ஆண்களும் 7 ஆயிரத்து 104 பெண்களும் விண்ணப்பம் செய்திருந்தனர். உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டபின் 566 ஆண்களும், 110 பெண்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் காவல்துறை விசாரணைக்குப் பிறகு அவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என தமிழ்நாடு சீரூடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் ராஜேந்திரன் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தினமலர் அந்துமணி ரமேஷ் பெண் செய்தியாளர் உமாவுக்கு செய்த பாலியல் கொடுமைகளுக்கு இந்திய தேசிய மாதர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. தினமலர் நிர்வாகியின் கொடுமைகள் குறித்து அவ்வமைப்பின் மாநிலக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், இப்பிரச்சினையில் உமாவுக்கு ஆதரவு வழங்கி போராட்டத்தில் குதிக்க தயாராக இருப்பதாக இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் தலைவர் ஆர். சுசீலா மற்றும் மாநிலச் செயலாளர் பத்மாவதி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இடமில்லாமல் ''பிறந்த குழந்தையுடன் தாயும் சேயும்'' தரையில் படுத்து கிடக்கும் நிலை மாற வேண்டும் என்ற நோக்கில் நாடு முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீஃபின் விசாவை ரத்து செய்த ஆஸ்ரேலிய அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் சங்கம் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்ரேலிய அரசின் முடிவு ஹனீஃபின் உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல் என்று கூறியுள்ள சர்வதேச பொது மன்னிப்பு சபை (ஆம்நெஸ்டி இன்டர் நேசனல்) ஹனீஃபின் விசா ரத்து செய்யப்பட்டதற்கு மிகுந்த கவலை தெரிவித்துள்ளது. ஹனீஃப் மீதான வழக்கை வாபஸ் பெற்று அவரை கௌரவத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என டாக்டர் ஹனீஃபின் மனைவி பிர்தவ்ஸ் அர்ஷியா கோரிக்கை விடுத்திருக்கிறார்

Tuesday, July 17, 2007

முக்கியச்செய்திகள்

தமிழகத்தில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச ராமதாசு தெரிவித்துள்ளார்

கல்வி வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சிறுபான்மையினருக்கென தனித்தொகுதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டாக்டர் ஹனீப் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

டாக்டர் ஹனீபை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்துமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிட்டனில் கைது செய்யபட்ட சபீல் அஹ்மதுவின் விவகாரத்திலும் நேர்மையைக்கடைபிடிக்குமாறு இந்திய் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஹனீப் கைது செய்யப்பட்டசிறிதுநேரத்தில் இந்தியா இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளது
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நவ்தேஜ்சர்மா கூறியத்தாவது, டாக்டர் ஹனீபின் குடும்பத்திற்கு தேவையான சட்ட உதவிகளை கான்பெர்ராவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செய்துவருகின்றனர். இந்த வழக்கில் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு ஆஸ்திரேலிய காவல்துறையினருக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.ஹனீப் மீண்டும் கைது செய்யப்பட்டாலும் அவர் கவலைப் படவில்லை நலமாக உள்ளார் என சர்மா தெரிவித்துள்ளார்.

Thursday, July 12, 2007

Facts versus Myths: New Book on Terrorism
The phenomenon of terrorism has many dimensions to it and it has been the major bane of current times. The propaganda by the dominant power and section of media has succeeded in associating this menace to a particular religion and religious community. Pharos Media & Publishing Pvt Ltd has just now come out with a booklet which takes up these popular notions and myths and tries to unravel the truth of this phenomenon through facts, photographs and cartoons. Pharos Media plans to come out with Hindi, Marathi and Urdu editions of this book shortly. Terrorism: Facts versus MythsBy Ram Puniyani Price: Rs 40 / Euro 4
Table of Contents1. Terrorism and Muslims. 2. Islamic Tag3. Terrorist violence and Religion4. Clash of Civilizations5. War on terror6. Islam and Violence7. Democracy and Islam8. Islam and Fundamentalism9. RSS and Terrorism10. RSS fights against Terror! Bibliography US military Intervention References Further ReadingAppendices: A. A Moment of silenceB. War Crimes Tribunal in Afghanistan C. International Tribunal on War Crimes in Iraq D. Civilizations Clash or Alliance E. Al Qaeda or Al Fayda F. ABC of Jihad in Afghanistan Roots of Global TerrorPages 96 p/b Year: 2007 Price: Rs 40 / Euro 4 ISBN: 81-7221-033-7; ISBN-13: 978-81-7221-033-5Publishers: Pharos Media Publishing Pvt LtdD-84 Abul Fazal Enclave - IJamia Nagar New Delhi 110025 Email: info@pharosmedia.com

Wednesday, July 11, 2007

தூய உள்ளங்களுக்கு ஓர் ஒத்தடம்

200பேரை ப்லி கொண்ட அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது
.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது
.ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?
அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..

மும்பை: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்

இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...
ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது. குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.
இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.
கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.
பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.
பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.
படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.
குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.
மருத்துவமனை நோக்கி...
ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.
மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.
முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.
மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சி
பாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)
படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்
சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.
இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.
சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.
மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.
குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.
ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.
இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.
குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.
அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.
நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.
குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.
உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.
பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்

Friday, July 6, 2007

என்ன சேதி

.

முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
சென்னைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அமெரிக்க அனு நாசகார கப்பல் சென்னையை விட்டு அகன்றது
.நாசகார கப்பலோடு அனுவிஞ்ஞானிகளும் வந்திருக்க கூடும் என உளவுத்துறையினர் ச்ந்தேகம் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் ஆண்டுக்கு முப்பது சதவீதத்தினர் இதய் நோயால் இறந்து வருவதாக தமிழகசுகாரத்துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.இதன்மூலம் இந்தியாவில் முப்பது சதவீதத்தினருக்கு இதயம் உள்ளது நிரூபிக்கப்பட்டிருப்பத்தாக குறும்புக்காரர் ஒருவர் கூறூகிறார்.
தமிழகத்தில்பொறியியல் கல்லூரிகளில் புதிதாக மூன்றாயிரம் சீட்கள் உருவாக்கப்படுமென அண்ணா பல்கலைக்கழகதுனை வேந்தர் டி விஸ்வநாதன் தெரிவித்திரிக்கிறார்
.
ஒருநாட்டின் மீதோ சமூகத்தின் மீதோ தீவிரவாத முத்திரை குத்துவது விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர் எனப்பிரித்துபார்ப்பது பிரச்சனை தீர்க்க உதவாதுஎன்றார்.
இது குறித்து பிரிட்டன் பிரதமரிடம் பேசியதாக வும் மன்மோகன்சிங் தெரிவித்தார்

வீணாப் போனவனுக்கு விருது

வீணாப் போனவனுக்கு விருது
உலகமெல்லாம் வாழும் முஸ்லிம்கள் தங்கள் உயிரினை விட மேலாகக் கருதும் நபிகள் பெருமானாரை தன்னுடைய சாத்தானின்கவிதைகள்என்ற நூலில் இழிவுபடுத்தி எழுதிய கெடுமதியாளன் சல்மான் ருஷ்டி இந்தியா உள்பட உலக நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டான். இந்தியா உள்பட பல நாடுகளில் அவன் எழுதிய சர்ச்சைக்குரிய நூலுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளில் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவிக்கப்படாத சிறைக் கைதியாக 18 ஆண்டுகளாக அஞ்சி நடுங்கி வாழ்ந்திருந்தார் சல்மான் ருஷ்டி. சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வந்த பிரிட்டன் மனிதாபிமான முறையிலே அடைக்கலம் கொடுத்து வந்ததாக கூறிக் கொண்டது. நாங்கள் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவற்றைக் காப்பாற்றவே பிறந்தவர்கள். அதனால் ருஷ்டிக்கு ஆதரவு வழங்குவது உள்நோக்கம் கொண்டதல்ல என பூசி மொழுகினர்.
ஆனால் அவையெல்லாம் உண்மையல்ல மேற்கத்திய சக்திகளின் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுதான் ருஷ்டியின் மீது அவர்கள் அனுதாபம் காட்டுவதற்குக் காரணம் என்பதை கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நாகரீகமற்ற கீழ்த்தரமான செயல் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அரண்மனை வழங்கும் உயரிய விருதான 'சர்' பட்டத்தை ருஷ்டிக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் 'சர்' பட்டத்தையும், தனது நாட்டின் கவுரவத்தையும் பிரிட்டன் கெடுத்துக் கொண்டது.
பிரிட்டனின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ருஷ்டிக்கு 'சர்' பட்டத்தை அறிவித்தவுடன் ஈரான் தனது கண்டனத்தை பிரிட்டன் தூதரை அழைத்து நேரிடையாக தெரிவித்தது.
மதங்களுக்கு இடையிலான உறவினைக் கெடுக்கும் செயலை பிரிட்டன் செய்து விட்டதாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹஸன் விராஜுடா தெரிவித்துள்ளார். டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட பெருமானார் அவமதிப்பு சம்பவத்தை விட பிரிட்டன் அரசு செய்தது கீழான செயல் என எகிப்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
மலேசியாவில் முஸ்லிம்கள் திரளாகச் சென்று பிரிட்டன் தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ஈராக்கிலும் பிரிட்டனின் செயலை எதிர்த்து கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ, ஹிந்து தலைவர்களும் பங்கேற்றனர். உடனடியாக பிரிட்டன் தனது அறிவிப்பையும் விருதையும் திரும்பப் பெறவேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எதிர்ப்பலைகளின் உச்சக்கட்டமாக பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் டாக்டர் அர்பாப் குலாம் ரஹீம் தனது தாத்தாவுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு வழங்கிய 'சர்' என்னும் கவுரவ பட்டத்தை தூக்கி எறிவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தனது தாத்தாவுக்கு பிரிட்டன் அரசு வழங்கிய 'சர்' பட்டத்தை திருப்பியடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ருஷ்டி மற்றும் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் உருவ பொம்மைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. உடனடியாக பிரிட்டன் அரசு தங்கள் அறிவிப்பினையும் விருதினையும் திரும்பப் பெறவேண்டும் என்று கிறிஸ்தவப் பேராயர் ரெஹ்மட், இஸ்லாம் ஆன்லைன் வலைதளத்தின் நேர்காணலில் தெரிவித்தார்.
சல்மான் ருஷ்டிக்கு கண்டிப்பாக விருது கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசை பிரிட்டனுக்கு இருந்தால் 'உங்ஸ்ண்ப் நண்ழ்' (பிசாசு சர்) என்று விருது கொடுத்து அழைத்துக் கொள்ளட்டும் என்று கூறிய பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் பிஷப் ஏஜாஸ் இனாயத், பிரிட்டிஷ் அரசு கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் கிறிஸ்தவர்களும் ஒன்றல்ல. முஸ்லிம்கள் ருஷ்டியை விரும்புவதில்லை. அவ்வாறே கிறிஸ்தவர்கள் டோனி பிளேரை விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் லி கிறிஸ்தவ ஒற்றுமையைக் குலைக்கும் சதி இது என்றும் அவர் எச்சரித்தார்.
இது சமூக ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்றும் ஹிந்துக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கராச்சி ஹிந்து சமுதாயத்தின் தலைவர் ரோபின்தாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில் 2000 உலமாக்களைக் கொண்ட உலமா கவுன்சில் அறிவித்த அதிரடி அறிவிப்பு மேற்குலகை எரிச்சலில் ஆழ்த்தியது.முஸ்லிம்களை எரிச்சலில் ஆழ்த்த பிரிட்டன் அரசு சல்மான் ருஷ்டிக்கு விருது அளித்ததற்கு பதிலடியான அறிவிப்பாக அது அமைந்தது.
அல்காயிதா என்ற அமைப்பின் நிறுவனர் உஸாமா பின்லேடனுக்கும், பிரபல ஆப்கன் தலைவர் முல்லா உமருக்கும் அல்லாஹ்வின் வாள் என்ற அர்த்தம் தொனிக்கும் 'சைபுல்லாஹ்' என்ற பெயரில் விருது வழங்குவதாக அறிவித்து விட்டனர்.
உலக அமைதியின் பாதுகாவலனாக தன்னை அழைத்துக் கொண்ட பிரிட்டன், தனது முதிர்ச்சியற்ற செயலால் சேற்றில் சிக்கிய யானையாய் தவிக்கிற

Web Counter Code