இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Tuesday, July 20, 2010

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம் அபுசாலிஹ்

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் தாமதம் வேண்டாம்

E-mail Print PDF

இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இவ்வாண்டு நடைபெற்று வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை காலகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.

1931&ல் சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக நடத்தப்பட்டது. அதன் பிறகு அது கைவிடப்பட்டது. நாடு விடுதலையடைந்த பிறகு 60 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி தளத்தில் அவசியமான இந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இந்தியாவில் ஒவ்வொரு சமூக அமைப்பின் பின்புலம் அவர்களது வளர்ச்சி, பின்னடைவு, அவர்களது வளர்ச்சிக்கான அத்தியாவசிய இலக்கு போன்றவை குறித்து ஆய்வு செய்ய முடியும்.

ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை குறித்து சிறிதும், அக்கறையின்றி அனைத்துக்கட்சிகளுமே செயல்பட்டன. துல்லியமான சாதிக் கணக்கெடுப்புகள் அரசு ஆவணங்களில் இல்லாததால் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களின் அவலநிலை குறித்து நிரந்தரத்தீர்வு என்ன-? உடனடி தீர்வு கூட எட்ட முடியவில்லை.

தலித் மக்கள் குறித்து கணக்கெடுப்பு இதுவரை தொய்வில்லாமல் பதிவு செய்யப்பட்டு வருவது மட்டுமே ஒரு ஆறுதல்.

சாதி அடிப்படையில் கணக்கெடுப்பா? இது அடுக்குமா? முறையா? சரியாகுமா? என வழக்கம்போல பிற்போக்குத் தனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆதிக்க சக்திகள் கண்டனம் தெரிவித்தன.

ஒரு புறம் கண்டனம் தெரிவித்துக் கொண்டே மறுபுறத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நீதிமன்றங்களில் தங்களது சித்து விளையாட்டினை தொடருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சாதிகளின் துல்லியப் பட்டியல் இல்லாதபோது எந்த அடிப்படையில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீட்டினை வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் வழங்க திட்ட மிடுகிறீர்கள்? என நயவஞ்சகத்துடன் வாதப்போரை தொடுக்கிறார்கள்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறம் தள்ளப்பட்டது போல் இனியும் அனுமதிக்கக்கூடாது என சமூகநீதிகோரும் இயக்கங்கள் வெகுண்டு எழுந்தன.

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை என முழக்கங்கள் எழுந்ததைக் கண்ட மத்திய அரசு அது ஆலோசனைகளை மேற் கொள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

அந்தக்குழு அனைத்துக் கட்சிகளிடமும் ஆலோசனை கேட்கப் போவதாக அறிவித்துள்ளது. அறிவித்ததோடு நில்லாமல் அடுத்து அந்த குழு செய்த ஒரு செயல் அந்தக் குழுவின் வேகம்(!) குறித்த ஒரு தீர்மானமான கணிப்பை நோக்கி நாட்டிலுள்ள நடுநிலையாளர்களை இழுத்துச் சென்றுள்ளது.

அதாவது அனைத்துக் கட்சிகளின் கருத்தினை கேட்க கடிதங்கள் வரையப்போவதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது அனைவரின் சந்தேகத்தை அதிகரித் திருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பினால் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் சமூக நிலை குறித்து துல்லிய தகவல்கள் பதிவு செய்யப்படுமானால் சமூகங்களுக்கு இடையே நலம் நாடு திட்ட ங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பினை தாமதப்படுத்த நினைப்பது நிச்சயம் நாட்டு மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதது. இதனை தவிர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை

போபால் விழித்துக் கொள்வோம் சர்ஜுன்

போபால் விழித்துக் கொள்வோம்

E-mail Print PDF

போபால் விஷவாயு துயரம் நாட்டை உலுக்கியது. அது குறித்த தீர்ப்பு 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்து நாட்டு மக்களின் சோகத்தையும் ஆத்திரத்தையும் பன்மடங்கு அதிகமாக்கியது.

மும்பை தாஜ்ஹோட்டல் தாக்குதல் போன்ற மேல்தட்டு மக்கள் பாதிப்பு தொடர்பான வழக்குகள் ஓராண்டுக்குள் முடிந்து குற்றவாளியின் மீது தூக்குத்தண்டனையும் அறிவிக் கப்பட்டுவிட்டது.

ஆனால் போபால் விஷவாயு படுகொலைகளுக்கு காரணமாக அன்னிய நாட்டை சேர்ந்த ஆண்டர்சனை நோக்கி அதிகார வர்க்கத்தின், நீதித்துறையின் சுண்டு விரல்கள் கூட அசையவில்லை.

அது மட்டுமின்றி எம் மக்களை ஆயிரமாயிரமாய் கொன்று குவிக்கப்படுவதற்கு காரணமான பாதகனை நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு காப்பாற்றி, பாராட்டி சீராட்டி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

பாபரி பள்ளிவாசலை தகர்த்து, தேச வளர்ச்சியின் சக்கரங்களை பின்னோக்கி தடம் புரள வைத்த நயவஞ்சக ந(ரி)ரசிம்மராவ் தான் இந்த நல்ல காரியத்திலும் (?) முக்கியப் பங்காற்றியுள்ளார்.

போபால் விஷவாயு தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் செய்திஏடு "உலகத்திலேயே இவ்வளவு ஆமை வேக வழக்கினை பார்க்கவேயில்லை" என வேதனையுடன் குறிப்பிட்டது.

தீர்ப்பு வெளிவருவதற்கே இத்தனை ஆண்டுகாலம் ஆனது. இதற்கு மேல்&முறையீடு சென்று பின்னர் தீர்ப்பு வரும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா? என விரக்தியுடன் வினா விடுத்தவர் யார் தெரியுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டக்களம் கண்ட சமூகநல ஆர்வலரும் வழக்கறிஞருமான அப்துல் ஜப்பார்.

நீதித்துறையின் முகத்தில் அறைவதைப் போன்ற வினாக்கள் எழுப்பப்பட்டபின். பிரதமர் தலையிட்டு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 9 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்தார். அது 10 நாளில் தனது அறிக்கையினை தாக்கல் செய்யுமாறும் பணித்திருந்தார்.

ஒரு வழியாக தனது அறிக்கையை சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. அதில் போபால் விஷவாயு வழக்கை சீராய்வு செய்ய முடிவு செய்து சிபிஐ&க்கு உத்தரவிட்டுள்ளது. வாரன் ஆண்டர்சனை நாடுகடத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வருவது மட்டுமின்றி உயிர்களைப் பறிகொடுத்த மக்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாயும், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ஓரளவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் 1,500 கோடி ரூபாய் நிவாரண நிதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இழப்பீடுகள் எவ்வளவு கொடுத்தாலும் போதாது. இனி இது போன்ற உலகப் பேரழிவுகள் நடைபெறா வண்ணம் தடுப்பதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? குமுறும் எரிமலைகளைப் போல் இன்னும் ஆபத்துக்கள் புறப்படுகின்றன.

கூடன்குளம், கல்பாக்கம் என பல்வேறு நடமாடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள என்ன செயல்திட்டங்களை; முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை & அரசுகள் செய்யப் போகின்றன?

போபால் போன்ற துயரங்கள் நிகழும் முன்பே விழித்துக் கொள்வோம்.

மூடநம்பிக்கையில் முடிந்தது கால்பந்துப் போட்டி! அபுசாலிஹ்

மூடநம்பிக்கையில் முடிந்தது கால்பந்துப் போட்டி!

E-mail Print PDF

உலகக் கால்பந்து போட்டி ஒரு வழியாக முடிவடைந்தது, தென் ஆப்பிரிக்கா என்ற கறுப்பர் பூமியில் நடந்ததால் அது பெருமிதத்துக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இருந்தும் ஆப்பி ரிக்க நாடு ஒன்று வாகை சூடியிருக்குமானால் நிச்சயம் அது பெருமைக்குரியதாக மாறியிருக்கும்.


மேற்கத்திய நாட்டில் ஒன்றான ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. கால்பந்து உலக ஜாம்பவான்களான பிரேசில், அர்ஜெண்டினா போன்ற லத்தீன் அமெரிக்காவின் மிரட்டும் அணிகள் இந்த போட்டிகளில் மொக்கை பீஸாக போனது ஒரு வகையில் சோகமே. இறுதியில் ஸ்பெயினும் நெதர்லாந்தும் மிஞ்சின.

இந்த விளையாட்டுப் போட்டியில் மூட நம்பிக்கை கொடி கட்டிப் பறந்தது. எந்த அணி ஜெயிக்கும்? எந்த அணி அரைஇறுதிவரை வரும்? என்பது போன்ற ஆரூட ங்களை ஆக்டோபஸ், கிளி, முதலை, குருவி, உள்ளிட்ட பல் வேறு உயிரினங்களும் ஆருடம் சொல்லி ரணகளப்படுத்தின.

பால் என்ற ஆக்டோபஸ் இதுவரை ஜெர்மனி ஜெயிக்கும் என்று ஆருடம் கூறியது. ஆனால் அரை இறுதியில் ஜெர்மனி ஜெயிக்காது ஸ்பெயினே வெல் லும் என அந்த ஆக்டோபஸ் ஆருடம் தெரிவித்ததாம். குருவி உட்கார பணம் பழம் விழுந்த கதையாக ஜெர்மனி அரை இறுதியில் தேறவில்லை. உடனே கடுப்பான ஜெர்மனி ரசிகர்கள் ஆக்டோபஸை கரித்துக் கொட்ட ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆக்டோ பஸை வறுத்து தின்பேன் என்று மிரட்டினார். மற்றொருவர் சூப் வைத்து குடிப்பேன் என்றார். இந்த மிரட்டலினால் இந்த ஆக் டோபஸுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. தேவைப்பட்டால் நாங்கள் பாதுகாப்பு வழங்கத் தயார் என ஸ்பெயின் பிரதமர் வேறு உணர்ச்சி வசப்பட்டு உறுதி அளித்தார். இந்தக் கூத்து ஒரு வழியாக முடிந்தது.

இறுதிப் போட்டி குறித்தும் ஆரூடங்கள் கணிக்கப்பட்டன. இப்போது இறுதிஆட்டம் குறித்து நாய், பன்றி, கன்று குட்டியைத் தவிர அனைத்து மிருகங்களையும் வைத்து ஆரூடங்கள் புறப்பட்டன.

ஸ்பெயின் வெற்றி பெறும் என ஆக்டோபஸ் பால் கூறியது என் றால் நெதர்லாந்து தான் வெல்லும் என சிங்கப்பூரைச் சேர்ந்த கிளி சீட்டு எடுத்துக் கொடுத்தது.

ஸ்பெயினுக்கு வெள்ளைக்கார ஆக்டோபஸ் ஆதரவு கொடுத்தது என்றால் நெதர்லாந்துக்கு கல் தோன்றி முன் தோன்றா காலத்து மூத்தகுடியைச் சேர்ந்த கிளியின் ஆதரவு கிடைத்தது. ஆம் கிளியின் பெயர் மணி. அது தமிழ்க்கிளி.

இந்த ஆரூடங்களை நம்பியவர்கள் நம்பாமல் சிரித்தவர்கள் என ஒரு வழியாக காமெடிக் காட்சிகள் அரங்கேறி முடித்தன. ஸ்பெயின் வாகை சூடிவிட்டது. கால்பந்து ரசிகர்களும் அடுத்த கால்பந்துக்காக காத்திருக்கலாம்.

ஆனால் கடந்த கால்பந்தாட்ட இறுதியில் நடந்த நிகழ்வை யாராலும் மறந்திருக்க முடியாது. பிரான்ஸ் அணி தலைவரான ஜைனுதீன் ஜிடேனை அவமானப்படுத்தும் நோக்கில் அவரது சகோதரியை இழிவாகப்பேசியும், தீவிரவாதி என் றும் இத்தாலிய வீரர் மாட்ரெஸி பேச, தலையால் முட்டினார் ஜிடேன். இந்த செயலுக்காக ஜிடேன் போட்டியிலிருந்து நீக்கப்ப ட்டார். ஒருவேளை ஜிடேன் நீக்க ப்படாமல் இருந்திருந்தால் பிரா ன்ஸ் அணி வென்றிருக்கும். அல் ஜீரியா வம்சா வளியைச் சேர் ந்த முஸ்லிம் ஒருவருக்கு அந்த பெருமை சென்று விடக்கூடாது என் பதற்காக இத்தாலி மாட்ரெஸி, ஜிடேனை ஆவேசப்படுத்தியதாக சொல்லப்பட்டது. எப்போதுமே ஆவேசப்படுபவர்கள் இவர்களாக வும், ஆவேசப்படுத்தி காரியம் சாதிப் பவர்கள் மேற்குலகைச் சார்ந்த அவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தக் காட்சி அமைந்தது.

எத்தனை உலகக்கோப்பை கால் பந்து போட்டிகள் நடந்து முடிந் தாலும் ஜைனுதீன் ஜிடேனை மறக்க முடியுமா?

Thursday, April 15, 2010

encounter news from abusalihஎன்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அபூஸாலிஹ்
















என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!





அபூஸாலிஹ்






என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!





தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!






காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.2008&ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர்.ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர்.போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார்.இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது.இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார்.அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது.
1993&லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது.1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560.2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது.3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320.5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502.6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998.7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224.8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது.9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.இத்தனை அரிய பட்டியலை வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்.டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை.போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது.16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும்.போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது. குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?) அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம்.மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர்.காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம் பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர்.இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன.கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில்1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும்,2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும்3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும்4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும்4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும்5. பீகாரில் 14 முஸ்லிம்களும்5. டெல்லியில் 11 முஸ்லிம்களும்6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது.குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும்.அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது.51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று.-

Tuesday, March 23, 2010

zahid azmi murder news article from abusalih


ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய ஷஹீத் ஆஷ்மி கொலை:
பலனடைந்த காவல்துறையும்&உளவுத்துறையும்!

தெஹல்கா பொறுப்பாசிரியர் அஜீத்சாகி குமுறல்!


சமீபத்தில் மும்பையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஷஹீத் ஆஸ்மி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் தெகல்கா புலனாய்வு இதழின் அஜீத்சாகி.

ஷஹித் ஆஸ்மி ரஷ்யா விலோ சீனாவிலே சுட்டுவீழ்த் தப்பட்டிருந்தால் ஷஹித் ஆஸ்மி யின் படுகொலைச்செய்தி மறுநாள் காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்திருக்கக்கூடும். எதிரியின் எதிரி நண்பன் என்ற கொள்கை அடிப்படையில் மேற்குலக மீடியாக்கள் இந்த கொலையை கண்டு கொள்ளவே இல்லை. வழக்கறிஞர் ஆஸ்மி இந்நாட்டில் வாழ்ந்து இந்நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரச பயங்கர வாதத்தை எதிர்ப்பது பயங் கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக மாறியது.

ஏனெனில் இந்தியநாடு மேற் குலக சக்திகளின் கையுறை மாட்டிய கைகளில் இருக் கிறது. இந்தியாவின் பெரும் பான்மையான மத்திய தரவர்க்கம் மேற்குலக நட்பின் பக்கமே சாய்ந்திருக்கிறது. மேற்குலக மற்றும் இந்திய மீடியாக்கள் ஆஸ்மியை பாராட்ட விரும்பவில்லை. ஆஸ்மி மும்பையில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு குறிப்பாக முஸ்லிம் களுக்காக நீதி வென்றிட போராடிய அந்த வீரத்தியாகி பயங்கரவாத ஆதரவாளர் என பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.

ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் புடினுக்கு எதிராக தீரத் துடன் போராடி மூன்றாண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட வீரப்பெண்மணி ரஷ்யப் பத்திரிகையாளர், மனித உரிமைப் போராளி அன்னாபொலிட் கோவ்ஸ்கியாவுக்கு இணையாக போற்றத்தக்கவர் வழக்கறிஞர் ஷஹித் ஆஸ்மி.

ரஷ்யாவிலோ, சீனாவிலோ, ஈரானிலோ அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்ட வர்களாக இருந்தால் மேற்குலகம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.

ஆஸ்மியின் நீதிக்கான யுத்தம் அசாத்திய துணிச்சல்மிக்கது. அவர் அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்கள் என கூறப்படும் அல்காயிதா, தாலிபன் அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தவறாக குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்காகவும் ஆஸ்மி சட்டயுத்தத்தில் இறங்கினார். நான் நேரடியாக கேட்க விரும்புவதெல்லாம். ஷஹீதின் படுகொலையில் பயனடையந்தது இந்திய புலனாய்வுத்துறையில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கான பதில் தான் இதற்கான பதிலும், இந்திய உள்துறை அமைச்சகம், ரா, இன்டலிஜென்ட்ஸ் பீரோ போன்றவைகளால் கற்பிக்கப் பட்ட பயங்கரவாதம் என்ற கற்பிதத்தை உடைத்து ஒவ்வொரு வழக்கையும் ஜெயித்துக்காட்டினார்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஏராளமான பேருக் காக வாதாடி அவற்றில் பெரும் பாலான வழக்குகளில் வெற்றி கண்டு மகாராஷ்ட்ரா காவல் துறையின் இழிசெயலை அம்பலப்படுத்தினார்.

2008ம் ஆண்டுவரை கைது செய் யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் ஏறக் குறைய ஒரு டஜன் பேருக்காக வாதாடி னார். குஜராத்தில் பல்வேறு பயங்கர வாதக் குற்றச்சாட் டுக்கள் சுமத்தப்பட்ட பலருக்கு சட்டப்பூர்வமான ஆதரவு கொடுத் தார் ஆஸ்மி.

கடந்த ஜுலை மாதத்தில் மும்பை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஆஸ்மிக்கு எதிரிகள் உருவானார்கள்.

சிறைச்சாலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக அடைக் கப்பட்டவர்களை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கினார்கள். கொடூரமான தாக்குதல் தொடுத்த சிறை காவலர்களுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற் றியை ஈட்டினார் ஆஸ்மி.

இந்த நிகழ்வு சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரி களின் வெறுப்புக்கு தீனி போடு வதாக அமைந்தது.

கடந்த டிசம்பர் 11&ம் தேதி இந் நிகழ்வைக் குறித்து அவரது அலுவலகத்தில் என்னிடம் ஆஸ்மி கூறினார். சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கிய வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்த அன்று எங்கள் சேரியில் இருந்து ஏராளமான அப்பாவிகளை பயங்கரவாதிகள் எனக்கூறி இழுத்துச் சென்று உதைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார் ஆஸ்மி.

நான் அவரை ஜுலை 2008&ல் முதன்முறையாக சந்தித்தபோது, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்பாவி முஸ்லிம்கள் மீது காவல் துறையினரால் புனையப்பட்ட சங்கதிகளை எனக்கு வழங்கினார். ஷஹித் ஆஸ்மி வழங்கிய தகவல்கள் வைத்து ஒரே மாதத்தில் சிமி அமைப்பினர் மீதான வழக்குகள் குறித்த புலனாய்வு தகவல்களை குறித்த முழுமையான செய்தி தெஹல்காவில் வெளியிடப்பட்டது. சிமி அமைப் பினர் எவ்வாறு பொய் யான குற்றச்சாட்டில் சிக்கவைக்கப் பட்டனர் என்ற ஆதாரபூர்வ செய்திகள் தெஹல்காவில் வெளியானது.

இந்ததேசம் மறுக்கவே முடியாத, சவால் விடவும் துணியாத நிகழ்வாக இது அமைந்தது.

மகாராஷ்ட்ரா கண்ட்ரோல் ஆஃப் ஆர்கணைஸ்ட் கிரைம்ஆக்ட் ((MCOCA) என்ற மகாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புச்சட்டம் குறித்து உண்மைகளை எங்கள் தெஹல்கா இதழைச் சேர்ந்த ரானா அய்யூப் கடந்த மாதம் வெளிவந்த இதழில் அம்பலப்படுத்தினார்.

(MCOCA) சட்டப்பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து முழுமையான செய்தி வந்தது ஷஹித் ஆஸ்மியின் வற்புறுத்தலால் தான் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

கடந்த மாதம் ஆஸ்மியை நான் சந்தித்தேன். மூன்று முக்கிய வழக்குகளில்தான் தீவிரமாக இறங்கி சட்டயுத்தம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

2006-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய வழக்குகள் குறிப்பாக மும்பையில் 187 மக்கள் உயரிழக்கக் காரணமாக இருந்த ரயில்குண்டு வெடிப்பு வழக்கு 37 அப்பாவிகளை பலி கொண்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் தான் ஆஜராவதாகக் குறிப்பிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் தவறாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் மீதான குற்றச் சாட்டுக்கு ஒரு சிறு ஆதாரமும் இல்லை. (ஜீரோ எவிடென்ஸ்).

மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து ஆஸ்மி உச்சநீதிமன்றம் சென்றார். இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் விரோதமானது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டத்தை நாடாளுமன்றம் மட்டுமே இயற்றமுடியும் என் றார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

ஆஸ்மியின் வாழ்வு வீர வாழ்வு, வீரமரணமடைந்த ஆஸ்மிக்கு 32 வயது தான். ஐந்து சகோதரர்களில் மூன்றாவதாகப் பிறந்த ஆஸ்மியின் வாழ்வு 1992&ல் மாறியது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்த மதவெறிக்கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவன் ஆஸ்மியை பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு கொல்ல முயன்றனர்.

ஹிந்து நண்பரான அண்டை வீட்டுக்காரர் ஷஹித்தை காப்பாற்றினார்.

ஆஸ்மிக்கு 16 வயதாக இருக்கும் போது தோளில் துப்பாக்கி தூக்கி காஷ்மீருக்கு சென்றார்.எல்லை தாண்டி செல்லவும் முயன்றிருக்கிறார். என்னவோ தெரியவில்லை. உடனடியாக திரும்பிவிட்டார் என்று அவரது அண்ணன் ஆரிஃப் என்னிடம் கூறினார்.




1994&ம் ஆஸ்மி கைது செய் யப்பட்டார். இந்தியாவின் முன்னணி அரசியல்வாதியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கு ஒரே ஆதாரமாக குறிப் பிடப்பட்டது அவர் ஒருபோதும் கொடுக்காத ஒப்புக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம் ஆஸ்மிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.

டெல்லி திஹார் ஜெயிலில் ஆஸ்மி சும்மா இருக்கவில்லை. பட்டப்படிப்பு பயின்றார். சிறையில் அடைக்கப்பட் டவர்களின் சட்ட ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தார்.

2001&ம் ஆண்டு ஷஹீத் ஆஸ்மி விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த உடன் இதழியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்வியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு தான் துணை ஆசிரியராக பணி யாற்றிய பத்திரிகையிலிருந்து விலகி வழக்கறிஞர் மஜீத்திடம் ஜுனியராக மாதம் 2000 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். நான் ஏழைகளுக்காகவே பாடு படவே விரும்புகிறேன் என்றார்.

ஆஸ்மி பிரபலமானபின்னரும் கூட பெரும்பாலான கட்சிக்காரர்களிடம் கட்டணம் வாங்கியதை நான் பார்த்ததே இல்லை என்றார் அவரது அண்ணன் ஆரிஃப்.

மும்பையில், அந்த திங்கட் கிழமை (பிப்&11) நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் அழுது கொண் டிருந்தார். சுற்றியிருந்த மக்கள் ஏதும் புரியாமல் அமைதியாய் இருந்தனர்.

அதே நாளில் நான் அவசர வேலையாக சென்னை வந்து இருந்தபோது, நான் கேட்ட செய்தி இடியாய் என்னைத் தாக்கியது. ஷஹீத்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியே அது.

நான் தங்கியிருந்த தனியறை யில் உடைந்து அழுதேன். எனது மனம் பின்னோக்கி சென்றது. 1991&ம் ஆண்டு தொழிற்சங்க ஜாம்பவானும் சத்திஸ்கர் பழங்குடிமக்களுக்காக பாடு பட்ட சங்கர் குகாநியோகி சுட்டுக் கொல்லப்பட்டது என் நினைவுக்கு வந்தது.

அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்திருந்தேன். அது என் மனதில் நிழலாடியது. 18 மாதங்களுக்கு முன்பு ஷஹீத்தை சந்தித்ததிலிருந்து என்வாழ்வில் வருடக்கணக்காக எனது இலக்கற்ற பத்திரிகை வாழ்வை புதுப்பித்ததைப் போன்று இருந்தது.

நீதிக்கான போராட்டத்திலும் அதிகாரவர்க்கத்தை எதிர்த்த எனது போரிலும் ஷஹீத் எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக் கினார். எனது கண்ணீர் பெருக் கெடுத்து ஓடி வற்றியும் விட்டது. கண்ணீருடன் சென்னை தெருக் களில் சுற்றிக்கொண்டிருந்தேன்.

மும்பையிலிருந்து அதாவுர் ரஹ்மான் என்ற முதியவர் ஒரு வர் எனக்கு போன் செய்தார். (மும்பையில் 2006&ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட இருவரின் தந்தை தான் அதாவுர் ரஹ்மான்.

இந்த வழக்கிலும் ஷஹீத் தான் வாதாடினார்.) அவர், அஜீத் சாஹிப் என்று பேச ஆரம் பிக்கும்போதே, குரல் உடைந்தது. நாங்கள் இனி என்ன செய்வோம்? என்றார்.

நான் அவரிடம் மட்டும் அல்ல ஒவ்வொரிடம் சொல்கிறேன். ஷஹித்சாகவில்லை. அவரது சீரிய சாதனைகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

Wednesday, February 10, 2010

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! அபூஸாலிஹ்

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!
பெண்களின் முன்னேற்றமே, நாட் டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் National University of Education Planing and Administration (NUEPA) அமைப்பின் வருடாந்திர அறிக்கை பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 633 மாவட்டங்களிலும் உள்ள 12 லட்சத்து 29 ஆயிரம் அரசு அங் கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2008லி2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆரம்ப கல்வி நிலையில் ஒரு கோடியே 48லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகள் படித்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆரம்பகல்வியில் முஸ்லிம் குழந்தை களின் சேர்க்கை கணக்கு மொத்த எண்ணிக்கையில் 11.03 சதவீதம் ஆகும்.
நடுநிலை வகுப்புகளில் 40 லட்சத்து 87 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை விகிதமாக உள்ளது. இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும்.
2006லிலிருந்து 2007லிம் ஆண்டு வரை ஆரம்பக்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவமணிகளின் எண்ணிக்கை 9.39 சதவீதமாக இருந்தது. அதுவே 2007லி2008 ஆம் ஆண்டு 10.49 ஆக உயர்ந்தது. 2008லி2009 ஆண்டில் 11.03 ஆக உயர்ந்திருக்கிறது.
நடுநிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் 2006லி2007ல் 7.52 சதவீதமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2007லி2008ல் ஆம் ஆண்டில் 8.54 சதவீதமாகவும், 2008லி2009ஆம் ஆண்டு 9.13 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
ஆரம்ப கல்வி வகுப்புகளில் மொத்த முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையில் குறிப்பாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கையில் 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.(கடந்த ஆண்டு 48.67) இது தேசிய விகிதாச்சார விகிதமான 48.38 விகிதத்தை விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 49.49. சதவீதமாகும், இது தேசிய விகிதச்சாரமான 47.58விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வியில் 87 ஆயிரத்து 690 பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி விகிதத்தை எட்டியது.
ஜம்முலிகாஷ்மீரில் 12 மாவட்டங்களில் 90 சதவீதம் முஸ்லிம் மாணவமணி களின் வருகை உள்ளது. ஜம்முலி காஷ்மீரில் 15 மாவட்டங்களிலும் பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, லட்சத்தீவுகள் மற்றும் கேரளா மாநிலங் களில் தலா ஒரு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முஸ்லிம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்டங் களில் முஸ்லிம் மாணவர்களின் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது ஒரு வியப்புக்குரிய விஷயம் எனினும் அதே அஸ்ஸாம் மாநிலத்திலும், கேரளா, உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஆரம்பநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் பள்ளிச்சேர்க்கை திருப்திகரமான அளவில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், பீகார், சத்தீஸ் கர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேகாலயா, மிஜேராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப ஆரம்பநிலை மற்றும் நடுநிலைக் கல்விக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அமையவில்லை என அதிர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது

பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்கள் Wednesday, 10 February 2010 00:28 அபூஸாலிஹ்

இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் சிறப்பிடம் பெறும் பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்களில் விபரம் பத்மவிபூஷன் பெற்றவர்கள்.
* இப்ராஹிம் அல்காஜி டெல்லியைச் சேர்ந்தவர் கலைத்துறை சேவைக்காக விருது பெற்றார்.

* ஜெôஹ்ரா செகல் டெல்லி.

* அமிர்கான் மகாராஷ்ட்ரா.

* ஏ.ஆர்.ரஹ்மான் என்ற அல்லாரக்கா ரஹ்மான் தமிழ்நாடு.

* உஸ்தாத் சுல்தான்கான் மகாராஷ்ட்ரா.

* மூஸா ரஸா லி டெல்லி.

* ஃபரீத் ஜகரிய்யா (இதழியல் துறைக்காக) யு.எஸ்.ஏ.

* பேராசிரியர் முஹம்மது அமீன் இலக்கியம் மற்றும் கல்வி டெல்லி.

* குலாம் முஹம்மது மீர் பொதுநலச் சேவை ஜம்முகாஷ்மீர்.

* உஸ்தாத் வசீஃபுத்தீன் தாகர் டெல்லி.

* ரசூல் பூக்குட்டி கேரளா.

* சைஃப் அலிகான் மகாராஷ்ட்ரா.

பத்மஸ்ரீ விருது:

* ஹமீத் காஷ்மீரி - இலக்கியப்பணி ஜம்முகாஷ்மீர்.

* சாதிக்குர் ரஹ்மான் கித்வாய்

* இர்ஷாத் மிர்ஸா வணிகம் மற்றும் தொழில் உத்தரப்பிரதேசம்.

Web Counter Code