இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, May 29, 2008

ஜெய்ப்பூர்: தொடரும் பயங்கரவாத தாக்குதல்

-ஹபிபா பாலன்


ராஜஸ்தான் தலைநகரும் இந்தியா வின் முன்னணி சுற்றுலா நகரமுமான ஜெய்ப் பூரில் சென்றவாரம் நிகழ்ந்த குண்டு வெடிப் பில் 80 பேர் பலியாகியுள்ளனர். 2005க் குப் பிறகு பயங்கர வாத தாக்குதல் அச் சுறுத்தல் உள்ள பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளி யில் நடைபெற்ற 10வது பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். வழக்கம் போல் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் வலம் வரத்துவங்கியுள்ளன.

என்னதான் உத்தரவாதங்களை வழங்கினாலும் இந்தியா படிப்படியாக பாதுகாப்பற்ற நாடாக மாறிவருவதாக ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இயக்கங்களுக்குத் தொடர்பு என குற்றம்சாட்டப்படுவதும் அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி உள்ளூர் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதும் அடுத்தடுத்து நிகழும் காட்சிகளாக இருக்கும் என உலகின் எந்த மூலையிலிருந்தும் நாம் கூறலாம். ஜெய்ப்பூரிலும் இதேநிலை தொடருகிறது. வழிபாட்டுத்தலம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கும் கொலை பாதகர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த எந்த குண்டு வெடிப்பிலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவர வில்லை என்பது அதிரவைக்கும் உண்மையாகும்.

அதைவிட தவறாக இந்த வழக்கு களில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி களின் கதி என்ன? என்பது குறித்தும் எவ்வித தகவல்களும் வெளியிடப்பட வில்லை என்பது சோகமான ஒன்றாகும். குண்டு வெடிப்புச் சம்பவங்கள் எங்கு நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட சமூக இளைஞர்களை குறிவைத்து வளைக்கப் படுவதும், பெரும்பாலான ஊடகங்கள் ஊகங்களை செய்தியாக வெளியிடுவதும், பிரதான எதிர்க்கட்சி பொடாவை மீண்டும் கொண்டு வரவேண்டும் என பட்டிமன்றம் வைப்பதும் தொடருகிறது. பாவம் அப்பாவிகளின் அவல நிலை. தீரும் வழியைத்தான் காணோம்.

2006 செப்டம்பர் மாதம் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்காக பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர் களும் நறுமணம் பூசி மகிழ்ச்சியோடு சென்றனர் அதில் 56 பேர் மீண்டும் திரும்பவேயில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு துயர நிகழ்வாக அமைந்தது. 2007ல் மே மாதம் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதிலும், ராஜஸ்தானில் அஜ்மீர் தர்ஹாவுக்கு அருகில் நோன்பு துறந்து கொண்டிருந்தவர்களின் மத்தியில் வெடித்த குண்டுகளும் பல அப்பாவிகளின் உயிரைக் குடித்தது.

கடந்த மூன்றாண்டுகளில் ஹிந்து மற்றும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. நான்கு பள்ளிவாசல்கள், இரண்டு கோயில்கள் பயங்கரவாதிகளின் பாதகச் செயலுக்கு இலக்காயின. அம்மோனியம் நைட்ரேட் மற்றும் ஆர்.டி.எக்ஸ் போன்ற பொருட்கள் பயன்பட்டதாக விசாரணைக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். அம்மோ னியம் நைட்ரேட் உள்ளூர் கயவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள்கள் ராணுவத்தோடு தொடர் புடையவர்கள் அல்லது சர்வதேச தொடர்புடை யவர் களுக்கு மட்டும் பெறமுடியும் என சொல்லப்படுகிறது.

வெடிபொருட்களை சாதாரண பையில் வைத்து முஸ்லிம்கள் அதிகம் கூடும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமையும் ஹிந்துக்கள் அதிகமாக கூடும் செவ்வாய்கிழமைகளில் கோயில் களிலும் வைத்துவிடுகிறார்கள். அப்போது தான் இறப்பும் இழப்பும் அதிகமாக இருக்கும் என்பது சதிகாரர்களின் திட்டம். ஆனால் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் குறித்து இதுவரை துல்லியமான புலனாய் வுகள் வெளிப்படவில்லை. முஸ்லிம் களை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்து வது திட்டமிட்ட சதி என மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பிறகு 2006 ஏப்ரலில் மகாராஷ்ட்ரா மாநிலம் நான்டெடில் பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் குண்டு வெடித்தது. அதில் அந்த அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு சில மாதங்கள் கழித்து தான் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அப்போது பலியானவர்களின் உடல்களுக்கு நடுவே ஒட்டுத்தாடியுடன் கூடிய அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைப்பார்த்ததாக உள்ளூர்வாசி கூறினார். முஸ்லிம் போல் வேடமிட்டு சதிகாரன் ஒருவன் இந்த சதிச் செயலை செய்ததாக நடுநிலையாளர் கள் கூறியதை விசாரணைப்படையினர் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். 40 பேர் படுகாயமடைந்தனர். உல்ஃபா தீவிரவாத இயக்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. உல்ஃபா அதனை வன்மையாக மறுத்தது. அத்தோடு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் மீது உல்ஃபா குற்றம்சாட்டியுள்ளது அவ்வாறே மத்தியப்பிரதேசத்தில் வெடிகுண்டுகள் தயாரித்த சங்பரிவார் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனைப்படுகிறார் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகக் குண்டு வெடிப்பில் சதிச்செயலில் ஈடுபட்டதாக ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரை தமிழகக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய அளவில் பிரத்தியேக உளவுப்படை அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்
வேலியில் போகும் ஓணானை..

.ரக்சன்




அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பலத்த சர்ச்சைகள் இறக்கை கட்டி பறந்து கொண்டிருக்கும் சூழலில் சர்ச்சைகளில் அடிபடாத முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கினார்.

இந்திய ஏவுகணை தொழில் நுட்பத் தின் முன்னோடி என்றும் அணு ஆயுத தொழில் நுட்பத்தின் பிதாமகன் என்றும் போற்றப்படும் கலாம் இத்தகைய கருத்தினை உதிர்த்திருக்க வேண்டாம் என்பதே பொது மக்களின் கருத்தாக இருக்கிறது.

நாட்டில் உள்ள அணுமின் உற்பத்தி நிலையங்கள் யுரேனியம் எரிபொருள் களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. இந்த எரிபொருள் இந்தியாவில் அதிக அளவு கிடைப்பது இல்லை. ஆனால் இதற்கு மாற்றாக, தோரியம் எரிபொருள் நிறையக் கிடைக்கிறது.

இதனை அணு உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ள சுமார் பத்து வருடங்கள் ஆகலாம். எனவே யுரேனியம் எரிபொருளை பெறுவதற்கு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதில் எவ்வித தவறும் இல்லை என அப்துல் கலாம் தெரிவித்திருக்கிறார்.
இதையே ஒரே பிடியாக பிடித்துக் கொண்ட அமெரிக்காவின் நேசாபிமானி பிரதமர் மன்மோகன் சிங் அறிவார்ந்த விஞ்ஞானிகள் சொல்வதை நாட்டு மக்கள் ஏற்பார்கள் என பாய்ந்து விழுந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

எதற்காக ஒப்பந்தம் என்பதைவிட யாருக்காக ஒப்பந்தம்,,,, என்பதே முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் மின்சாரத் தேவையை நிறைவேற்ற அணுமின் நிலையத்தை தாராப்பூரில் அமைத்தபோது எரிபொருள் தருவதாகக் கூறிய அமெரிக்கா அப்பட்டமாக ஏமாற்றியது. அமெரிக்காவின் அத்தகைய மனப் பான்மை இன்றும் மாறவில்லை என்பதே விவரமறிந்தவர்களின் கருத்தாக இருக் கிறது. இந்நிலையில் கலாம் அமெரிக்கா வுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக சலாம் போடுவது எதற்காக?

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் 'ஹைடு' ஒப்பந்தம் குறித்து வெளிப்படையாக பேசாமல் அமெரிக்க ஒப்பந்தம் குறித்து பேசி பயன் ஒன்றும் விளையப் போவதில்லை.

சொன்னது அப்துல் கலாமாகவே இருந்தாலும் கூட அது புறக்கணிக்கப்படக் கூடிய கருத்தே.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாதின் இந்திய வருகை குறித்து அமெரிக்கா என்ன சொன்னது? எவ்வாறு ஆணவமாக உத்தரவிட்டது. ஈரான் அதிபரோடு அணுசக்தி விஷயம் பற்றி பேச வேண்டாம் என உத்தரவிட வில்லையா? உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர எத்தனிக்கும் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை கண்ணை மூடி ஆதரிக்கும் கலாம்களும் மன்மோகன் சிங்குகளும் அமெரிக்காவின் ஆதிக்க மனோபாவத்தை மூடி மறைத்து என்ன தான் ஆதரவு கானங்கள் பாடினாலும் இந்திய மக்களிடம் அது எடுபடாது என்பது உறுதி

Thursday, April 3, 2008

சீனா: மனித உரிமைகள் மரணப் படுக்கையில்...
அப்பாவிகளின் உரிமைகளை
நசுக்குவது என்றால் சீனாவுக்கு அலாதி
பிரியம். பல ஆண்டுகளுக்கு முன்பு
பெய்ஜிங் தியான்மென் சதுக்கத்தில்
ஆயிரக்கணக்கான மாணவர்களைக்
கொன்றது. என்னதான் பொதுவுடமை
சித்தாந்தத்தை உயர்த்தி பிடிப்பதாக சீனா
கூறிக்கொண்டாலும் மனித உரிமைகளை
மீறுவதில் உலகத் தரத்தை எட்டிப்
பிடிக்கிறது.
திபெத்தில் சீனா ஆடிய வெறியாட்
டம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
திபெத் மக்கள் தீவிர போராட்டத்தில்
குதித்தனர். நூற்றுக்கு மேற்பட்ட
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்
பட்டனர். சீனாவில் இவ்வாண்டு
நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்
டிக்கு இடையூறு விளைவிப்பதற்காக
மேற்குலக ஏகாதிபத்திய சக்திகள்
இத்தகைய சதிகளை நிகழ்த்துவதாக
சீனாவை ஆதரிப்பவர்கள் கருத்து
பரப்பினர். இருப்பினும் அமெரிக்கா
ஆதரிப்பதாலேயே அதில் நியாயம்
இல்லை என முடிவுக்கு வந்துவிட
முடியாது.
பல்லாண்டுகளாக திபெத்தியர்களின்
உரிமைகளை நசுக்குவதைக் கண்டு
திபெத்தியர்களின் சமயத்தலைவர்
தலாய்லாமா உரிமைக்குரல் எழுப்பினார்.
திபெத் நாட்டின் இளைய தலைமுறை
யினரை சீன கொடுங்கோன்மை அரசு
குதறுவதாக குமுறினார்.
திபெத்தியர்களின் தீரமிக்க போராட்
டம் தீயாய் திக்கென பற்றிக் கொண்டது.
அது சீன தேசத்தை நிம்மதி இழக்கச்
செய்து வருகிறது.
தி ù ப த் ,
உ ரி û ம ப்
போராட்
டத்தி
னால்
சர்ச்சை
யில் சிக்கித்
தவிப்பது என்பது
உண்மை. எனினும் திபெத் பிரச்சினை
யைவிட நீறுபூத்த நெருப்பாக சீனாவின்
ஜின்ஜியாங் மாகாணம் விளங்குகிறது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும்
பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்
களின் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை
மீறல்கள் குறித்தும் உலகம் தனது
கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
என்பதே நடுநிலையாளர்களின் எதிர்
பார்ப்பாக உள்ளது.
பரப்பளவில் பிரான்ஸ் நாட்டை விட
மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்
பகுதியில் வாழும் பெரும்பான்மை
மக்களான முஸ்லிம்கள் துருக்கிய
இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.
1949க்கு முன்பு வரை ஜின்ஜியாங்
சுதந்திர பூமியாக விளங்கியது பின்னர்
சீனா எழுச்சிபெறத் தொடங்கியதும் தனது
ராட்சஸ ராணுவ பலத்தை பயன்படுத்தி
ஜின்ஜியாங் பகுதியை
தனது நாட்டுடன்
இ û ண த் து க்
கொண்டது.
ஏ ர ô ள
ம ô ன
இ ய ற் û க
ù ச ல் வ ங்
க û ள
தன்னகத்தே
ù க ô ண் டி
ரு க் கு ம்
ஜி ன் ஜி ய ô ங்
மாகாணம் சீனாவின்
அணுஆற்றல் முக்கியத்
துவம் பெற்ற பகுதியாகவும்
இருக்கிறது. சுரங்கத் தொழிலில் மட்டு
மின்றி சர்வதேச அளவில் சீனா
முக்கியத்துவம் பெற காரணமாக
இருக்கும் ஜவுளித் தொழிலிலும்
இம்மாகாணம் முதலிடம் வகிக்கிறது.
பருத்தி உற்பத்தியில் 30 சதவீதம்
இம்மாநிலத்தின் பங்களிப்பாகும்.
அகண்ட சீனாவின் ஆறில் ஒரு
பகுதி நிலப்பரப்பை ஜின்ஜியாங்
மாகாணம் கொண்டிருந்தாலும் இதன்
மக்கள் தொகை வெறும் ஒரு கோடியே
80 லட்சமாகும்.
பெரிய நிலப்பரப்பு குறைந்த அளவே
ஜனத்தொகை கொண்ட மக்கள் அதுவும்
முஸ்லிம்கள். எனவே மக்கள் தொகை
பெருக்கத்தால் விழி பிதுங்கிய சீனா தனது
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள
'ஹான்' இனமக்களை ஜின்ஜியாங்கில்
குடியமர்த்தத் தொடங்கியதைத்
தொடர்ந்து சீன அரசுக்கு எதிர்ப்புகள்
புறப்பட்டன.
அதனை எதிர் கொள்ள முடியாத
சீனா, ஜின்ஜியாங் முஸ்லிம்களை
அடக்கியாளத் தொடங்கியது.
1953ல் இருந்து 75 லட்சம் ஹான்
இனமக்களை சீன அரசு ஜின்ஜியாங்
மாநிலத்தில் குடியமர்த்தியது. 1990களில்
இருந்து அப்பகுதி மக்களின் மொழியை
நசுக்குவதோடு சீனர்களின் பிரதான
மொழியான மாண்டரினுக்கு முக்கியத்து
வமும் அதிக நிதி ஒதுக்கீடும் வழங்கப்
படுகிறது. ஜின்ஜியாங் மாகாணத்தில்
எப்போதும் ராணுவத்தைக் குவித்து
வைத்திருக்கும் சீனா அங்குள்ள
இளைஞர்களை தீவிரவாதத் தொடர்பு
டையவர்களாக சித்தரித்து சித்திரவதை
செய்வதாக மனித உரிமை ஆர்வலர்கள்
வேதனை தெரிவித்துள்ளனர். ஜின்ஜியாங்
மாநிலத்தின் அண்டை நாடுகளான
முன்னாள் சோவியத் யூனியனின்
குடியரசுகளாய் இருந்து பின்னர்
விடுதலை பெற்ற நாடுகளான துர்க்மினிஸ்
தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும்
உஸ்பெகிஸ்தான் போன்றே விடுதலைப்
பெற வேண்டும் என அங்கு சில
போராளிக் குழுக்கள் போராடி
வருகின்றன.
சீனா உரிமைக் குரலை நசுக்குகிறது.
எனினும் ஜின்ஜியாங் பகுதியில் சுதந்திர
ஏக்கத் தீ பற்றிப் பரவுகிறது.
பள்ளிவாசலில் நாங்கள்தான் குண்டு வைத்தோம்! மீண்டும் வெடிக்கும்!!
சங்பரிவார் மிரட்டல்!
இந்திய எல்லையில் இமயமலை
பரப்பில் இருக்கும் நேபாளம் மன்னர்
ஆட்சியின் அதிகார இறக்கைகள்
வெட்டப்பட்டு ஜனநாயகப் பாதைக்கு
திரும்பி வருகிறது. இந்நிலையில்,
நேபாளத்தை மதவாத நாடாக மாற்ற
வேண்டும் என ஒரு கும்பல் தீவிரமாக
திட்டமிட்டுவருகிறது. நேபாள மக்களின்
ஒற்றுமைக்கு வேட்டுவைக்கும் முயற்சி
யில் தொடர்ந்து ஈடுபட்டது. நேபாள
பாதுகாப்புபடை என்ற பெயரில் செயல்
பட்டு வரும் மதவாத அமைப்பு இது.
இது நேபாளத்தை சங்பரிவார் நாடாக
மாற்ற தொடர்ந்து கலவரம் விளைவித்து
வருகிறது. இந்நிலையில், நேபாளத்
தலைநகர் காட்மாண்டுக்கு தென்கிழக்கில்
200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
பிராட்நகரில் உள்ள சின்ன பள்ளி
வாசலில் குண்டுவெடித்தது. இதில் பள்ளி
வாசலில் தொழுகைக்காக வந்திருந்த
இருவர் கொல்லப்பட்டனர். 60க்கும்
மேற்பட்ட முஸ்லிம்கள் மாலை நேரத்
தொழுகை யில் ஈடுபட்டிருக்கும் போது
மூன்று குண்டுகள் வெடித்துள்ளன. இது
மார்ச் 29ஆம் தேதி நடந்தது.
குண்டுகள் வெடித்தவுடனே ''தாங்கள்
தான் இந்த தாக்குதலை நடத்தினோம்''
நேபாளத்தை ஹிந்துத்துவா நாடாக
மாற்றும் வரை இது போன்ற தாக்குதல்கள்
தொடரும் என்றும் தேசிய பாதுகாப்பு
படை என்ற பெயரில் செயல்படும்
கோட்சே கும்பல் தெரிவித்துள்ளது.
நேபாளம் 2006 ஆம் ஆண்டுவரை
உலகின் ஒரே ஹிந்து நாடாக அறிவிக்
கப்பட்டிருந்தது. பின்னர் அரசியல் சாசன
சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு
நேபாளம் மதசார்பற்ற நாடாக
அறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஏ.
உலக உண்மைகள் என்ற நூலில்
குறிப்பிடப்பட்டு உள்ளதைப் போல்
இரண்டு கோடியே 80 லட்சம்
மக்கள் வாழும் நேபாளத்தில் 80
சதவீதத்தினர் ஹிந்துக்களாவர்.
இந்நிலையில், பள்ளிவாசலின் மீது
நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்வரும்
ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற
விருக்கும் நாடாளுமன்ற தேர்தலை
சீர்குலைக்கும் சதி என்றும் அதற்கு
தாங்கள் ஒருபோதும் அடிபணிய
மாட்டோம் என்றும் நேபாளப் பிரதமர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்
கிறார்.
நேபாளத்தில் முகாமிட்டிருக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்
குழு பள்ளிவாசல் மீதான குண்டு வெடிப்பு
தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்
துள்ளது. ஐ.நா.பார்வையாளர் குழுவின்
தலைவர் தனது கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளார். இது மதவாத விஷமி
களின் திட்டமிட்ட தாக்குதல் தான்
சந்தேகமே இல்லை என்றும் ஆவேசத்
துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
பள்ளிவாசலில் வெடிகுண்டுதாக்குதல்
நிகழ்த்தப்பட்ட சிறிது நேரத்தில் முஸ்ம்கள்
வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்
தில் குதித்தனர். எங்கள் போராட்டம்
கலவரமாக வெடிக்காமல் தவிர்த்துக்
கொள்ள எங்களால் முடியும் என
தெரிவித்த முஸ்லிம் இத்திஹாதுல்
அமைப்பின் தலைவரான ஜாஃபர்
அஹ்மத் ஜமாலி முஸ்லிம்களுக்கு
நாடாளுமன்றத்திலும், ராணுவத்திலும்
அதிக அளவு இடம் ஒதுக்க வேண்டும்
என்றும் கூறியிருக்கிறார்.
காந்தியைக் கொன்ற கோட்சே
மதவெறி கும்பலின் கொடிய கரங்கள்
இந்தியாவை தாண்டியும் விரியத்
தொடங்கியிருப்பது உலக அமைதிக்கு
ஏற்பட்டிருக்கும் ஆபத்தாகவே முடியும்
என அரசியல் பார்வையாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

Thursday, March 27, 2008

ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?



அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான். இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங் களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் 'கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.

இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது. உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.
ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமை யாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங் களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை ஏற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்ப தாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் நர்ம்ங் எர்ண்ழ்ம்ஹய்ள் நஹன்ஹக்ள் ஹய்க் ல்ஹழ்ஜ்ஹஜ்ஹள் (1578 லி 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக் களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளை யும் பட்டியலிடுகிறது. ''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர் கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன் மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்கா ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட
ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகை யில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர். மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (ஒள்ப்ஹம் ஹய்க் ஒய்க்ண்ஹய் ஈன்ப்ற்ன்ழ்ங்) என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு. நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்
ஈராக்:ஆறாவது ஆண்டாகத் தொடரும் ஆக்கிரமிப்பு படுகொலைகள்!

ஈராக் மீது பொய்யான குற்றச்சாட்டுக் களைக் கூறி அந்நாட்டு அதிபர் மாவீரன் சதாம் ஹுஸைனை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு நாகரீகத்தின் தொட்டிலான அந்த பழம் பெருமை வாய்ந்த பூமியை அமெரிக்கா ஆக்கிரமித்து ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் செலவில் வரலாறு காணாத அளவு வேதனைகளையும் இழப்புகளையும் சந்தித்த இந்தப் போர் வளைகுடாப் பிராந்தியத்தின் அரசியல், சமூக பொரு ளாதார நிலையையும் சீரழித்துவிட்டது..

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை ஈராக் போர் முனையில் பறிகொடுத்தும்கூட அந்தக் கொடூர நிகழ்வு ஆறாவது வருடத்தை எட்டுகிறது.

அதனைத் தொடர்ந்து ஈராக்கிற்கு எதிரான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டைம் சதுக்கத்தில் நிகழ்ந்த ஈராக் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

அவ்வாறே பிரிட்டன் தலைநகர் லண்டனில் டிரஃபால்கர் சதுக்கத்தில் 40 ஆயிரம் பேர் திரண்டு போர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், பிரிட்டனின் தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுன் போன்றோரை போர் குற்ற வாளிகளாக அறிவித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன
ஜஸீராவா...? இஸ்ரேல் அலறல்!



இஸ்ரேலின் ராணுவப் பயிற்சியை ரகசியமாகப் படம் பிடித்ததாக அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் அதிரடியான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.
இஸ்ரேலின் ராணுவத்துணை அமைச்சர் மெஜல்லி பீ இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக் காட்சி நிறுவனத்தின் செய்திகள் நம்ப தகுந்தவை அல்ல. அல்ஜஸீராவின் செய்திகள் எங்கள் உணர்வுகளை காயப் படுத்துகின்றன. எனவே அல்ஜஸீரா செய்தியாளர்கள் இஸ்ரேல் அரசு அலுவலகங்களில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று அந்நாடு அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தடை செய்தது. அந்த மக்கள் மெழுகு வர்த்தி ஒளியில் தங்களது அன்றாட வாழ்க்கையை தொடர்ந்ததாகவும் உலக அளவில் அது இஸ்ரேலுக்கு கடுமை யான பின்னடைவை ஏற்படுத்தியதாக வும் அதனால்தான் இந்த தடை என பெயர் குறிப்பிட விரும்பாத அல்ஜஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அல்ஜஸீரா பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் தெரிவித்திருக்கிறார்

Web Counter Code