இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, August 11, 2012

எகிப்தின் அதிபரானார் டாக்டர் முஹம்மது முர்ஸி - அரபு வசந்தத்தின் முதல் வெற்றி

எகிப்தின் அதிபரானார் டாக்டர் முஹம்மது முர்ஸி - அரபு வசந்தத்தின் முதல் வெற்றி

எகிப்தின் அதிபர் தேர்தலில் டாக்டர் முஹம்மது முர்ஸி வெற்றி பெற்றுள்ளார். பதிவான 2 கோடி 60 லட்சம் வாக்குகளில் 1 கோடியே 32 லட்சம் வாக்குகளை அவர் பெற்றுள்ளார். இது பதிவான வாக்குகளில் 51 சதவீதம் ஆகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஹ்மது ஷபீக் பெற்ற வாக்குகள் 1 கோடியே 23 லட்சம் வாக்குகள் ஆகும். அஹமது ஷபீக், ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தபோது பிரதமராக இருந்தவர். அவரைத் தோற்கடித்து இஹ்வான்களின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸி அதிபராகியுள்ளார்.
இது அரபு வசந்தத்தின் முதல் வெற்றியாகவும், இஹ்வான்களின் எழுச்சியாகவும் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் செல்லாதவை யாகும். தஹ்ரீர் சதுக்கம் உற்சாக வெள்ளத்தில் ததும்பியது.
இறைவன் மிகப் பெரியவன், இராணுவ ஆட்சி வீழட்டும் என்ற முழக்கங்களால் தஹ்ரீர் சதுக்கம் அதிர்ந்தது. அதிபர் தேர்தல் முடிவு எகிப்திற்கு மட்டுமல்ல, அரபுலகத்திற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது என்றால் அது மிகையன்று. ஹோஸ்னி முபாரக் என்ற சர்வாதிகாரி வீழ்த்தப்பட்டு 500 நாட்களுக்குப் பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. முர்ஸியின் வெற்றியை மொத்த அரபுலகமும் வரவேற்றுள்ளது.
1979ஆம் ஆண்டு எகிப்துடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட இஸ்ரேல், இஹ்வான்களின் வெற்றியை விரும்பாததை சத்தமில் லாமல் வெளிப்படுத்தியது. எகிப்து அதிபர் தேர்தலின் முடிவு குறித்து கருத்துச் சொல்லும் நேரம் இதுவல்ல என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் மார்க்ரெஜவ் தெரிவித்தார்.
பாலஸ்தீன காஸா பகுதியில் இஹ்வான்களின் வெற்றிச் செய்தி வெளியாகத் தொடங்கியதும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது. வீதிகளெங்கும் ஹமாஸ் போராளி கள் துப்பாக்கி குண்டுகள் முழங்கி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.
இஹ்வான்களின் அரசியல் எழுச் சிக்கு அடையாளமாக வெற்றிபெற்ற எகிப்தின் புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். டாக்டர் முர்ஸியின் வெற்றி இஸ்லாத்தின் எதிரிகளுக்கு மரண அடியாக இருக்கும் என ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் ஜஹர் தெரிவித்தார். முர்ஸியின் வெற்றி அரபுலகின் மிகப்பெரிய நாடான எகிப்தின் அரசியல் ஸ்திரத்தன்மையையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றும் என நம்புவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில், நில வியல் அமைப்பில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் எகிப்தில் இஹ்வான்களின் மூத்த பிரமுகர் டாக்டர் முர்ஸி அதிபரானது அரபு வசந்தத்தின் முதற்கட்ட வெற்றியாக கருதப்படுகிறது.
ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டைக்காடாக இருந்த அரபகம் தற்போது மெல்ல மெல்ல ஏகாதிபத்தியத்தின் முனைமுறிக்க காத்துக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் பல்லாயிரக்கணக்கா னோரை படுகொலை செய்தும், ஆயிரக்கணக்கில் தனது நாட்டு வீரர்களைப் பறிகொடுத்தும் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓட்டம் பிடித்ததும், லிபியாவில் அந்நாட்டுத் தலைவனை உள்ளூர் எதிரிகளோடு இணைந்து படுகொலை செய்து விட்டு அந்நாட்டின் தேசிய எழுச்சியை அடக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்கா.
சிரியாவில் கிளர்ச்சியை திரை மறைவில் ஊக்குவித்து இன்றுவரை மூக்கறுபட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஈரானுடன் போர்த் தொடுக்க வேண்டுமென இஸ்ரேல், அமெரிக்காவைக் கெஞ்ச, அமெரிக்கா பதைபதைப்புடன் ஈரானின் ஆயுத வல்லமையை சந்தேகக் கண்கொண்டு நோக்குகிறது.
ஈரான் மீதான போர் என்ற பெயரில் மீண்டும் ஒரு பொருளா தார மற்றும் இழப்புகளை சந்திக்க வேண்டுமா என தயக்கத்திலும் தடுமாற்றத்திலும் இருக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் கொஞ்ச நஞ்ச ஆணவ ஆட்டத்தின் ஓட்டத்தைக் கூட ஒரேயடியாக நிறுத்தவேண்டிய நிர்பந்தம் நாளை ஏற்படுமோ என அஞ்சுகிறது. இதுவரை ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர்கள் அரபு தேசியத்தை முழங்குபவர்களாகவும், ராணுவ வல்லமையில் மட்டுமே ஈடுபாடு காட்டியவர்களாகவும் இருந்தனர். முதன்முதலாக சித்தாந்த ரீதியிலான எதிரிகளை ஏகாதிபத்தியம் சந்திக்கிறது.
இது உலக வரலாற்றில் எதிர்பாராத திருப்பமாகும். அரபுலகில் காலகாலமாக ஆளும் வர்க்கமும்கூட எகிப்தில் நடைபெற்ற இந்த அதிபர் தேர்தல் வெற்றியை ஒருவித கவலையுடன் தான் அவதானிக்கின்றனர். இஹ்வான்களின் எழுச்சி சர்வதேச அதிர்வலையை எழுப்பக் காரணம் என்ன? இஹ்வான்களின் சாதனை என்ன?

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி -  இரண்டு

 ( முர்ஸி முன்னுள்ள சவால்கள் )

ஒரு சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி அதிபர் பதவியை ஏற்ற பின்னர் தன் நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தைப் பேணிக்காப்போம் என உறுதியளித்த புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி, கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை அரபுலகில் மலர்ச்சியையும், மேற்குலகிலும் சியோனிச சக்திகளுக்கு மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பாலஸ்தீன மக்களுக்கு நாங் களும் எங்கள் அரசும் மிகுந்த பக்கபலமாக இருப்போம் என தனது உரையில் தெரிவித்தார். 70களில் அன்வர் சதாத்தும், அதன் பின்னர் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கும் தொடர்ந்து இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகளுடன் கொஞ்சிக் குலாவினர்.
இஸ்ரேலின் மனம்கோணாமல் வெளியுறவுக் கொள்கை அமைத்து பாலஸ்தீன மக்களை, அவர்தம் உரிமைப் போராட்டங்களை நசுக்குவதில் பெரும் பெயர்பெற்று விளங்கிய முன்னாள் எகிப்திய அரசுகளுக்கு மாற்றாக இன்றைய இஹ்வான்களின் தளபதியும், புதிய அதிபருமான டாக்டர் முஹம்மது முர்ஸி, பாலஸ்தீன மக்கள் இழந்த உரிமைகளை மீட்க எகிப்து அரசு பாடுபடும் என நைல்நதிக் கரையிலிருந்து முழங்கிய சிம்ம கர்ஜனை ஆதிக்க சக்திகளுக்கு நிச்சயம் உதறலைக் கொடுத்திருக்கும். ஏனைய அரபு நாடுகளைவிட பாலஸ்தீன மக்களுக்கான உரிமை மீட்புப் போரை ஆதரிக்கவும் வெற்றிபெறச் செய்ய வைக்கவும் எகிப்திய அரசுக்கே முழு உரிமையும், தார்மீகக் கடமையும் உண்டு என்றால் அது மிகையல்ல. காஸா பகுதியை இஸ்ரேல் இன்றுவரை கொடூர முற்றுகையில் ஆழ்த்தி கொடுமை செய்துவரும் வேளையில் பாலஸ்தீன மக்கள் உண்ண உணவின்றியும், பச்சிளம் மழலைகள் பாலின்றியும், நோயா ளிகள் உயிர்காக்கும் மருந்துகள் இன்றியும் தவித்தனர். முற்றிலும் சியோனிச எதிரிகள் சூழ்ந்துநின்ற நிலையில் எகிப்தின் எல்லை வழியாக நிலத்தில் துளையிட்டு சுரங்கப்பாதை அமைத்தும் பாலஸ் தீன மக்கள் உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை ரகசியமாகப் பெற்றுக் கொண்டிருந்தனர். இஸ்ரேல் ராணுவத்தின் அரக்கப் பிடிக்குள் இருந்து தப்ப முயன்ற பல பாலஸ்தீனர்கள் தப்பிச்செல்வதைத் தடுக்க தனது எல்லையான ரஃபா பகுதியை எகிப்து மூடியது.
காஸா பகுதியில் உயிருக்குப் போராடித் துடிக்கும் ஜீவன்களைக் காப்பாற்ற உலகெங்கும் உள்ள மருத்துவர்கள் 2007ஆம் ஆண்டு எகிப்தின் ரஃபா எல்லையில் குவிந்தனர். உயிர்காக்கும் மருந்து களைக் கொடுத்து அவசர சிகிச்சை செய்து அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என மொராக்கோவிலிருந்து இந்தோனேஷியா வரை உள்ள நாடுகளில் இருந்துவந்த மருத் துவர்கள் துடிதுடிப்புடன் வேண்டு கோள் விடுத்தபோது எகிப்திய அரசு மருத்துவர்களை தனது ரஃபா எல்லை வழியாக காஸா வுக்குள் நுழைய அனு மதி மறுத்தது. காஸாவின் இஸ்ரேலின் முற்றுகையால் மக்கள் பரிதவித் ததைப் போன்றே எல்லையைத் திறக்க மறுத்த எகிப்தின் அன்றைய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் செயலாலும் பெரும் துன்பம் அனுபவித்தனர்.
இஸ்ரேலுக்கு இணையாகவே பாலஸ்தீன மக்களை வஞ்சித்து வந்த நாடு எகிப்து. அந்த நாட்டின் இன்றைய அதிபர் ‘பாலஸ்தீன மக்கள் இழந்த உரிமைகளை வென்றெடுப்போம்’ என முழங் கினார் என்பதை அரசியல் ஆய் வாளர்கள் இதனை ஒரு சரித்திர திருப்புமுனையாகவே பார்க்கின்ற னர். இதுவே சித்தாந்தவாதிகளின் எழுச்சி ஆதிக்கவாதிகளுக்கு அதிர்ச்சி என நாம் குறிப்பிட்டோம். இருப்பினும் எகிப்தின் புதிய அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம் என்பதை மறுப்பதற் கில்லை.
• நாட்டின் பொருளாதாரத்தை மீள்கட்டமைக்க வேண்டும்.
• நெடுங்காலமாக புரையோடிப் போயிருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும்.
• ராணுவத்தை வலிமை யாகவும் நவீனமயமாக்கவும் வேண்டும்.
• தேர்தலில் தனக்கு கடும் போட்டியாளராக விளங்கிய ஹோஸ்னி முபாரக்கின் விசுவாசி ஷஃபீக் பெரு வாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார், அவரை பெரும் சிரமத்திற்கிடையில் தான் தோற்கடிக்க முடிந் துள்ளது. அதுபோல கிறித்தவர் களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
• ராணுவத்துடனான உறவு மற்றும் ராணுவத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டாம் சுற்று வாக்கெடுப் பின் போது ராணுவம், அதிபருக் கான அதிகார வரம்பினைக் குறைத்து தனது வசம் அதிகாரக் குவிப்பை ஏற்படுத்திக் கொண்டது. ராணுவத்திற்கான பட்ஜெட்டைத் தீர்மானிப்பது, ராணுவத் தளபதி களை நியமிப்பது போன்ற அதிகாரங்களையும் ராணுவம் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது. எகிப்தின் சட்ட ஒழுங்கு கடந்த வருடங்களில் அதல பாதாளத் திற்குச் சென்றுவிட்ட நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதியாகக் குறைந்துவிட்ட நிலை யில் புதிய பாதையை தேர்ந்தெடுத் துள்ள எகிப்திய மக்கள் சாதனை படைப்பார்களா? முன்னுள்ள சவால்களை உடைப்பார்களா?

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - மூன்று 

 (நம்பிக்கை தரும் சம்பவங்கள்)

எகிப்தின் புதிய அதிபராக பொறுப் பேற்ற டாக்டர் முகமது முர்சிக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைப்பு வந்த வண்ணம் உள்ளது.
தங்கள் நாட்டில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு வருமாறு மேற்குலகின் சிம்ம சொப்பனமாகக் கருதப்படும் ஈரானின் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கிடையே முகமது முர்ஸி உம்ரா புனிதப் பயணத்தை நிறை வேற்ற உள்ளார். அப்போது சவூதி மன்னர் அப்துல்லாஹ்வுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தகவலை சவூதிக்கான எகிப்திய தூதர் முகமது கத்தான் தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட் டுக்கு ஈரான் செல்கிறார். இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரம் முர்ஸி உம்ராவை நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இதற்கிடையில் ஐக்கிய நாடுகளின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எகிப்து குடியர சின் புதிய அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தவர் அதன் பொதுச் செயலாளர் பான்கி மூன் அல்ல. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த அழைப்பை விடுத்துள்ளார். எகிப்தின் மக்களாட்சிக்கும் பொருளாதார கட்டமைப்புக்கும் அமெரிக்கா அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்கத் தயா ராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது செய்தியில் தெரிவித் திருக்கிறார்.
அதிபர் ஒபாமாவின் இந்த செய்தியை அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் முர்ஸியிடம் ஒப்படைத்தார். சவூதி அரேபியா, அமெரிக்கா, ஈரான் என உலகின் முக்கிய நாடுகள் ஜனநாயக எகிப்தின் அதிபரை அங்கீகரித்தும் கூட மிகப்பெரிய அச்சுறுத்தலை அந்த நாடு இன்னும் சந்திக்க வேண்டியுள்ளது. எவ்வளவு துன்பத்தை சந்தித் தாலும் எகிப்தில் ராணுவத்தின் ஆட்சியை நிலை நாட்டுவோம் எனக் கூறியிருக்கிறார் ஒரு வெறியர். எகிப்தில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தால், இஹ்வான்களின் எழுச்சி ஏற்பட்டால் இந்த வெறியர் களுக்கு என்ன? யார் இவர்கள்?- பழைய நெனப்புடா பேராண்டி என பல்லுப் போன பாட்டி மஞ் சள் பூச தன்னை அழகுபடுத்திக் கொண்ட கதை போல காலம் மாறிவிட்ட நிலையில் இஸ்ரேலின் ராணுவ உளவுத்துறைத் தலைவர் அவிவ் கோச்சாவி தெரிவித்திருக் கிறார்.
எகிப்திய ராணுவத்தில் இஸ்லாமிஸ்டுகள் ஆதிக்கம் பெற்றால் அதனை என்ன விலை கொடுத்தாவது எகிப்தின் ராணுவ ஆட்சியை கொண்டு வர முயற்சிப்போம் எனக் கூறியுள்ளார். ஒரு ஜனநாய நாட்டின் எழுச் சியை, வீரியமிக்க ஒரு சக்தியின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத புல்லர் கூட்டத்தின் வெற்றுப் புலம்பல் என அதனை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என இஹ்வான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்களது அதிகாரத்தை சினாய் பகுதியில் நிலை நிறுத்தவும் எல்லையை நிர்ணயிக்கவும் எகிப்து தயாராக இருக்க வேண்டும் என எகிப்திய அரசுக்கு இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக் கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்காலத்தில் சினாய் பகுதி இஸ்ரேலுக்கும், எகிப்துக்கும் மிகப்பெரியப் பிரச்சினை யாகவும், போர் மேகம் சூழக் கூடிய அளவு நிலைமையை சிக்கலாக்கும் என்றும் கருதப் படுகிறது.
ஏற்கெனவே காஸாவின் வழியாக பாலஸ்தீனப் போராளி களான ஹமாஸ் அமைப் பினருக்கு எகிப்தில் இருந்து உதவிகள் வருகின்றன என்றும், இஸ்ரேலை வீழ்த்த எந்நேரமும் எகிப்தின் உதவிகள் காரணமாக அமையக்கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளை யாகவும், இஸ்ரேலின் கள்ளக் காதலனாகவும் திகழ்ந்த எகிப்து இஸ்ரேலின் சிம்ம சொப்பனமாக மாறிவிட்டது.
கடந்த வார நிகழ்வு ஒன்று எகிப்தின் வீரம் செறிந்த புரட்சி யையும், அதன் நிகழ்கால வெற்றி யையும் மேற்கோள்காட்டி ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஹாலித் மிஷால் ஆற்றிய உரை சர்வதேச அளவில் கவனிக்கப்படுகிறது. தியாகத்தில் தோய்ந்த தங்களது போர்த் தந்திரம் முயற்சிகளின் பின்னணியில் மென்மேலும் போராளிகள் அணி திரளுவார்கள். தியாகத்தின் மதிப்பையும், பெரு மையையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். இறை வழியில் தங்கள் உயிரை தியாகம் செய்த ஆயிரமாயிரம் மக்கள் பாலஸ்தீன் போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்ட ஹாலித் மிஷால், எகிப்தின் புரட்சித் சரித்திரம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் உயர்த்தெழலை குறிக்கிறது.
நம்பிக்கை தரும் சம்பவங்களை அங்கே காண்கிறோம். இது வெற்றி மிக அருகில் உள்ளது என்ற செய்தியை நமக்கு உணர்த்துகிறது என்றார் ஹாலித் மிஷால். எகிப்து புரட்சி பாலஸ்தீனர் களுக்கு புத்துணர்ச்சியை வழங்கு கிறது. எகிப்தின் புரட்சிகர சிந்த னைகளுக்கு கருபொருளாய், வேகத்தை அதிகரிக்கச் செய்யும் எரிபொருளாய் இஹ்வான்கள் விளங்கினார்கள். இஹ்வான்களை செதுக்கியவர், வார்த்தெடுத்தவர் ஹஸன் அல் பன்னா என்ற ஷேக் ஹஸன் அஹ்மத் அப்துல் ரஹ்மான் முஹம்மத் அல்பன்னா அவர்கள் ஆவார்.
அரபுலகின் புரட்சிகர எழுச்சி மிகு சிந்தனைகளின் ஞானத் தந்தையாக ஹஸனுல் பன்னா அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு புரட்சிகர சிந்தனையாளனுக்கும் படிப்பினையாக விளங்குகிறது. அன்னாரின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் தியாகப் பின்னணி கொண்டதாகும். அது..

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி - 4

(20ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்)

இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லி மீன் என்ற சொல் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளாக இஸ்லாமிய உலகை அதிரவைக்கும் சொல்லாக மாறத் தொடங்கியது.
உலகில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்று. அரபுலகில் பல நாடுகளில் இஹ்வான்களின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட கட்சிகளாகவும் குறிப்பாக எதிர்க்கட்சிகளாக விளங்கி வருகின்றன. 1928ஆம் ஆண்டு எகிப்தில் உருவான இந்த இயக்கம் சமய, அரசியல் மற்றும் சமூக இயக்கமான இதனை வீரத்தியாகி ஹஸனுல் பன்னா வார்த்தெடுத்தார்.
1928ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலக் கட்டத்தில் 20 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக வியாபித்தது.
அரபுலகில் செயல்பட்ட பல்வேறு மக்கள் நல இயக்கங்கள், அமைப்புகளுக்கு இஹ்வானுல் முஸ்லிமீனின் கொள்கைகள், கோட்பாடுகள் உத்வேகம் ஊட்டுபவையாக மாறின. இஹ்வான்களின் அரசியல் விழிப்புணர்வுக் கொள்கையை மட்டுமல்ல அவ்வமைப்பின் தர்ம சிந்தனையையும் தன்னகத்தே ஏற்று அறங் காவலர்களாக அரபு நாடுகளில் அமைப்புகள் விளங்கின.
ஒரு தனிநபராகட்டும், ஒரு குடும்பமாகட்டும், ஒரு சமூகமாகட்டும், அல்லது ஒரு நாடாகவே இருக்கட்டும் அனைத்துமே திருக்குர்ஆன் மற்றும் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வழிகாட்டுதல் முறைப்படியே இருக்கவேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள் இஹ்வான்கள்.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்று அழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் அமைப்பை ஆனால் அதன் உறுப் பினர்கள் அரசியல் கட்சிகளை உருவாக்கி பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டனர்.
எடுத்துக்கட்டாக இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் என்ற பெயரில் ஜோர்டானிலும், ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற பெயரில் ஜோர்டானிலும், பாலஸ்தீனத்தில் ஹர்க்கத்துல் முகவ்வமா இஸ்லாமியா என்ற நீண்ட பெயரிலும் சுருக்கமாக ஹமாஸ் என்று அழைக்கப்படும் பாலஸ்தீனப் போராட்ட அமைப்பும், எகிப்தில் தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் சுதந்திரம் மற்றும் நீதிக்கான கட்சி போன்றவை இஹ்வான்களால் துவக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படும் அரசியல் கட்சிகளாகும்.
இதனைத் தொடங்கிய ஷேக் ஹஸன் அஹ்மத் அப்துல் ரஹ்மான் முஹம்மத் அல் பன்னா என்ற ஹஸனுல் பன்னா 1906ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் பிறந்தார். 43 ஆண்டுகாலம் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த இவர் இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆன்மீக இயலுக்கு உத்வேகம் ஊட்டுபவராக உருவெடுத்தார்.
20ஆம் நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர் களில் ஒருவராக விளங்கினார். தலைநகர் கெய்ரோவில் வடமேற்கு பகுதியில் நைல்நதி டெல்டா பகுதியில் மஹ்மூதியா என்ற ஊரில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக வாழ்வைத் தொடங்கியவர். 13 வயதிலேயே எகிப்தை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து விடுதலை முழக்கம் எழுப்பினார். ஆங்கிலேய சாம்ராஜ்யம் அஞ்சி நடுங்கியது.

அரபு வசந்தத்தின் முதல் வெற்றி -

 வெற்றியை நோக்கி பயணம் தொடர்கிறது (தொடர் 5)

அன்று, ஷேஹ் ஹஸனுல் பன்னா அவர்களின் அந்நியருக்கு எதிரான வீரமுழக்கம் எகிப்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபுலகிலும், முஸ்லிம் அரசியல் மறுமலர்ச்சியாளர்களின் மனதிலும் புத்துணர்வை ஊட்டியது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் இஹ்வான்களின் கொள்கைகள் நாலாபுறங்களிலும் பற்றிப்பரவி வருகிறது.
இஹ்வான்களின் உத்வேகம் பரவியதைவிட வேகமாக அதுபற்றிய பீதியும் அதிவேகமாகப் பரவுகிறது. தங்கள் நாட்டு அரசில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் ஊடுருவியுள்ளதாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். எந்த நாட்டு அரசுத் துறையில் இஹ்வான்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு புறப்பட்டது என்பதை அறிந்தால் நிச்சயம் நீங்கள் திகைப்பும் திணறலும் அடைவீர்கள். அமெரிக்க அரசின் உயர் துறைகளில் இஹ்வானிய ஆதிக்கம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிச்சேல் பச்மான் என்ற பெண் செனட்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான ஹுமா ஆபிதீன், இஹ்வான்களின் கொள்கைகளைப் பரப்புபவர் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஒபாமாவின் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான கீத் எலிஸன், இஹ்வானுல் முஸ்லிமீன் கொள்கைப் பரப்புரையாளர் என மிச்சேல் கூறியுள்ளார்.
ஒபாமா அரசில் செல்வாக்கோடு செயல்படும் முஸ்லிம்களின் செல்வாக்கை வேரோடு வீழ்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கீத் எலிசன் கூறுவதாக எடுத்துக்கொண்டாலும், இஹ்வான்களின் எழுச்சி மேற்குலகை மிரளச் செய்துள்ளது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.
மேற்குலகம் மற்றும் சியோனிச சக்திகள் எகிப்தின் புரட்சி கண்டு மிரட்சி கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இவை எல்லாமே ஆரம்ப சூரத்தனமாகவே இருக்க முடியும். மேற்குலக ஏகாதிபத்தியம் எகிப்திய புரட்சியைக்கூட கொன்று, தின்று ஜீரணித்து விடும் வலிமை கொண்டது என சிலர் கூறிக்கொண்டிருந்த கதையெல்லாம் பழங்கதையாயின. தாய் மண்ணை மீட்கப் போராடிவரும் ஏழைகளாய், அகதிகளாய், பூமிப்பந்தில் அலைந்து திரியும் பாலஸ்தீன மக்கள் இனி எவ்வித கெடுபிடியும் இல்லாமல், கேள்விக்கணக்கும் இன்றி, விசா என எந்த இழவு ஆவணங்களும் இன்றி அவர்கள் எகிப்தில் நுழையலாம்; தங்கலாம்; வாழலாம் என்ற முழு அனுமதி எகிப்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேஷ அனுமதி அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், எகிப்தின் விமான முனையங்களில் இருந்தும் பல்வேறு எல்லைப்புறங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் எகிப்தில் குவியத் தொடங்கினர்.
நிகாப் அணிந்த பெண்கள் பிரத்யேக தொலைக்காட்சி சானல் நடத்திக்கொண்டுள்ளார்கள். அது எகிப்திய பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் எகிப்தின் புரட்சியின் வெற்றி அரபு வசந்தத்தின் முதல்கட்ட வெற்றி என கொண்டாடப்படும் நிலையில் இதன் போக்கு எந்த திசையை நோக்கி நகரும், அது முற்றுப்பெறும் போது எத்தகைய காட்சிகள் அமையும் என அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளனர் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் இருக்கட்டும், அரபு வசந்தப் புரட்சிகள் இத்துடன் ஒடுங்கிவிடும் என யாரும் கருதவேண்டாம் என ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்திருக்கிறார்.
பரிசுத்த மஸ்ஜிதே அக்ஸாவின் மீட்போடு அரபு வசந்தம் முற்றுப்பெறும் என தன் நம்பிக்கையை தெரிவித்துள்ளார். பாரம்பரிய உணர்வுகளையும் யார் யாரோ தீர்மானித்த வரையறைகளையும் மாற்றி எழுதும் திருப்புமுனை காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
தற்போதைய அமைப்பு முறைகள் தகர்க்கப்படும். அரசியல் வரைபடம் மாற்றி அமைக்கப்படப் போகிறது. பூமிப்பந்தில் குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து கீழே தள்ள முஸ்லிம் உம்மா முடிவு செய்துவிட்ட முக்கிய தருணம் இது.
உண்மைதான். அரபுலக வசந்தத்தின் முதல் வெற்றி அதைத்தான் அறைந்து சொல்கிறது

Sunday, August 5, 2012

டெல்லி: பூமியில் புதைந்த பள்ளிவாசல் - மெட்ரோ ரயிலுக்காக தோண்டும்போது வெளிப்பட்டது - தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு

டெல்லி: பூமியில் புதைந்த பள்ளிவாசல் - மெட்ரோ ரயிலுக்காக தோண்டும்போது வெளிப்பட்டது - தொல்லியல்துறை கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு

E-mailPrintPDF
டெல்லி மெட்ரோ ரயில் வழிப்பாதைக்காக பூமிக்கடியில் தோண்டும்போது பள்ளிவாசல் ஒன்று சிதிலமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டது.
17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற அக்பராபாதி மஸ்ஜித் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் முஸ்லிம்கள் குவிந்தனர். பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
வெள்ளிக்கிழமை அன்று டெல்லி அக்பராபாதி மஸ்ஜிதை நோக்கி திரண்ட முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த முடியாமல் டெல்லி காவல்துறை திணறியது. கூட்டத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க முயன்ற காவல்துறையினர் மீது கூடியிருந்த பொதுமக்கள் கல்வீச்சு நடத்தினர்.
அக்பராபாதி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செளிணிய முஸ்லிம்கள் குவிந்தனர். அதேவேளையில் மத்திய தொல்லியல் துறை, பள்ளிவாசலைக் கைப்பற்ற முயற்சித்தது. இந்நிலையில் டெல்லியில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் சாஹெப் இக்பால், டெல்லி மாநில அமைச்சர் ஹாரூண் யூசுப், தொல்லியல் துறை அதிகாரிகள் ஆகியோர் கொண்ட சமாதானக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அக்பராபாதி மஸ்ஜிதை தற்போதைய நிலையிலேயே பராமரிக்க வேண்டும். வேறு எந்தக் கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக்கூடாது என முஸ்லிம்களுக்கும், தொல்லியல் துறைக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி அக்பராபாதி மஸ்ஜித் மீட்கப்படுமா? இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கிறது

Friday, March 4, 2011

மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!

மத்திய கிழக்கு புரட்சியின் எழுச்சி! அலறும் இஸ்ரேல்!

எகிப்தின் மக்கள் புரட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத் தின் பிடியில் இஸ்ரேல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக உரிமைகள் அடக்கப்பட்ட நிலையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும், என இஹ்வான்களை பெயர் குறிப் பிடாமல்கூறியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு. ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான்நிகழ்ந்தது என ஜெர்மனி அதிபர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய ஒருங்கிணைந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

தங்களின் நெருங்கிய நண்பன் ஹோஸ்னி முபாரக் மடக்கப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவேண்டாம் என இஸ்ரேல் அமெரிக்காவிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும் கெஞ்சுகிறது.

இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியை விட்டு விரட்டுவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் தார்மீக ஆதரவினையும் வாழ்த்துகளையும் வழங்கியுள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹோஸ்னிக்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி இரண்டு வாரம் கழிந்தபிறகும் வாய்திறக் காமல் மௌனம் காத்த துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப்ஏற்தொகன் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டு மானால் மக்களின் உரிமைக்குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென நாடாளு மன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்து அமைதியான வழியில் மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள் ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனதுமுழு ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில்ஜனநாயக உரிமைக்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் என்றும் இருப்போம்என்றும் பாரம்பரிய இஸ்லாமிய மாண்புகள் கொண்ட. மகத்தான நாடான எகிப்தின் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பகிரங்கமாகதெரிவிப்பதாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமியபாரம்பரிய மத்திய கிழக்கு உருவாக உதவும் என தாங்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் உலகை அதிரவைத்துள்ள புரட்சிப் போராட்டத்தில் அமெரிக்கா தேவையின்றி தலையிடுவதாக இரான்வன்மையாக குற்றம் சாட்டியுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில்எழுச்சி மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சிகள் தூக்கி எறியப்படவேண்டும் மேற்கத்திய சக்திகளின்அடி வருடி அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது. அதைத்தான் தற்போதைய மக்கள் புரட்சிகள் நிரூபித்துள்ளதாக இரான் கூறியிருக்கிறது.

தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் புரட்சி திடீரென உருவானது அல்ல.நாட்டிற்கு நன்மைகளை நாடியவர்கள் ஹோஸ்னி முபாரக்கை பலமுறை இடித்துரைத்து எச்சரித்தும், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்கஹோஸ்னி பாரக் மறுத்ததினால். இப்போது அவரது ஆட்டத்திற்கான இறுதி தீர்ப்பு தீட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முஸ்லிம் சிந்தனாவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில், எகிப்தில் மேற்குலகின் ஆசி பெற்ற பொம்மை ஆட்சியை கொண்டு வர முயற்சி நடைபெறலாம் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில், முன் யோசனையில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் இஹ்வான்கள் முன் யோசனையுடன் மிக சாதுர்யத்துடன் காய்களை நகர்த்திவருகிறார்கள்

கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போராட்ட வீரியம் வலுவாக உள்ளது. ஆதலால் தேர்தல் நடந்தால் இவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

ஆனால், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தலை அசைக்கும் ஹோஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் என்ன நிகழும்? என்பது குறித்த அச்சத்தின் உச்சத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளன.

காஸாவிலிருந்து எகிப்தில் நடைபெறும் போராட்டத்தில் ஹமாஸ் இயக்கத்தினர்வேறு வேறு தோற்றங்களில் கலந்துகொள்கின்றனர் என்ற பரப்புரையும் மிக தீவிரமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஹோஸ்னி முபாரக்கை விமர்சித்தது ஏதோ ஜனநாயகம் மற்றும் மக்கள் உரிமை குறித்த கவலையினால் அல்ல! மாறாக, 82 வயதான பிறகு ஏன் பதவியில் தொடர வேண்டும், வேறொரு இளம் அடிமையிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டியதுதானே என்ற எரிச்சலே முக்கியக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

எகிப்திய பாதுகாப்பு படையில் இஸ்லாமிய சிந்தனாவாதிகளுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. என்னவாயினும், இதுவரை ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆதரவை தெரிவித்த பாதுகாப்புப் படையினர் தற்போது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மறுக்கின்றனர். அடுத்த ஆட்சியாளர் யார் என்பதை உறுதி செய்துவிட்டு ஹோஸ்னி முபாரக் நாட்டைவிட்டு வெளியேறு என ராணுவம் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதா ஆன்லைன் இண்டலிஜன்ஸ் மாத இதழான ஸ்ட்ராட் ஃபோர் தெரிவிக்கிறது.

1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்தது போல ராணுவம் தங்களுடன் இணையும் என போராளிகள் கருதுகின்றனர்.

சர்வாதிகாரிக்கு ஆதரவாக களம் இறங்கும் அமெரிக்க போர் விமானங் கள் எகிப்தின் சினாய் தீவில் சர்வாதிகார சக்திகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது உரிமை போராட்டக்காரர்களுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையுமேற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித் துள்ளனர்.

எகிப்தில் குவியும் இஸ்ரேல் ஆயுதங்கள் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது கொடும் தாக்குதல் நடத்த அந்நாட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் தடைச் செய்யப் பட்டுள்ளஅதிநவீன நாசகார ஆயுதங்கள் எகிப்திற்கு வந்துள்ளன. மக்கள் போராட்டத்தை பூண்டோடு அழிக்க முனையும் முக்கிய சதியாக இது கருதப்படுகிறது.

இருப்பினும் மக்கள் புரட்சிகள் தோற்றதாக சரித்திரம் இல்லை .மத்திய கிழக்கு நாளை உரிமை மீட்பு போராட்டத்தின் முன்னோடி பிராந்தியமாக மாறப்போகிறது. ஆம் வரலாறு காத்திருக்கிறது.

-ஹபிபா பாலன்

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

லிபியாவில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் பாரபட்சம்: மத்திய அரசுக்கு எதிராகப் பெருகும் கண்டன அலை!

E-mail Print PDF

லிபியாவில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு கொண்டு வருவதில் இந்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. லிபியாவில் வாழும் இந்திய மக்கள் 18 ஆயிரம் பேரையும் பாகுபாடு காட்டாமல் காக்க வேண்டிய இந்திய அரசு பொறியாளர்கள் மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் பணியில் இருப்பவர்களை மட்டும் விமானங்களில் இந்தியாவிற்கு வரவழைப்பதாகவும் இதர கடைநிலை தொழிலாளர்களை கப்பல்கள் மூலம் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் தங்கள் உறவினர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

லிபியாவில் இந்தியர்கள் பலர் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டையைச் சேர்ந்த முருகைய்யா மற்றும் அசோக் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பேராசிரியர்கள், மருத் துவர்கள், பொறியாளர்கள் உள் ளிட்டவர்கள் மட்டுமே விமானம் மூலம் இந்தியா வரவழைக்கப்படுவதாகவும், கடைநிலை மற்றும் நடுத்தர தொழி லாளர்கள் கப்பல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியா திரும்பிய மக்கள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அலைகளை லிபியாவில் வாடும் இந்தியர்களின் குடும்பத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

பாரபட்சமின்றி தொழிலாளர்களையும் விமானம் மூலம் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் குமுற லுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக் கப்பட்ட கிராம மக்கள் மத்திய அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே லிபியா வில் போராட்டங்களில் பலியாகும் மக்களின் பிணங்கள் குப்பையில் வீசப்படுவதாக அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.

லிபியாவில் வெடித்துள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தினால் மிகக் கடுமை யான தாக்குதல்கள் நடந்து வருகிறது. வீதி களெங்கும் உடல்களாகக் கிடக்கின்றன. அவை புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டு குப்பை களில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவலை மீண்டுவந்த இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

லிபியாவில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்க முதல்கட்டமாக இரண்டு சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியது. இந்த விமானங்கள் லிபியா சென்று 528 இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளன.
முதல் விமானம் 291 பேருடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது. அதேபோல 237 பேருடன் இரண்டாவது விமானம் ஷ்வந்து சேர்ந்தது. இரு விமானங்களிலும் ஏராளமான தமிழர்களும் இருந்தனர்.

விமான நிலையத்தில் முகம்மது ஸாலிஹ் என்ற பொறியாளர் கூறுகையில், லிபியா வில் நிலைமை மோசமடைந்துள்ளது. மக் கள் வீடுகளிலேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் பீதியில் உறைந் துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுகிறது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. இறந்தவர்களின் உடல் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன என்றார்.

மக்கள் கிளர்ச்சி பெரும் கலவரமாக மாறியுள்ளது. நாங்கள் விமான நிலையத்திற்கு வரும் வழியெங்கும் உடல்களைப் பார்த்தோம். அவற்றை புல்டோசர் மூலம் அள்ளி குப்பைகளில் வீசுகின்றனர். மக்களுக்கு பாதுகாப்பு அறவே இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்தியத் தூதரகம் இன்னும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடு திரும்பியுள்ள பலரும் வலி யுறுத்தியுள்ளனர்.

லிபியாவிலிருந்து மீண்டு வந்த இந்தியர்களை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, வெளியுறவுத்துறை செய லாளர் நிரூபமா ராவ் ஆகியோர் வர வேற்றனர்.

முதலில் வந்த விமானங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் உள் ளிட்டோர் இருந்தனர்.

-ஹபீபா பாலன்

Friday, October 15, 2010

நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள் babri masjid demolish news article abusalih

நிமிடத்துக்கு நிமிடம் நடந்த சம்பவங்கள்

டிசம்பர் 5, 6, 7, 8, (1992) ஆகிய தேதிகளில் அயோத்தியில் நடந்த சம்பவங்கள் குறித்து 'பிரண்ட்லைன்' ஆங்கில இதழில் வெளிவந்த தகவல்களின் தொகுப்பை திராவிடர் கழகம் 'மதவெறியை மாய்ப்போம் மனிதநேயம் காப்போம்' என்ற நூலில் வெளியிட்டுள்ளது. அதை வாசகர்களுக்காக மீண்டும் இங்கே வழங்குகிறோம்.

டிசம்பர் 5, 1992

காலை 11 மணி: சாமியார்களையும், மகந்த்துகளையும் கொண்ட 'மார்க்தர்ஷத் மண்டில்' எனும் அமைப்பு, திட்டமிட்டபடி 'கரசேவை'யை நடத்த முடிவு செய்தது. கரசேவையில் என்ன செய்யப் போகி றார்கள் என்பதை திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை.

பகல் 12.30 மணி: பிரச்சினைக்குரிய (பாபர் மஸ்ஜித் வளாகம்) பகுதிக்கு அருகே ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ''ஒவ்வொரு பிரதி நிதிகள் குழுவிலிருந்தும் இரண்டு பேர் மட்டும் வாருங்கள். கடந்த 2 மாதங்களாக உங்களுக்குத் தரப்பட்ட ஒத்திகைப் பயிற்சியை இப்போது செய்து காட்ட வேண்டும்; குழுவின் தலைவர்களுக்குப் லி பயிற்சி செய்யும் தொண்டர்கள் யார் என்பதும், என்ன பயிற்சி தரப்பட்டது என்பதும் தெரியும்'' என்று அந்த அறிவிப்புக் கூறியது.

பகல் 2 மணி: விசுவ இந்து பரிஷத் சார்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ராம்சங்கர் அக்னிஹோத்ரி, 'கரசேவை'யின் முதல்கட்டமாக ராமன் கோயிலுக் காக கட்டப்பட்ட மேடையை சுத்தம் செய்து, சரயுநதி நீர் தெளிக்கப்படும் என்றார்.

பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை: அருகே இருந்த ராம்கதாகுஞ்சி என்ற மலைப்பகுதியில் 500 கரசேவைத் தொண்டர்கள் பயிற்சி ஒத்திகை எடுத்தனர். மசூதியில் எப்படி ஏறுவது, பிறகு கயிறு மூலம் மசூதிக் கோபுரத்தை இடித்து எப்படிக் கீழே தள்ளுவது என்பதற்கான ஒத்திகையும் நடந்தது.

மாலை 5 மணி: விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் அசோக் சிங்கால், கரசேவகர்களின் முகாம்களைச் சுற்றிப் பார்த்து, சில பிரமுகர்களுடன் பேசினார். தேவைப்பட்டால், ஒருவேளை, மசூதியை இடிக்காமல் சுத்தப்படுத்தும் வேலையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கும் என்றார். கரசேவகர்கள், ஆத்திரமடைந்தனர்.

இரவு 7 மணி: லக்னோவிலிருந்த எல்.கே.அத்வானிக்கு அன்று இரவே அயோத்திக்கு வருமாறு 2வது அழைப்பு விடுக்கப்பட்டது. டிசம்பர் 6லிம் தேதி பகல் 1 மணிக்கு அயோத்திக்கு வருவதாக அத்வானி முன்கூட்டியே, திட்டமிட்டிருந்தார்.

இரவு 11 மணி: அத்வானி அயோத்திக்கு வந்து, தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

டிசம்பர் 6, 1992

காலை 8 மணி: சிவசேனை நாடாளுமன்றத் தலைவர் மோர்ஷ்வர் சேவே, பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார் எம்.பி., அத்வானி ஆகிய மூவரும் லி கட்டியார் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

காலை 8.15 மணி: 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றி எல்லையை நிர்ணயிக்க இரும்புக் குழாய்கள் நடப்பட்டிருந்தன. ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், அந்த இரும்புக் குழாய்களைப் பிடுங்கி, மசூதிக்கு அருகே கொண்டு போய் நாட்டினார்கள். இதன்மூலம் பிரச்சினைக் குரிய இடம் சுற்றி வளைக்கப்பட்டு, எல்லை நிர்ணயிக்கப்பட்டது.

காலை 9 மணி: இதன்மூலம் வெளியே 2.77 ஏக்கர் நிலத்தின் பெரும்பகுதி திறந்து விடப்பட்டதால் லி மேலும் ஏராளமான ஆர்எஸ்எஸ் காரர்கள், அங்கே வந்து குழுமினார்கள். கூடவே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் வந்தார்கள். அந்தப் பகுதியைச் சுற்றி, வட்டமிட்டு நின்றார்கள்.

காலை 10.15 மணி: கூட்டத்தினர் வளையத்தை உடைத்துக் கொண்டு மசூதிக்குள் நுழைவதற்கு, 20 நிமிடமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரும் சம்பவம் நடக்கும் இடத்துக்கு வந்தனர். பலர், வளையத்தை உடைத்து, மசூதிக்குள் நுழைய முன்னேறிக் கொண்டிருப்பதை, இந்தத் தலைவர்கள் பார்த்தனர்.

காலை 10.30 முதல் 11.30 வரை: கரசேவகர்கள், மசூதியை சுற்றிப் போடப் பட்டிருந்த வளையத்தைத் தகர்த்து விட்டனர்.

பகல் 11.35 மணி: 2.77 ஏக்கர் நிலத்தில் கரசேவைக்கான பூஜைகள் தொடங்கின.

பகல் 11.35 முதல் 11.50 வரை: 2.77 ஏக்கர் நிலத்துக்கு வெளியே திரண்டிருந்த கரசேவகர்கள், ரிசர்வ் போலீஸ் படை மீது கல்வீசித் தாக்கி, அப்பகுதிக்குள் நுழைந்தனர். மசூதிக்குள் நுழையவும் ஒரு கூட்டம் முயற்சித்தது.

பகல் 11.50 மணி: மசூதியின் லி வலதுபுற கோபுரத்தின் மீது ஒரு ஆள் ஏறிவிட்டான். கூடியிருந்த கூட்டம் 'ஜெய்ராம்' என்று வெறிக் கூச்சலிட்டது.

பகல் 11.51 மணி: அங்கே இருந்த 100 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது கரசேவைக் கும்பல், மோசமாக கற்களை எடுத்து வீசி, அவர்களை ஓடச் செய்தது. மேலும் ஒரு கும்பல் மசூதியின் மீது ஏறியது.

பகல் 11.55 மணி: ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மசூதிக்குள் நுழைந்து, சுற்றிப் போடப்பட்டி ருந்த பாதுகாப்பு வேலியையே மசூதி சுவற்றில் ஏணியாக வைத்து கோபுரத்துக்கு மேல் ஏறினார்கள். எல்லா பக்கங்களிலிருந்தும் மசூதியை உடைத்தார்கள்.

பகல் 1.30 மணி: பைசாபாத்திலிருந்து அதிரடிப்படையின் நான்கு பிரிவு வழியில் இருந்த தடைகளை எல்லாம் அகற்றிக் கொண்டு அயோத்திக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகேத் கல்லூரிக்கு அருகே வந்து கொண்டிருந்தது.

பகல் 2 மணி: பைசாபாத் மாவட்ட நீதிபதி ரவீந்திரநாத் ஸ்ரீவத்சவா, நிலைமை கட்டுக்குள் வந்து விட்டது என்றும், மத்திய போலீஸ் வரத் தேவை யில்லை என்றும் ஒயர்லஸ் மூலம் தகவல் கொடுத்தார். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் உடனே பைசாபாத் திரும்பி விடுங்கள் என்று கூறினார்.

பகல் 2.55 மணி: இடிப்பு வேலை மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்து கொண்டிருந்தது. இடதுபக்க கோபுரம் அப்போது காணப்படவில்லை!

பகல் 3.05 மணி: வலதுபக்க கோபுரமும் வீழ்ந்தது.

பகல் 3.15 மணி: ஒலிபெருக்கியில் அத்வானி அயோத்தியாவுக்குள் ராணுவம் நுழையாமல், நுழைவாயில் களில் தடைகளை ஏற்படுத்துமாறும், இல்லாவிட்டால் ராணுவத்தினர் எல்லா வற்றையும் தடுத்து விடுவார்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மாலை 4.50 மணி: மசூதியின் நடுக்கோபுரமும் வீழ்ந்தது.

மாலை 6.10 மணி: மசூதி இருந்த பகுதியில் இடிபாடுகள் மட்டுமே காணப்பட்டது.

மாலை 6.35 மணி: ஏற்கெனவே வெளியே இருந்த ராமன் சிலையை மீண்டும் கொண்டு வந்து, அந்த சிலை இருந்த இடத்திலேயே நிறுவினர்.

இரவு 7 மணி முதல் 11 மணி வரை: இடிபாடுகள் அகற்றப்பட்டன. தண்ணீர் டாங்குகள் வந்தன. அந்தப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தன.

இரவு 1 மணி: வேதமந்திரங்களுடன் ராமன் சிலை 'பிரதிஷ்டை செய்யப் பட்டது. சுற்றிலும் காவித்துணியை கட்டினார்கள். அசோக் சிங்கால், வினய் கட்டியார், ஆச்சாரியா தர்மேந்திரா, ஆச்சாரியா ராம்தேவ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டார்கள்.

டிசம்பர் 7, 1992

காலையிலிருந்து மாலை வரை ராமன் சிலையைச் சுற்றி, சுவரெழுப்பும் வேலைகள் நடந்தன. அதேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன. சுமார் 100 முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். 150 முஸ்லிம்கள், 'ராம ஜென்ம பூமி' காவல் நிலையத்தில் அடைக்கலம் புகுந்தனர். குடிப்பதற்குத் தண்ணீரோ, உணவோ இல்லாமல், ஒருநாள் முழுதும் அங்கேயே பட்டினி யாகக் கிடந்தார்கள்.

மாலை 5 மணி: ராமன் சிலையைச் சுற்றி 5 அடி உயர சுவர் கட்டி முடிக்கப் பட்டது. அசோக் சிங்கால், ஒலிபெருக்கி மூலம் ''நாளை விடியற்காலையில் ராணுவம் வரக்கூடும். யாரும் ராணு வத்தை எதிர்க்க வேண்டாம். அமைதி யாக திரும்பிச் செல்லுங்கள்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

மாலை: கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் ஊர் திரும்ப ஆரம்பித்தனர்.

நள்ளிரவு: கரசேவகர்களை அப்புறப் படுத்துமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு உத்தரவு வந்தது.

டிசம்பர் 8, 1992

காலை 3.30 மணி: ரிசர்வ் போலீஸ் படையின் நான்கு பிரிவு, அயோத்திக்குள் பிரச்சினைக்குரிய பகுதியில் நுழைந்தது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த கரசேவகர்கள் அவர்கள் மீது கல் வீசினார்கள். ராணுவம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது; சிலருக்கு காயம்; பெரும்பான்மை கரசேவகர்கள், எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளியேறினார்கள்.

காலை 4.15 மணி: ராணுவம், அந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கரசேவகர்களைத் திருப்பி அனுப்ப அயோத்தியிலிருந்து விசேஷ ரயில்கள் விடப்பட்டன. ஆம்! குற்றவாளிகள் தப்ப அரசே உதவிய

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல்babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமையும், சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும்... நீதியரசர் ராஜிந்தர் சச்சார் நம்பிக்கை

பாப்ரி பள்ளிவாசல் தொடர்பான செய்திகள் அபுஸாலிஹ்
ராஜிந்திர் சச்சார் babri masjid news from abusalih

பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் மீண்டும் பள்ளி வாசல் கட்டும் உரிமையும் சுதந்திரமும் முஸ்லிம்களுக்கு கிட்டும் என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித் திருக்கிறார். மேலும் பாப்ரி மஸ்ஜித் நிலத்தில் சங்பரிவார் உரிமை கோரல்கள் எடு படாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிந்துத்துவ சக்திகள் குறிப்பிடும் கோயில் பள்ளிவாசலுக்கு அடியில்தான் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்திய மற்ற ஒன்று என்ற நீதிபதி ராஜேந்தர் சச்சார் இது நம்பிக்கைஅடிப்படையிலான விவகாரமாக இருக்கலாம் அல்லது ஏமாற்றும் தந்திரமாக கூட இருக்கலாம் என்றும் தெரிவித்தார்..

எது எப்படியிருப்பினும், சங்பரிவார் சக்திகள் பள்ளிவா சலின் சொந்த நிலத்தை சட்டப் பூர்வமான முறையில் உரிமை கொண்டாட முடியாது.. என்று குறிப்பிட்ட சச்சார், பள்ளிவாசல் கோயில் இடிபாடுகளின் மீது கட்டப்பட்டது அல்ல என்பதை நீதிமன்றம் கண்டறிந்தபின் முஸ்லிம் களுக்கு அந்த நிலம் மீண்டும் வழங்கப்பட்டு அங்கு மீண்டும் பள்ளிவாசல் கட்டும் உரிமை, சுதந்திரம் முஸ்லிம்களுக்கு கிட்டும் என தெரிவித்தார்.

ஒருவேளை பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் கோயில்தான் இருந்தது என்ற தீர்ப்புகூட வரலாம். ஆனாலும் கூட சங்பரிவார சக்திகளின் உரிமைக் கோரல்கள் ஏற்கப்படாது, எடுபடாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

1992&ஆம் ஆண்டில் சங் பரிவார பாசிசசக்திகள் தரைமட் டமாக்கும் வரை பாப்ரி மஸ்ஜித் 400 ஆண்டுகளாக அங்கு நிலைகொண்டு இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது என நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தெரிவித்திருக்கிறார்.

லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள் அகில இந்திய செய்திகள் . அபுஸாலிஹ்

லாரிலாரியாக மாயமாகும் வெடிபொருட்கள்-பகீர் தகவல்கள்

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 61 ட்ரக்குகளும் மாயமாயின. அந்த டிரக்குகளில் 400 டன் வெடிப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை மத்திய பிரதேசத்திற்கு வந்து சேர்ந்த போது மாயமாகிவிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன.

காணாமல் போன வெடி மருந்து லாரிகளில் 4 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதனைத் தொடர்ந்து வந்த தகவல்கள் தெரிவித்தன.

வெடிப் பொருட்களின் மொத்த மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாயாகும். ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்குள் இந்த வெடிப் பொருட் கள் காணாமல் போயி ருக்கக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தின் டோல்பூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து (ராஜஸ்தான் எக்ஸ்புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்) ஸிணிசிலி மற்றும் கணேஷ் எக்ஸ்புளோசிவ்ஸ் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிடிபட்ட லாரியின் டிரைவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படு கிறது. இது ஜெய்கிஷன் மற்றும் தேவேந்திர தாகூர் ஆகியோருக்கு சொந்தமானதாகும். கடந்த ஜூன் மாதமே காணாமல் போன வெடிப்பொருட்கள் பற்றி நாட்டிலுள்ள ஊடகங்கள் எதுவும் பெரிய அளவில் கண்டுகொண் டதாகவே தெரியவில்லை.

எங்கள் தரப்பில் எந்தத் தவறும் நிகழவில்லை என ராஜஸ்தான் அரசு வெடிப்பொருட்கள் தொழிற்சாலையின் அதிகாரி ஓய்.சி உபாத்யாயா தெரிவித்தார். வெடிப்பொருட்கள் விற்கப்பட் டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் இருப்பதாக காவல் துறை ஐ.ஜி அவ்னாஷ் மங்கலம் தெரிவித்தார்.

முதல்கட்ட புலனாய்வில் இந்த வெடிபொருட்கள் மகராஷ் ட்ரா. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தனிநபர் களிடம் விற்கப்பட்டதாக தெரிய வந்தது.

2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சூரத் நகரில் 18 வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக் கப்பட்டன. பின்னர் அவை செயலி ழக்கப்பட்டன.

அந்த வெடிப்பொருட்கள் அனைத்தும் ராஜஸ்தான் மாநில வெடி மற்றும் தொழிற்சாலைக்கு சொந்தமானது என்பது குறிப்பி டத்தக்கது. தற்போது அதே நிறுவனத்திலுள்ள வெடிமருந்துகள் காணாமல் போனதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

சூரத் நகரின் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் முஸ்லிம் சமுதாய த்தின் மீது பழிபோடப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆஜம்கர் மாவட்ட முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடி த்து குஜராத் மாநில காவல் துறையினர் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு குஜராத்திலும் ஜெய்ப் பூரிலும் வெடிக்காத குண்டு களை புதைத்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

ஆஜம்கார் மாவட்ட இளை ஞர்கள் மீது குற்றம் சாட்டிய வர்கள், இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனையான இயக்கத்தை கட்டமைத்தவர்கள். வெடிமருந்துக் களை விநியோகம் செய்தவர்கள் குறித்து எவ்வித கடுமையும் காட் டாதது ஏன்? உண்மையிலேயே படுபயங்கரவாதிகள் யார்? என்ற கேள்வி 120 கோடி இந்தியர்களின் உள்ளங்களிலும் எழுகிறது

Friday, August 20, 2010

மதானி கைது வெளிவராத தகவல்கள்

மதானி கைது வெளிவராத தகவல்கள்

ஹபிபா பாலன்

தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.

தந்தையை ஆரத் தழுவி வழி அனுப்புகிறர் மகன்.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் மார்க்க அறிஞருமான அப்துன் நாசர் மதானி இன்று 17.08.2010 பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

2008ஆம் ஆண்டு பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பெங்களூரு குண்டுவெடிப்பில் பிடிபட்டதாகக் கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நஸீர் என்பவர் மதானியின் பெயரைக் கூறினாராம். நஸீர் அளித்த வாக்குமூலத்தின்படி 31வது குற் றவாளியாக சேர்த்திருப்பதாக காவல்துறை அறிவித்திருக்கிறது.

கர்நாடக மாநில குடகு மாவட்டத் தில் லகாரி எஸ்டேட்டில் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி பாஜக ஆளும் கர்நாடக மாநில காவல்துறையினர் மதானியின் வசிப்பிடமான கொல்லம் நோக்கி வந்தனர். மதானியின் அரும்பெரும் முயற்சியால் உருவாக் கப்பட்ட அன்வராசேரி மதரஸா கல்விக்கூடத்தில் “மதானியின் ஆதரவாளர்கள் மதானியை கைது செய்ய விடமாட்டோம்“ என உணர்ச்சிகர முழக்கமிட்டு மதானியை அரணாக காவல் காத்து நின்றனர்.

மதானியைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறை கையைப் பிசைந்து நிற்கிறது. கேரள அரசிடம் இருந்து முறை யான அறிவிப்போ அனுமதியோ பெறாமல் கர்நாடக காவல் துறையினர் கேரளாவில் நுழைந் துள்ளதாக கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இருப் பினும் மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறைக்கு கேரள காவல்துறை தேவையான ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கேரள உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே மதானியின் இருப்பிடம் நோக்கிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் கர்நாடக காவல்துறையினர் தவித்தனர்.

இதைப்போன்றுதான் 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக மதானியைக் கைது செய்ய தமிழகக் காவல்துறையினர் வந்த போது மதானியைக் கைது செய்ய விடமாட்டோம் என அவர் மீது பாசம் கொண்ட மக்கள் ஆவேசமாக எதிர்த்தனர். சட்டத்துக்கு உரிய மரியாதையை நாம் வழங்க வேண்டும். நீதித்துறையை, காவல்துறையை நாம் என்றுமே அவமதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என தனது ஆதரவாளர்களை ஆறுதல் படுத் திவிட்டு தமிழகக் காவல் துறை யினருடன் கோவைக்கு பயணமானார்.

என் மீது போடப்பட்ட வழக்குகள், என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் பொய் என நிரூபித்து குற்றமற்றவனாக வருவேன் கலங்க வேண்டாம் என சென்ற மவ்லவி அப்துன் நாசர் மதானி நிரபராதியாக, குற்றமற்றவராக அவர் தனது அன்புக்குரியவர்களிடம் வாக்களித்தது போலவே வெளியே வந்தார்.

என்ன கொடுமை? அவர் சிறையில் அடைக்கப்பட்டு குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டு வெளியே வர ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 33 வயதில் சிறை சென்றவர் 42 வயதில் சிறை மீண்டார். பல்வேறு நோய்கள் என்ற கூடுதல் போனஸுடன் அவர் விடுதலையானார்.

விடுதலையாகி முழுக்க மூன்று ஆண்டுகளைக் கூட அவர் தம் குடும்பத்தினருடன், ஆதரவாளர் களுடன் மகிழ்ச்சியுடன் கழிக்கவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு சிறைவாசம் அவரை இருட்டில் தள்ளத் தயாராகிறது.

மதானியை வளைத்துப் பிடிக்க கேரளா வந்த கர்நாடக காவல்துறையினர் 13, 14ஆம் தேதிகளில் கேரளா சுற்றுப்பயணம் செய்த இந்தியக் குடியரசுத் தலைவர் தனது பயணத்தை முடித்த பின் கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என காத்திருந்ததாக தகவல்கள் வெளி வந்தன.

எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இருந்த மதானி மீதான வழக்கு விவரம் அவர் மீதான அனுதாப அலை கேரள மாநில முஸ்லிம்களிடம் மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சமூகங்களிலும் உள்ள நடுநிலையாளர்களின் மத்தியில் வீசுவதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

யாரையாவது பிடிப்பது, பின்னர் அவர்மூலம் யாரை சிக்கவைப்பது என ஆலோசிப்பது குறிப்பாக தங்களது வெறுப்புப் பட்டியலில் இருக்கும் ஒருவரை சதியில் சிக்கவைப்பது என திட்டமிடும் தீய சக்திகள் மதானியின் விஷயத்தில் விளையாடி இருக்கக்கூடும் என கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூகநல ஆர்வலர் தங்கச்சன் குறிப்பிடுகிறார்.

மதானியின் பெயரைக் குறிப்பிடு என உடல்ரீதியாகத் துன்புறுத்தி வாக்குமூலம் வாங்கியிருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப் பின் முக்கியப் பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மதானி மீதான குற்றச்சாட்டுக்கு மதானியின் பதில் என்ன என்பதை கேரள ஊடகங்கள் உள்பட எந்த வெகுஜன ஊடகங்களும் கண்டுகொள்ளவே இல்லை என கண்டனம் தெரிவிக் கின்றனர் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியினர்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் மத்திய குற்றவியல் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே நாசர் மதானி தரப்பினரின் வாத மாகும்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 482ன்படி மவ்லவி அப்துன் நாசர் மதானிக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றப் பத்திரிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், நம்ப முடியாத, நடைபெறவே சாத்தியம் இல்லாத ஒரு சதித்திட்டத்தை தீட்டியதாகக் குற்றம்சாட்டி ஒரு பொய்வழக்கை குற்றவியல் பிரிவு பதிவு செய்துள்ளது என மதானியின் வழக்கறிஞர் உஸ்மான் தெரிவிக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உள்ள லகாரி எஸ்டேட்டில் மதானி ரகசிய திட்டம் தீட்டியதாக கர்நாடக காவல்துறை குற்றம்சாட்டிய விவகாரத்தில் மதானியின் பங்கு என்ன என்பது குறித்து உண்மை நிலையைக் கண்டறிய கேரள காவல்துறையினரையும் ஒருதரப் பாக சேர்க்க வேண்டும் என மதானியின் சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

2007ஆம் ஆண்டு கோவை யிலிருந்து மதானி விடுதலையான பிறகு மதானி எங்கெல்லாம் சென்றார் என்பது கேரள காவல் துறைக்குத் தெரியும். எனவே அதுகுறித்த விவரங்களை கேரள காவல்துறை சேகரிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளாக மதானிக்கு கேரள அரசு விசேஷ பாதுகாப்பை வழங்கியுள்ளது. மதானிக்கு கேரள அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக நீதிமன்றத்துக்கு புரியவைப்பதற் காக கேரள அரசையும் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என மதானி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத செயல்பாட்டு தடைச் சட்டத்தி ன்படி ஒருவருக்கு எதிராக வழக் குத் தொடரும் முன்னர் அந்த மனிதருக்கு எதிராக ஆதாரங்கள் உண்டா என தொடர்புடைய அதிகாரி தீவிரமாகப் புலனாய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால் மதானியின் விஷயத்தில் இந்த நெறிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக குமுறுகிறார்கள் மதானியின் ஆதரவாளர்கள்.

மதானியை கைது செய்வதை தாமதப்படுத்துமாறும், ரமலான் மாதம் முடிந்த பிறகு மதானி கைது நடவடிக்கையை வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள மாநில அனைத்து முஸ்லிம் தலைவர்களும் முதலமைச்சர் அச்சுதானந்தனை சந்தித்து வேண்டுகோள் விடுத்துனர். அதற்கு அச்சுதானந்தன், ‘‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’’ என பதில் கூறினார்.

வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை

வழக்குகளுக்கும் நீதிமன்றத்திற்கும் நடுவே மதானி வாழ்க்கை

ஹபிபா பாலன்

மதானி எப்போதுமே தலைப்புச் செய்திகளில் இடம் பெறுபவர் என்பதால் கேரள அரசியல் தலைவர்களுக்கு மதானி என்றால் எப்போதுமே வேப்பங்காய்தான்.

கோவை குண்டு வெடிப்பில் செய்யாத குற்றத்திற்காக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து மூன்றாண்டு முடிவதற்குள் மீண்டும் ஒரு சிறை வாசம் அவரை வா வா என அழைக்கிறது.

ஒரு மார்க்க அறிஞராக உலகத்தில் அறியப்பட்ட அப்துன் நாசர் மதானி அரசியல் தலைவராக தலித் மற்றும் ஒடுக் கப்பட்டோருக்காக அரசியல் அரங்கில் அவர்களின் உரிமைக் காக போராட ஆரம்பித்ததுதான் அங்குள்ள பழம்பெருச்சாளி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக வாய்த்தது என கூறுகிறார்கள்.

அப்துன்நாசர் மதானி 1965 ஆம் ஆண்டு அப்துஸ்ஸமத் மாஸ்டரின் மகனாகப் பிறந்தார். அடிப்படை கல்வி கற்றபின் கொல்லத்தில் உள்ள மதீனுல் உலூம் அரபிக் கல்லூரியில் மார்க்கக் கல்வி கற்றார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜாமியா நூரிய்யாவில் கல்வி கற்று முடித்த அவர் மார்க்கப் பிரச்சாரகராக மாறினார். அவரது உரை தென்பகுதி கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்றாக பாராட்டைப் பெற்றது. அவரது உரையை கேட்ககொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் மக்கள் வெள்ளம் அணிதிரண்டது.

இதே காலகட்டத்தில் மதானி தனது தந்தையுடன் அன்வரா சேரி அநாதை நிலையத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். 1987&ல் உருவாக்கப் பட்ட அன்வராசேரி அநாதை நிலையத்தில் இலவச மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் வழங்கப்பட்டதால் அன்வரா சேரி புகழ்பெறத் தொடங்கியது. மதானியின் அனல் பறக்கும் பேச்சால் அவருக்கு என தனி யான கூட்டம் ஒன்று உருவா கியது. 1990ம் ஆண்டு இஸ்லா மிய சேவா சங்கம் என்ற அமைப் பினை தொடங்கினார்.

பாசிஸ ஆர்.எஸ்.எஸ்&க்கு தனது இஸ்லாமிய சேவா சங்கம்(ஐ.எஸ்.எஸ்) அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்கும் எனக் கூறினார்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட 1992ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதை அடுத்து மதானியின் ஐ.எஸ்.எஸ்&யையும் மத்திய அரசு தடை செய்தது. அதனால் தளர்ந்து விடவில்லை. 1993ம் ஆண்டு கேரள மக்கள் ஜனநாயகக்கட்சி என்ற அரசியல் கட்சியை மதானி தொடங்கினார். ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இயக்கம் இது என பிரகடனப்படுத்தினார். பல தேர்தல்களில் இடது சாரிகளுக்காக மதானியின் மக்கள் ஜனநாயகக் கட்சி பாடுபட்டது. மதானியின் சொந்த மாவட்டமான கொல்லம் பகுதியில் மட்டும் மதானியின் செல்வாக்கு இருந்தது. முஸ்லிம்களின் வாக்கு களை கேரளாவில் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் அதிக அளவில் சேகரித்து வந்ததால் முஸ்லிம்& தலித்&பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் என்ற முழக்கத்தினை மதானி முன்னெடுத்தார்.

1998&ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டார். முதலில் கேரள காவல்துறை அவரை கைது செய்து ஒருநாள் வைத்திருந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படை த்தது. கோவையிலும் சேலத்திலும் 9 ஆண்டுகள் மதானி சிறையில் அடைக்கப்பட்டார். முதல் நான்கு ஆண்டுகாலம் மதானி தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

மதானி உள்ளே தள்ளப்பட்டதால் ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் லீக் அமைப்புகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டன.

மதானியை விடுவிக்க தொடக்க முதலே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் குரல் கொடுத் தது. சமூக நல அமைப்புகளின் தீவிர முயற்சியால் கேரள அரசியலில் மதானி விவகாரம் பலத்த அதிர் வினை ஏற்படுத்தியது.

மதானியை மனிதாபிமான முறையில் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என கேரள சட்டமன்றம் ஏகமனதாக தீர்மா னத்தை நிறைவேற்றியது.

கேரள அரசியல் தலைவர்கள் கோவை சிறையில் இருந்த மதானி யை சந்தித்தனர்.

மதானியை விடுவித்தால் கேரளாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறிய காங்கிரஸும் ஒரு வழியாக மதானி ஆதரவு நிலைக்கு திரும்பியது.

ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி குற்றமற் றவராக கோவை குண்டுவெடிப்பு வழக்குகளிலிருந்து விடுவிக்கப் பட்டார். 40 வயதிலேயே தளர்ந்த உடல் நலத்துடன் வெறும் 40 கிலோ எடையுடன் மதானி விடுதலை யானார்.

விடுதலையான மதானி பெரும் மக்கள் திரளுக்கிடையே வரவேற்கப் பட்டார். மாநில அமைச்சர்கள் அங்கே வீற்றிருந்தனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மதானியை வரவேற்கும் விழாவில் பங்கேற்றனர். வரவேற்பு விழாக் கள் கேரள மாநிலம் எங்கும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. முஸ்லிம் லீக் செல்வாக்கு நிறைந்த கோழிக்கோடு பொன்னானி பகுதிகளில் கூட மதானி மிகுந்த மக்கள் வெள்ளத்துக்கிடையே வரவேற்கப்பட்டார்.

மதானியிடம் முன்பு இருந்த அனல்பொறி பேச்சை கூடியிருந்த மக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் மதானியின் மனப்பாங்கை சிறை வாழ்க்கை மாற்றியிருந்தது. கடந்த காலங்களில் தான் பேசிய வேக மான பேச்சுக்களுக்காக மதானி பகிரங்க மன்னிப்புக் கேட்டார். முஸ்லிம் & தலித் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என்றும் முழங்கினார். உடல் பரிசோதனை மற்றும் சிகிக்சைக்கு பின் தீவிர அரசியலில் மதானி இறங்கினார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதர வாக களம் இறங்கினார் மதானி. இந்த தேர்தலில் மதானியின் வேட்பாளராக பொன்னானி தொகுதியில் போட்டியிட்ட ஹூஸைன் ரன்ததானி முஸ்லிம் லீகின் ஈ.டி.முஹம்மது பஷீரிடம் பெருவாரியான வாக்குகளின் வித்தியாசத்தில் தோற்றார். இடது சாரிகளுக்கு நாடாளுமன் றத்தில் ஏற்பட்ட தோல்வி முதன் முதலாக நாடாளுமன்ற தேர்த லில் போட்டியிட்ட மதானி கட்சியையும் தொற்றியது. மதானி&மார்க்சிஸ்ட்டுகள் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

தற்போது மதானி மீது பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மதானியை கைதுசெய்ய கர்நாடக காவல்துறை முயற்சிகள் மேற்கொண்டுவரும் சூழலில் பிணை கோரி மதானி பெங்களூரு நீதிமன்றத்துக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கும் மனு செய்தார். பெங்களூரு நீதிமன் றத்தில் மதானி மீதான ஜாமீன் மனு உடனடியாக நிராகரிக்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் மதானி மீதான ஜாமீன் மனுவை ஆகஸ்ட் மூன்றாம் தேதி தள்ளுபடி செய்தது.

மதானியை கைது செய்ய தீவிரம் காட்டும் அளவுக்கு மாலேகான், சம்ஜவ்தா, அஜ்மீர் குண்டுவெடிப்பில் குற்றம்சாட் டப்படும் ஹிந்துத்துவ பெரும்புள் ளிகள் மீது பாயாதது ஏன் என்ற கேள்வி இந்தியர்கள் அனைவர் உள்ளங்களில் எழுகிறது.

முக்கிய குற்றவாளியா?

மதானி பெங்களூரு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என சன்.டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. மதானி குற்றம் சாட்டப்படுபவர் பட்டியலில் 31 வதாக சேர்க்கப் பட்டிருக்கிறார். 31-&வது நபர் எப்படி முக்கிய குற்றவாளியாவார்-? இது பொருத்தமற்ற ஒரு சொல் என்பது சராசரி அறிவுள்ளவனுக்கு கூட தெரியும். ஆனாலும் பெங்களூரு குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளி மதானி என்றே தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வரும் அறிவு சூன்யங் களை என்னவென்று சொல்வது?

நசீர் கைது செய்யப்பட்ட ஐந்து மாதத்திற்கு பிறகு குற்றப்பத்திரிகை

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண் டும் என்பார்கள். ஆனால் பொய் கூட இங்கு பொருத்தமாக சொல்லப்படவில்லை.

பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட நசீர் மதானியின் பெயரை குறிப்பிட்டது எப்போது தெரி யுமா? கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களுக்குப்பிறகு தான். இது நசீர் தானாக அளித்த வாக்கு மூலமா? வற்புறுத்தி, துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலமா? என்ற சந்தேகம் நடுநிலையாளர்களின் உள்ளங்களில் கனன்று எழுகிறது.

மதானி பற்றி கூறவில்லை - நசீர்

மதானிக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக காவல் துறையினரிடம் கூறியதாக சொல் லப்பட்ட வாக்குமூலத்தை கொச்சி நீதிமன்றத்தில் நசீர் மறுத்தார். பெங்களூரு குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு இருப்பதாக தான் கூறவே இல்லை என்றார். இது எந்த வெகுஜன ஊடகத்திலும் வரவில்லை. கர்நாடக காவல்து றையின் குற்றச்சாட்டிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத் தவில்லை. இதுவும் நடுநிலை யாளர்கள் மனதில் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

மன்னிப்பு வழங்கியவருக்கு இந்த நிலையா?

1990&ம் ஆண்டு மதானியை கொல்ல ஆர்.எஸ்.எஸ். பயங் கரவாதிகள் சதி செய்தனர். மதானி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடந்ததில் மதானி தனது வலது காலை இழந்தார். ஆனால் அவர்களையும் மதானி மன்னித்து விட்டார். கோவை வழக்கில் இருந்து நிரபராதியாக வெளிவந்த மதானி தன்னை கொல்ல முயற்சித்தவர்களை மன்னிப்பதாக அறிவித்தார்.

இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!

இந்தியாவில் முதல் முஸ்லிம் தலைமை தேர்தல் ஆணையர்!

E-mail Print PDF

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஷஹாபுத்தீன் யாகூப் குரைஷி குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை தேர்தல் ஆணையர் ஆகியுள்ளார்.

63 வயதான இவர் டெல்லியைச் சேர்ந்தவர். 1947 ஜூலை 11ஆம் தேதி பிறந்த இவர் 1971 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேறினார்.

வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்ற குரைஷி பாரசீகம், அரபி, ஜெர்மன் மொழிகளில் சிறந்த புலமை மிகுந்தவர்.

மக்கள் தொகை, பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதுக்கு வந்த இளம் தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சினைகளை தீவிர ஆய்வு செய்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் பல்வேறு சமூக நல அமைப்புகளோடு சிறந்த தொண்ட £ற்றியவர். தொடர்பியல் மற்றும் சமூக சந்தை என்ற பிரிவில் இவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.
புற்றீசல் போல் பெருகிவரும் புதிய கட்சிகள் குறித்து கவலை தெரிவித்த குரைஷி “அரை மணி நேரத்திற்கு ஒரு கட்சி தொடங்கப்படுகிறது. சில கட்சிக ளுக்கு தலைமையகமே இல்லை. சில கட்சிகள் டீக்கடைகளில் இயங்கு வதாக குறிப்பிட்டவர், இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும்“ என்றார்.

விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்

விரைவில் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு - மத்திய அரசு தீவிரம்

E-mail Print PDF

இந்திய அளவில் முதன் முறையாக இட ஒதுக் கீட்டு விழிப்புணர்வை அனைத்து இயக்கங்களுக்கும் வழங்கிய தமுமுகவிற்கு வெற்றி.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைப் போர் அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் தொடுக்கும் காலகட்டம் இது.

முஸ்லிம்களை இன ஒதுக்கல் முறையில் காலங்காலமாக ஒடுக்கி வந்த ஆதிக்க சக்திகள் முஸ்லிம்கள் பெற்றுவந்த உரிமை களை படிப்படியாக பறித்துக் கொண்டது. இந்த நாட்டின் கெடுதல்களுக்கு எல்லாம் முக்கிய காரணியான சங்பரிவார் சதி சக்திகள் ஒருங்கிணைந்த இந்திய நாட்டை துண்டாடியதில் முக்கிய பங்கு வகித்தன.

ஆனால் நாட்டு பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் தான் என்ற துடைக்க முடியாத களங்கத்தையும் முஸ்லிம்கள் மீது சுமத்தினர்.

இந்த கறை மிகுந்த களங்கத்தை சுமக்க முடியாமல் நலிந்து கிடந்த இந்த சமுதாயம் அரசியல் அரங்கில் தங்களுக்கென ஓர் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.

கல்வி, சமூகம், வேலைவாய்ப்பு என ஒவ்வொரு அம்சத்திலும் பின்தங்கியிருந்த இந்த சமூகம் நத்தை தன் கூட்டுக்குள் ஒடுங்கிக் கொள்வதைப் போல சுருக்கிக் கொண்டது.

இடையில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகள் வேறு இந்த இடிதாங்கி சமுதாயத்தின் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டது.

இத்தனையும் சதிக்கூட்டம் செய்ததற்கு முக்கியக் காரணம், எக்காரணம் கொண்டும் முஸ்லிம் கள் சமூக அளவில் எழுச்சியுடன் எழுந்து நின்றுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

கொடு மதியாளர்கள் கனவு கண்டதைப் போல அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் எழுச்சிப் பெறும் வழியைக் காணவில்லை.

கண்ணிருந்தும் குருடராக, வாயிரு ந்தும் ஊமையராய் சோர் ந்திருந்த அகில இந்திய முஸ்லிம் சமுதாய த்திற்கு பாலைவனத்தில் ஒரு சோலைவனமாக வாய்த்தது தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையாக இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை முன் முழங்கியது தமுமுக. தமுமுக ஒவ்வொரு அசைவும், இலக்கும் இலட்சியமும் இந்திய விடுதலைக்கு முன்பாக இழந்த இடஒதுக்கீட்டு உரிமையை மீட்க வேண்டும் என்பதே.

அதற்காக தமுமுக கண்ட களங்கள் எண்ணற்றவை. பிரச்சார வியூகங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. தமிழ கம் மற்றும் புதுவையின் பட்டி தொட்டியெங்கும் இழந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்க களமி றங்கியது தமுமுக. அகில இந்திய அளவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு பெற தலைநகர் டெல் லியில் களம்கான முடிவு செய்தது. 2007 ஆம் ஆண்டு மார்ச் 7&ல் டெல்லியில் கூடிய மாபெரும் பேரணி இரண்டு இலக்குகளை வென்றெடுத்தது.

ஒன்று அகில இந்திய ஆட்சி யாளர்களை சிறுபான்மையின ருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற சிந்தனைப் பொறிகளை தட்டி விட்டு இட ஒதுக்கீட்டினை நிறை வேற் றுவதற்கான அடுத்த கட்டத்தை நகர்வதற்கான ஒரு முன் முயற்சியை தமுமுக&வின் டெல்லி பேரணி ஏற்படுத்தியது. இரண்டாவதாக தமுமுக அடைந்த இலக்கு வென்றெடுத்த இலட்சியம் என்னவெனில் இட ஒதுக்கீடு என்ற ஜீவாதார உரிமை குறித்து அகில இந்திய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

நாடாளுமன்றம் நோக்கி நடந்த பேரணியிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிலும் பங்கேற்காத, உரையாற்றாத பிரபலமான சமுதாய இயக்கங்களின் தலைவர்களே இல் லை என்ற அளவுக்கு அனைத்து தலைவர்களும் பங்கேற்றனர். சமூக நீதிப் போராட்டத்தில் தமுமுக இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்குகிறது என பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.

தமுமுகவின் போராட்ட வியூகத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள இயக்கங்கள் இட ஒதுக்கீட்டு போராட்டங்களை முன்னெடுத்தன. அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான ஓபிசி பிரிவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் இறங்கியிருப்பதாகவும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச் சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருக்கிறார்.

நாங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். காங் கிரஸ் அதன் செயல்திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்த முடிவெடுத் துள்ளதாகவும் காங்கிரஸ் நிச்சயம் இதனை செயல்படுத்தும் இதில் சிறிதும் சந்தேகம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம் களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இதை செயலாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன.

மண்டல் கமிஷன் அறிக்கை யில் கூறியுள்ளவாறு பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட் டில் 8.4 சதவீதம் சிறுபான் மையி னர் விரிவாக் கத்திற்காக உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் வரையரை செய்யப்பட்டுள்ள மொத்த 27 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 8.4 சதவீதம் சிறுபான்மையினருக்கு வரையறுக்கப்பட்டதில் 6 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.

மிஸ்ரா ஆணையம் சிறுபான் மையினருக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அல்லது ஓபிசி என்ற இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து பகிர்ந்து அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது. இதில் இரண்டாவதை நாங்கள் தேர்ந்தெடுத்தோம் என் றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக கடந்த மே மாதம் முஸ்லிம் தலைவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பில் ஐக்கிய முற் போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு இன்னும் 6 மாதங்களில் செயல்படுத் தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.

மிஸ்ரா ஆணையம் பரிந்துரை யின்படி முஸ்லிம்களுக்கு 10 சதவீ தம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே த.மு.மு.கவின் கோரிக்கையாகும். இடஒதுக்கீடு விவ காரத்தில் இதுவரை மவுனம் சாதித்து வந்த மத்திய அரசு இணக்கமான நடவடிக்கை நோக்கி பயணிப்பதை பாராட்டும் அதேவேளையில் முஸ் லிம்களுக்கு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் படி 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த தேசத்தில் காலகா லமாக ஒடுக்கப்பட்டுவரும் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவு என்ற நோயை நீதியரசர் ராஜிந்தர் சச்சார் கண்டறிந்தார் என்றால் அதற்கான தீர்வினை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா வின் பரிந்துரைகள் அடித்துக் கூறிய து. 10 சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை

காஷ்மீர் :படுகொலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கவலை

ஹபீபா பாலன்

காஷ்மீரில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியோடு துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துவிட்டது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் 9 அப்பாவிகள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை பலியான 9 பேர்களில் அஃப்ரோஸ் என்ற 17 வயது இளம் பெண்ணும் ஒரு வர்.

நூற்றுக்கணக்கானவர்கள் படு காயம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகர், பாரமுல்லா, சோழ, நைதா ஹால், கண்டர்பால், ஃபரிஸ் டாபால், பர்சோ, கட்லா பால், ஹன்னாபல், பிங்லனா, சிங்ஃபியாரா மற்றும் அனந்தனாக் பகுதிகள் இன் னும் ஊரடங்கு உத்தரவால் அடக்கப் பட்டுள்ளன.

காஷ்மீரின் நிலை குறித்து அகில உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்கள் பெரும் கவலை யடைந்துள்ளனர்.

அடிப்படை மனித உரிமைகள் அங்கு பேணப்படுகிறதா? என்ற கவலை மனித உரிமை ஆர்வலர் களிடையே எழுந்துள்ளது. சுதந்தி ரமாக வாழும் உரிமை, முறையான நீதி விசாரணை கேட்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மீறப்படுவதாக The Universal Declaration Of Human Rights மற்றும் Human Rights Convenants போன்றவை வலியுறுத்திய அனைத்து கோட்பாடுகளும் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் புறம் தள்ளப்பட்டிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு Medicinis Sams Frontieres என்ற பிரெஞ்சு பத்திரிகை, காஷ்மீர் பெண்களின் நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது.
2007 ஆம் ஆண்டு வரை 9 ஆயிரத்து 800 பெண்கள் பாலியல்வன்முறைக்கு இலக்கானதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. 22 ஆயிரத்து 100 பெண்கள் இளம் விதவைகளாக உள்ளனர். இலங் கையிலும், செசன்யாவிலும் பாதிக்கப்பட்டவர்களை விட, அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காஷ்மீர் பெண்களே. இதில் ஏராளமான வண்புனர்வு சம்பவங்கள் வெளி உலகுக்கு பாலியல் வன்கொடுமை ஐக்கிய நாடுகள் சபையின் 1994 வது வெளியீட்டில் (E/CN4/1995/42 PP 63 - 69) இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 1990 லிருந்து 1996 வரை மட்டும் 882 பெண்களை பாதுகாப்பு படையினர் வன்கொடுமை செய்து ள்ளனர் என்ற வேதனைச் செய்தி கள் வெளிவந்துள்ளன.

இன்னமும் அடையாளம் காணப் படாத புதை குழிகள் ஏராளமாய் காஷ்மீரில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சுட்டுக் கொல் லப்பட்ட வெளிநாட்டுத் தீவிர வாதிகளின் புதை குழிகள் என இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவையனைத்தும் அப்பாவி காஷ்மீர் கிராமவாசிகள் என்ற தகவல்கள் வெளிவரத் தொடங் கியதும் இதுகுறித்து மனித நேயம் மிகுந்த பல பத்திரிகைகள் சர்வதேச பொது மன்னிப்பு சபை மற்றும், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவற்றுக்கு முறையீடுகளை அனுப்பத் தொடங்கினர்.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம் (The Association Of The Parents Of Disappeared Persons) APDP அமைப்பு கூற்றின்படி 1989 வரை 8 ஆயிரம் பேர் காணாமல் போனார்கள்.

முறையான நீதி விசாரணை செய்யப்பட வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

இதனிடையே காஷ்மீர் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கிமூன் தெரிவித் திருக்கிறார்.

இதுகுறித்து பான்கிமூனின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஷ்மீரில் நிகழ்ந்த 17 பேரின் படுகொலைகள் கவலையளிப்ப தாகவும் கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரில் நிலைமை கட்டுக் கடங்காமல் போவது கவலை அளிப்பதாகவும் பான்கிமூன் தெரி வித்திருக்கிறார்.

இதனிடையே காஷ்மீரில் நிலை மை கொந்தளிப்பில் தான் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். காஷ்மீரில் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை. தொடர் வேலை நிறுத்தங்களால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய சிதம்பரம், அரசு எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர்

நான்கு வாரமாக ஜும்ஆ தொழுகை நடைபெறாத ஸ்ரீநகர்

அபுஸாலிஹ்

E-mail Print PDF

நான்கு வாரமாக ஜம்மு காஷ்மீர் மாநில தலை நகரான ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மஸ்ஜிதில் தொழுகை நடை பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீநகர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அந்நகரை சுற்றியுள்ள முக்கிய பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெற அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது.

பள்ளிவாசல்களை நோக்கி செல்லும் சாலைகள் சி.ஆர்.பி.எஃப் காவல்துறையினரால் மூடி வைக்கப்பட்டிருப்பதாக ஏஜென்சி இந்தியா பிரஸ் கூறியிருக்கிறது.

ஆனால் காவல்துறை இதனை மறுத்திருக்கிறது. பள்ளிவாசல் பகுதிகளில் ராணுவம் நிலைநிறுத் தப்படவில்லை என காவல்துறை கண்காணிப்பாளர் ஷவுகத் ஹூஸைக் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு 100 மீட்டருக்கு இடையிலும் வாகனத்தடையை சி.ஆர்.பி.எப் காவல்துறையினர் ஏற்படுத்தியிருப்பதாக காஷ்மீர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஜம்முகாஷ்மீர் மக்களின் வழி பாட்டு உரிமை நான்காவது வார மாக மறுக்கப்பட்டிருக்கிறது இது தொடர்வது நல்லதல்ல என சமூகநல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Web Counter Code